கொத்தடிமை ஒழிப்புச்சட்டம் - 50 ஆவது ஆண்டு -2030இல் 70 சதவீதம் ஒழிக்கப்பட வாய்ப்பு
கொத்தடிமை ஒழிப்புச்சட்டம் - 50 ஆவது ஆண்டு
கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிற சூழலில் விரைவில் தமிழ்நாட்டில் தேர்தல் வரவிருக்கிறது. நாடே மூடநம்பிக்கையில் எது நடந்தாலும் ஆட்சித்தலைவரை ஏதும் சொல்லக்கூடாது என்ற பக்தியில் காலை நக்கிக்கொண்டிருக்கும் ஊடகங்கள் உள்ளன. தி இந்துவும் அப்படியான பத்திரிகைதான். தமிழ்நாடு முதலமைச்சரின் செய்தி அருகே, எல் முருகன் என்ற பட்டியலின பொறுக்கித் தின்னும் அமைச்சர் ஒருவரின் செய்தி இடம்பெறுகிறது. இதை அனுமதிக்கிறவர்கள் மனநிலை எப்படியானது என புரிந்துகொள்ளலாம். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு மனநிலைதான். இருந்தாலும் தி இந்துவில் ஆச்சரியப்படுத்தும் சில கட்டுரைகளை எழுதும் அதிசய பத்திரிகையாளர்களும் உண்டு. அப்படி ஒருவர் எழுதிய கட்டுரையின் அடிப்படைச் சாரம் மட்டும் இங்கே...
தமிழ்நாட்டில் கொத்தடிமை முறை இப்போதும் இருக்கிறது. இந்த முறை இப்போது கல்குவாரி, செங்கல் சூளை மட்டும் இல்லாமல் ஜவுளிக்கடை, சூப்பர் மார்க்கெட், பல்லடுக்கு வணிக மால்கள், கட்டுமான இடங்கள், ஹோட்டல்கள், ரிசார்டுகள் என பரந்துள்ளது. எனவே, கொத்தடிமையாக உள்ளவர்களை கண்டுபிடித்து மீட்பது எளிதல்ல. கொத்தடிமை முறையை ஒருவர் செயல்படுத்த கடனைப் பயன்படுத்துகிறார்கள். சிலர், முந்தைய தலைமுறையில் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வார்கள். அவர்களை காப்பாற்றி மேலே கொண்டு சேர்க்கும் பொறுப்பு தேவையே இல்லாமல் மூத்த மகன் மீது விழும். அவர் அதை ஏற்று, தனது மனைவி, குழந்தையோடு கடன் வாங்கி கல்யாணம்செய்து கொடுத்து வரதட்சணை கொடுத்து கடன் வலையில் வீழ்கிறார். இப்படித்தான் கல் குவாரி, செங்கல் சூளையில் கொத்தடிமை முறை நடைமுறையாக மாறுகிறது.
இதில் பாதிக்கப்படுபவர்கள் பார்ப்பனர்கள் அல்லது இடைநிலை சாதியினர் அல்ல. கல்வி அறிவு இல்லாத பட்டியலினத்தவர்கள், பழங்குடிகள்தான். இந்தியாவில் பெரிய தொழிலதிபர்கள் கடனை கட்டுவதில்லை. பேரியக்க கட்சியோ, மதவாத கட்சியோ அவர்களுக்காக கமிஷனைக் கொடுத்துவிட்டால் போதும். ஆனால், கடன் வாங்கிய ஏழைகள் அதை நேர்மையாக கட்ட நினைக்கிறார்கள். அங்குதான் அவர்களுக்கு புதைகுழியை வெட்டுகிறார்கள் செங்கல் சூளை முதலாளிகள். கடன், வட்டி என இரண்டையும் வைத்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் செங்கல் சூளை வேலையில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்களுக்கு வெளியுலக தொடர்பே இல்லாதது போல பார்த்துக்கொள்கிறார்கள். அப்போதுதானே ஒருவரை முழுமையாக வேலைக்காக சக்கையாக பிழிய முடியும். இந்த வகையில், தமிழ்நாட்டு அரசோடு சில தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பணிபுரிந்து கொத்தடிமைகளை மீட்க உதவுகின்றன.
கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் 1976ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட காலம் தொடங்கி சென்ற ஆண்டு வரை 2,95,795 நபர்கள் கொத்தடிமை முறையில் இருந்து அரசால் மீட்கப்பட்டுள்ளனர். இப்படி மீட்கப்படுபவருக்கு தொடக்கத்தில் 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவை மறுவாழ்வுக்காக வழங்கப்படுகிறது. சிறியளவு நிலமும் கூட தருகிறார்கள். கொத்தடிமை சட்டத்திற்கான வழக்கு நடைபெற்று முடிவு வந்தால் இறுதி இழப்பீடாக 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை பணம் வழங்கப்படுகிறது. உலகளவில் பார்த்தால் கொத்தடிமை முறையில் இருந்து 49.6 மில்லியன் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று தி குளோபல் ஸ்லாவரி இன்டெக்ஸ் 2023 அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. 2024-25 காலகட்டத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 120 கொத்தடிமைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிய அரசின் சட்டம் உண்மையில் நிறைவேற்றப்படுகிறதா என்றால், நடைமுறையில் கிடையாது என்றுதான் கூறவேண்டும்.இங்குள்ள காவல்துறைக்கோ, தொழிலாளர் நலத்துறைக்கோ சரியான ஒருங்கிணைப்பும், இணைந்து பணியாற்றும் எண்ணமோ சீராக இருப்பதில்லை. கொத்தடிமைக்கு உள்ளான நபர்களுக்கு வழக்கு பதியும் போது கூட என்ன மாதிரியான சட்டத்தில் பதியவேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவதில்லை. இதனால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இறுதி இழப்பீடு தள்ளிப்போகிறது. தள்ளிப்போகிறது என்றால் பல பத்தாண்டுகள். முழுக்க பார்ப்பனர்களைக் கொண்ட நீதிமன்றங்களும் பட்டியலின மக்கள்தான் கொத்தடிமை ஆகிறார்கள் என்பதால் பெரிதாக கண்டுகொள்வதில்லை போல. சதுர்வேதி, திவாரி என்றால் துடித்துக்கொண்டு நீதி கேட்பவர்கள் குமார், சண்முகம், வால்மீகி, பீம்ராவ் என்றால் கள்ள மௌனத்துக்கு சென்று விடுகிறார்கள்.
கொத்தடிமை முறையில் இருந்து வெளியே வந்தவர்களுக்கு அடுத்த வேலையும் கிடைப்பதில்லை.கிராமத்தில் உள்ளவர்கள் கொத்தடிமை முறையில் இருப்பவர்கள், தங்களுக்கு வேலை கொடுத்து முதலாளியை போலீசில் பிடித்துக் கொடுத்துவிட்டதாக அறியாமையில் கருதி புதிய வேலைவாய்ப்புகளை தர மறுக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு வேறு ஏதாவது ஒரு வேலை தேவைப்படுகிறது. குறிப்பாக சுயதொழில். இதை தமிழ்நாடு அரசோடு இணைந்து சில தனியார் தொண்டு நிறுவனங்கள் செய்கின்றன என்பது மகிழ்ச்சியான செய்தி.சில இடங்களில் பள்ளி செல்லும் குழந்தைகளை கடத்திச் சென்று ஈடுபடுத்துவதும் கூட நடைபெறுகிறது. ஒருமுறை அவர்கள், கல்வியைக் கற்கும் இளமைப் பருவத்தை இழந்து மனம் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டால் திரும்ப அவர்களை சமூக வாழ்க்கைக்கு கொண்டு வர ஏராளமான நேரம் செலவழித்து உளவியல் சிகிச்சைகளை வழங்க வேண்டும். இப்படி கொத்தடிமை ஆன சிறுவர்களுக்கு தொழில் வாய்ப்பை அமைத்துக் கொடுப்பதும் சவாலாக உள்ளது. கல்வி பயில அனுப்பினாலும் அவர்கள் தங்களுக்கு அந்த இடம் பொருத்தமில்லாமல் இருப்பதை மனதால் உணர்ந்துகொள்கிறார்கள்.
கொத்தடிமை வழக்குகளும் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலினத்தவர்கள் என்பதால் சினிமா வழக்குகளை, சதுர்வேதி என சொந்த இனத்துக்காரனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி பெற்றுத்தருவது போன்ற முயற்சிகள் நடைபெறுவதில்லை. பார்ப்பன பனியா நீதிமன்றங்கள் சாதாரண மக்களுக்கு என்றைக்கும் யோசித்ததில்லை. இனியும் யோசிக்கப்போவதில்லை என்பதன் அடையாளம்தான், கொத்தடிமை வழக்குகள் பல பத்தாண்டுகளுக்கு மேலாக நீள்வது. இதில் காவல்துறையினருக்கு பயிற்சி கொடுத்து வழக்குகளை எப்படி எந்த பிரிவில் பதிவு செய்தால் கால தாமதம் இன்றி இழப்பீடு கிடைக்கும் என்பதை அரசு விளக்கவேண்டும்.இல்லையென்றால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைக்க அவர்கள் அடுத்த தலைமுறை வரை காத்திருக்க வேண்டும்.
இன்றுவரை கொத்தடிமை வழக்கில் வழக்கு தொடுத்து இழப்பீட்டிற்காக மக்கள் காத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறது, நடைமுறைக்கு வந்துவிடும், மக்கள் சமமாக நடத்தப்படுவார்கள் என்று சிலர் கனவு காண்கிறார்களே அதற்கு ஒப்பான காத்திருத்தல் இது. 2047 ஆம் ஆண்டு புதிய இந்தியா பிறந்துவிடும் என நாட்டின் ஆட்சித்தலைவர் பிதற்றிக்கொண்டிருக்கிறார். 2030ஆம் ஆண்டிற்குள் கொத்தடிமை முறை 70 சதவீதம் ஒழிக்கப்பட்டுவிடும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரேனும் எதார்த்தமாக பேசுகிறார்கள். அதுவரையில் மகிழ்ச்சி. ஒரு காலத்தில் மதவாத கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்போது பட்டியலினத்தவர்கள், சிறுபான்மையினர் கொத்தடிமைகளா, இரண்டாம், மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படும்போது கொத்தடிமை சட்டமே இருக்காது. அப்புறம் நாம் இழப்பீடு, கொத்தடிமை ஒழிப்பு பற்றியெல்லாம் கவலைப்படவேண்டியதில்லை. இப்படியான எதிர்கால வாய்ப்பும் நமக்கு உள்ளது.
original article
shakles,barely broken
meghna.m the hindu feb8,2026
#bonded labour #bonded labour abolition act #act turn 50 #modern slavery # tamilnadu #rescue #delay #justice #implementation
#கொத்தடிமை முறை ஒழிப்பு #கொத்தடிமை முறை ஒழிப்புச்சட்டத்திற்கு வயது 50 #கல்வி #வறுமை #கடன் வலை #வாழ்க்கை #பழங்குடியினர் #அறியாமை #இழப்பீடு #நடைமுறை #வழக்கு #தொழில் #சுரண்டல்
புகைப்படங்கள் - அவுட்லுக் இந்தியா.காம், இந்தியாஸ்பென்ட்.காம்


கருத்துகள்
கருத்துரையிடுக