இடுகைகள்

சமகால அறிவுஜீவிகள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமகால அறிவுஜீவிகள் யார்?

படம்
இந்தியாவில் அந்தப்பக்கம், இந்தப்பக்கம் என்றில்லாமல் கருத்தை உறுதியாக பேசுவர்களுக்கு தட்டுப்பாடு உண்டு. அனைத்து விஷயங்களிலும் நிபுணத்துவம் அல்லது எழுதும் ஆர்வமேனும் இருந்தால் அவர்களை இதில் கருத்தில் கொள்ளலாம். அப்படிப்பட்டவர்கள்தான் கீழேயுள்ள ஆளுமைகள். ராமச்சந்திரகுஹா(1958) அரசியல், வரலாறு, சூழலியல், கிரிக்கெட் என அத்தனை திசைகளிலும் எழுதி தள்ளும் பெங்களூரைச் சேர்ந்த ஆளுமை. இந்த ஆண்டு காந்தி பற்றி ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதியுள்ள நூலை வெளியிட்டுள்ளார். கலிஃபோர்னியா, ஸ்டான்ஃபோர்டு ஆகிய பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். குடிமைத்தேர்வுகளுக்கு படிப்பவர்களை மிஞ்சுமளவு நூல்களை வாசிப்பதில் ராமச்சந்திர குஹா சமர்த்தான ஆள். இந்திய வரலாற்றை எழுதும்போது இடது, வலது சாராமல் அவர்களின் குறைகளை கூறி வாசகர்களின் மனப்போக்கிற்கு முடிவை விட்டுவிடும் தாராளவாத எழுத்தாளர். டெலிகிராப் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் பத்தி எழுதியுள்ளார். சாகித்திய அகாதமி, பத்மபூஷன்(2009) ஆகிய விருதுகளை வென்றுள்ளார் குஹா. பிரதாப்பானு மேத்தா மத்திய கொள்கை ஆராய்ச்சி அமைப்பில் பணிபு