இடுகைகள்

அரபு வசந்தம். இடது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தோற்றுப்போவதன் காரணம்! - அமைப்பு முறை இல்லாத மக்கள போராட்டம்

படம்
                  போராட்டத்தின் வீழ்ச்சி 2010 தொடங்கி 2020 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளை போராட்டத்தின் காலம் என்று கூறலாம் . அத்தனை போராட்டங்கள் நடைபெற்றன . இதற்கான விதை துனிசியாவில் விழுந்தது . அங்கு தொடங்கிய போராட்டம் அப்படியே அரபு நாடுகளுக்கும் பரவியது . இதற்கு சமூக வலைதளங்கள் முக்கியமான தளமாக அமைந்தன . குறிப்பாக ஃபேஸ்புக்கைக் கூறவேண்டும் . துருக்கி , உக்ரைன் , ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் நடந்த மக்களின் போராட்டங்கள் ஆட்சியாளர்களை என்ன செய்வதென தெரியாமல் பதைபதைக்க வைத்தன . சூடான் , ஈராக் , அல்ஜீரியா , ஆஸ்திரேலியா , ஃபிரான்ஸ் , இந்தோனேஷியா , லத்தீன் அமெரிக்கநாடுகள் , இந்தியா , லெபனான் , ஹைதி ஆகிய நாடுகள் போராட்டச் சுழலில் மாட்டின . மேற்சொன்ன பத்தாண்டுகளில் மக்கள் வீதிக்கு வந்து போராடினர் . போராடியவர்களுக்கு பிற மக்கள் ஆதரவு தெரிவித்தனர் . போராட்டங்களை உலகளவிலான ஊடகங்கள் பதிவு செய்து ஒளிபரப்பின . புகழ்பெற்ற நாளிதழ்களில் கட்டுரைகள் ஏராளமாக எழுதப்பட்டன . போராட்டங்கள் வெற்றிபெற்றன என்பது உண்மைதான் . ஆனால் , போராட்டக்காரர்கள் கோரிய விஷயங்கள் ஏதேனும் நிறைவேற