இடுகைகள்

விக்கி கௌசல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலியின் துரோகத்தை சந்தித்து அதை திருப்பி அடிக்கும் ஜூனியர் டான்ஸ் மாஸ்டர்! கோவிந்தா நாம் மேரா...

படம்
  கோவிந்தா நாம் மேரா - விக்கி கௌசல், பூமி, கியாரா கோவிந்தா நாம் மேரா -இந்தி  கோவிந்தா நாம் மேரா இந்தி விக்கி கௌசல், கியாரா அத்வானி, பூமி பட்னாகர், ஷாயாஜி ஷிண்டே கோவிந்தா, சினிமாவில் டான்ஸ் மாஸ்டராகும் நோக்கத்தில் ஜூனியர் டான்சராக வேலை செய்கிறார். அந்த குழுவில் அவருக்கு காதலி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் சுக்கு. இருவரது நோக்கமும் ஒன்றுதான். தனியாக டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்து பணம் சம்பாதித்து கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள், கோவிந்தாவின் மனைவி. அடுத்து அவன் தங்கியுள்ள வீடு. சண்டை பயிற்சியாளரான அப்பாவுக்கும், ஜூனியர் டான்ஸ் மாஸ்டரான அம்மாவுக்கும் பிறந்த பிள்ளை கோவிந்தா. இரண்டாவது திருமணம். சட்டரீதியாக பதிவு செய்யப்படாத திருமணம். இதனால் முதல் மனைவி, அவரின் பிள்ளை இருவரும் சேர்ந்து   வழக்கு போட்டு, கோவிந்தாவின் வீட்டை வாங்க நினைக்கிறார்கள். அந்த வீடு, கோவிந்தாவின் அப்பா   மனைவிக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்தது. கல்யாணம் செய்த மனைவி ‘’இரண்டு கோடி பணம் கொடுத்தால், உன்னை விவாகரத்து செய்கிறேன். நான் உன்னை கல்யாணம் செய்ய டௌரி கொடுத்தேன் இல்லையா அதைக் கொட

”நடிப்பை அனுபவித்து நடிக்கிறேன்”

படம்
The Week புலவாமா தாக்குதல், உரி படத்தினை மேலும் பேச வைத்திருக்கிறது. ஹவ் இஸ் ஜோஸ் என்ற வசனத்தை பேசி சில மாணவர்கள் போலீசிலும் கைதாகி உள்ளனர். அந்தளவு படம், பலரையும் சென்றடைந்திருக்கிறது. சரியான டைமிங் என்பதோடு விக்கி கௌசலின் அபார நடிப்பும் முக்கியக் காரணம். மாசான் டூ உரி பயணத்தை சொல்லுங்கள்? என்மேல் நம்பிக்கை வைத்து இயக்குநர்களால் இப்பயணம் சாத்தியமானது. நான் நடிகனாக திட்டமிட்டு திரைத்துறைக்கு வரவில்லை. 2015 ஆம் ஆண்டு மாசான் படம் வெளியானபோது அடுத்தடுத்த ஆண்டுகளில் என்ன படம் செய்வீர்கள்? என்று கேட்டால் திகைத்து போயிருப்பேன். அந்தளவு திட்டமிட்டு எதையும் செய்யவில்லை அவ்வளவுதான். இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் உரி என்று உங்கள் படம்தான்.... 2018 ஆம் ஆண்டு எனக்கு மகிழ்ச்சி கொடுத்த ஆண்டு. உரி படம் நன்றாக ஓடியது எனக்கு தன்னம்பிக்கையை அளித்துள்ளது. என்னை விமர்சிப்பவர்கள், ரசிகர்கள், இயக்குநர்கள் ஆகியோரின்  உதவியின்றி இந்த வெற்றி சாத்தியமில்லை என்பதே உண்மை. உரிக்கு எப்படி தயாரானீர்கள்? கடின உழைப்பு இதற்கு தேவைப்பட்டது. ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு மேலாக நடிகர்கள், தொழில்நுட்ப