இடுகைகள்

வேவர் பதிப்பகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜிம்பாவே மண்ணின் இலக்கியத்தை வாழ வைக்கும் வேவர் பதிப்பகத்திற்கு வயது 25!

படம்
  ஜிம்பாவேயின் கதைகளைச் சொல்லும் பதிப்பகம்! ஒரு நாவலை வாசிக்கிறீர்கள். அதன் எழுத்து நடை வசீகரமாக இருக்கிறது. உடனே எழுத்தாளரின் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புகிறீர்கள். ஆனால் உண்மையில், எழுத்தாளர் மையக்கருவை எழுதுகிறார்தான். ஆனால் அதை செம்மைப்படுத்துபவர் ஆசிரியர். ஆங்கிலத்தில் எடிட்டர். இவரை பெரிதாக யாரும் கவனப்படுத்துவது இல்லை. தமிழில் அப்படியான சிறப்பான எடிட்டர் என தமிழினி வசந்தகுமார் அவர்களைக் கூறுவார்கள். இது சற்று வெளியே தெரிந்த விஷயம் என்பதால் கூற முடிகிறது. நிறைய எடிட்டர்கள் தங்களை பெரிதாக வெளிப்படுத்திக்கொள்ளாமல் பதிப்பகங்களின் புத்தக அடுக்குகளில் இருக்கிறார்கள். இப்படியானவர்களை கௌரவப்படுத்த ஒரு விருது கூட இல்லை.  அப்படியானவர்களில் ஒருவர்தான் ஜிம்பாவே நாட்டில் வேவர் பிரஸ் பதிப்பகத்தை நடத்தும் ஐரின் ஸ்டான்டன். இவர், ஏற்கெனவே பதிப்பகத்துறையில்,  இயங்கிய அனுபவம் கொண்டவர். தனது கணவரை லண்டனில் உள்ள ஆப்பிரிக்கா சென்டரில் சந்தித்து பேசி, கரம் பிடித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஜிம்பாவே வந்து வேவர் பிரஸ்ஸை தொடங்கி நடத்தி வருகிறார்கள். அந்த பதிப்பகத்திற்கு இந்த ஆண்டு இ