இடுகைகள்

படுக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செடிகளை பெட்ரூமில் வைத்து வளர்க்கலாமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி தாவரங்களை படுக்கையறையில் வைத்து வளர்க்கலாமா? எந்த தவறும் இல்லை. சிலர் இரவில் கார்பன் டை ஆக்சைடை செடிகள் வெளியேற்றும். இதனால் நமக்கு மூச்சு திணறல் ஏற்படும் என்பார்கள். ஆனால் அது எல்லாம் ஆதாரமில்லாத உளறல்கள் என ஒதுக்கிவிடுங்கள். மின்விளக்கை அணைத்து விட்டால் ஒளிச்சேர்க்கைக்கான விஷயம் செடியில் நடைபெறாது.அப்புறம் என்ன கவலை? முக்கியமாக உங்கள் தூக்கம் கெடாது. நன்றி - பிபிசி

படுக்கையில் படுத்தும் தூக்கம் வரவில்லையா?

படம்
giphy.com டாக்டர். எக்ஸ் படுக்கையில் படுக்கப்போகும்வரை தூக்கம் வருவது போலிருக்கிறது. ஆனால் பெட்டில் படுத்தால் தூக்கம் வருவதில்லை. ஏன்? காரணம் படுக்கையை நீங்கள் தூங்க மட்டும் பயன்படுத்துவதில்லை என்பதுதான். அதில் உட்கார்ந்து போனை நோண்டுவது, நெட்பிளிக்ஸ் தொடர்களை பார்ப்பது எல்லாம் செய்தால் எப்படி? முடிந்தவரை ஆறுமணிக்கு மேல் காஃபீன் பானங்களை குடிக்காதீர்கள். அவை மூளையிலுள்ள ஏராளமான சுரப்பிகளைத் தூண்டிவிட்டு நடுராத்திரியிலும் உங்களை கொக்கரக்கோ கோழியாக்கி விடும். நல்ல கம்பெனி படுக்கையைப் பயன்படுத்துங்கள். இது அடிப்படையானது. அதற்குமேல் ஏதாவது பிரச்னை என்றால் நீங்கள் உறுதியாக உளவியலாளரை அணுகியே ஆகவேண்டும். வயதாகும்போது தூக்கம் குறையும் என்பதால் அதற்கேற்ப உணவுப்பழக்கங்களை குடும்ப மருத்துவரை அணுகிப் பெறுவது நல்லது. கார்ல்மார்க்ஸின் நூலைக் கூட படிக்கலாம்.  த த்துவ நூல்களைப் படிக்கும்போது உங்கள் வாழ்நாளில் நீங்கள் தூங்கியிராதது போல அடித்து போட்டது போல தூங்க முடியும்.  ஆசானின் வெண்முரசு போன்ற நூல்களும் உதவும். நன்றி - மென்டல் ஃபிளாஸ்