இடுகைகள்

பருமன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரபணு தடுத்தாலும் உடல் எடையைக் குறைக்க முடியும்!

படம்
  இயற்கையாகவே சிலருக்கு உடல் பழனி படிக்கட்டு போல கட்டாக இருக்கும். திருமணமானபிறகு, செல்வச்செழிப்பில் பூரித்தால் உடல் சற்று பூசினாற்போல மாறி குனுக் மினுக் என மாறுவார்கள். ஆனால் சிலர் வெளியேற்றம் நாவலில் வரும் குற்றாலிங்கம் போல வேளைக்கு இருபத்தைந்து இட்லிகளை உள்ளே இறக்கினாலும் உடலில் வேறுபாடே தெரியாது. பரம ரோகியாக இருந்தாலும்கூட யோகி போல வெளியே தெரிவார்கள். அத்தனைக்கும் காரணம் என்ன? மரபணுக்கள்தான்.  சிலருக்கு அடிப்படையான உடற்பயிற்சி செய்து நாற்றம் பிடித்த சோயா சங்சை ஊறவைத்து தின்றாலே உடல், கீரை சாப்பிட்ட பாப்பாய் போல கட்டாக அமைந்துவிடும். ஆனால் இன்னும் சிலர் என்னென்னமோ உடற்பயிற்சி செய்தாலும் கூட உடலில் சுண்டைக்காய் அளவு மாறுதல் மட்டுமே தெரியும். இதற்கெல்லாம் காரணம் நாம் செய்த வினை அம்புட்டு பலமாக இருக்குதோ என நினைத்து கவலை கொள்ள வேண்டியதில்லை. மரபணு காரணமாக சில பிரச்னைகள் வந்தாலும் கூட நம்மால் முடிந்த பிரயத்தனங்களை செய்தால் போதும் உடல் எடை குறைவதோடு உடல் கட்டமைப்பும் பலம் பெறும்.  சோத்துக்கு பஞ்சமில்லாதவர்கள்தான் உடற்பயிற்சி பற்றி யோசிக்கவேண்டும். உடல் எடை என்றாலே அவர் கண்டிப்பாக பசி, பட

எடை குறைப்பிற்காக சாப்பிடும் உணவைக் குறைக்கவேண்டுமா? - மிஸ்டர் ரோனி

படம்
  எடை குறைப்பு கேள்விகள் எடை குறைப்புக்காக குறைந்தளவு உணவை சாப்பிட்டாலும் போதுமா? ஒருவரின் உடல் அமைப்பு, அவர் செய்யும் வேலை பொறுத்து சாப்பிடும் உணவின் அளவு மாறுபடும். வேலையைப் பொறுத்து ஒருவர் தனது   சாப்பிடும் இடைவேளையை அமைத்துக்கொள்ளலாம். மூன்று வேளை உணவு என்பது கட்டாயமல்ல. பசித்தபிறகு சாப்பிடுவது நல்லது. உடலுக்கு உணவு என்பது அடிப்படையானது. எனவே, உடலின் பசித் தேவையைப் பொறுத்து உணவை சாப்பிடுவது நல்லது. ஊட்டச்சத்தான முறையில் உணவை அமைத்துக்கொள்வது சிறந்தது. பல்வேறு வகை சத்துகளை கொண்டதாக உணவை அமைத்துக்கொண்டால் வயிறு நிறைந்துவிட்ட உணவு ஏற்படும். உடல் எடை குறைப்பதில், உடல் உறுப்புகளுக்கான அவசிய சத்துகள் கிடைப்பதை மறந்துவிடக்கூடாது.   கவலை, மகிழ்ச்சி ஆகிய உணர்வுகள் மேலோங்கும்போது, உணவு சாப்பிடுவதை முடிந்தளவு குறைத்துக்கொள்வது முக்கியம். இவையே உடல் பருமனை ஊக்குவிக்கிறது. எடை குறைவை உறுதிப்படுத்துவது எப்படி? தினசரி காலையில் எடை மெஷின் மீது ஏறி நின்று எடை குறைந்ததா என்று பார்க்க அவசியமில்லை. வாரத்திற்கு ஒருமுறை எடையை சோதித்தால் போதுமானது. தினசரி செய்யும் உடற்பயிற்சி, நீர், எடுத்துக்