இடுகைகள்

இரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மலைப்பாம்புக்கு கிடைக்கும் ஆக்சிஜன்! - இரையைக் கொல்லும் நேரத்தில் நுரையீரலுக்கு கிடைக்கும் பிராணவாயு!

படம்
  மலைப்பாம்புக்கு கிடைக்கும் ஆக்சிஜன்! மலைப்பாம்பு இரையை சாப்பிடும் முறையை அறிந்திருப்பீர்கள். இரையை முழுக்க சுற்றி அதன் எலும்புகளை நொறுக்கி மெல்ல அதனைக் கொன்று உணவாக்கிக்கொள்கிறது. இப்படிக் கொல்லும்போது, இரையின் மீது அழுத்தம் செலுத்துவதோடு, தனது நுரையீரலுக்கும் அழுத்தம் கொடுக்கிறது. மலைப்பாம்பு  நுரையீரல் அழுத்தப்படும் நிலையில் எப்படி சுவாசிக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறியவில்லை.  மலைப்பாம்பு இரையை விழுங்கும்போது மார்பு, வயிற்றுக்கு இடையில் உள்ள உதரவிதான தசையைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக நீளமான மார்பு பகுதியில் உள்ள தசைகளை சுவாசிக்க பயன்படுத்துகிறது. இரையைக் கொல்லும் செயல்பாட்டில் மலைப்பாம்பின் உடலிலுள்ள இத்தசைகள் இயங்க முடியுமா என ஆராய்ச்சியாளர்களுக்கு சந்தேகம் இருந்தது. தற்போது இதுபற்றிய ஆராய்ச்சி அறிக்கையை ப்ரௌன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஜான் கபானோ கண்டறிந்துள்ளார்.  மலைப்பாம்பு இரையை விழுங்கும்போது சுவாசிப்பதற்கான காற்றை மார்புத் தசைகளில் இறுக்கமற்றதை தனியாக அசைத்து காற்றை உள்ளிழுக்கின்றன. இப்படி இழுக்கும் காற்று இரையை சுற்றி வளைக்கும் உடல் பகுதிகளுக்கும் சீராக செல்கின்றன. “பாம்

பிடித்த பிடியை விடாத உப்புநீர் முதலைகள்!

படம்
 உப்புநீர் முதலைகள் அறிவியல் பெயர் குரோகோடைலஸ் போரோசஸ்  ஆயுள் 70 ஆண்டுகள் இவைதான் உலகிலேயே ஊர்வனவற்றில் பெரிய உயிரினம் 23 அடி தூரத்திற்கு வளரும் உப்புநீர் முதலை என பெயரிட்டு அழைத்தாலும் உப்புநீர், நன்னீர் என இரண்டிலுமே வாழும் இயல்பு கொண்டவை.  நீருக்கு அடியில் ஒருமணி நேரம் இருக்கும் திறன் கொண்டது.  ஆஸ்திரேலியாவின் வடக்குப்பகுதி, நியூகினியா தீவுகள், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் உப்புநீர் முதலைகளை எளிதாக பார்க்கலாம்.  முதலைகள் 64 முதல் 68 பற்களைக் கொண்டிருக்கும். இவை கீழே விழுந்தாலும் எளிதில் முளைத்துவிடும் தன்மை கொண்டவை. வலுவான தாடைகளைக் கொண்டவை. ஒருமுறை இரையைக் கடித்தால் அப்பிடியை எளிதில் விடாது.  source Time for kids 

மூக்கில் வெள்ளை நிறம் கொண்ட நாமக்கோழி!

படம்
  நாமக்கோழி ( அறிவியல் பெயர்  ஃபுலிக்கா அட்ரா (Fulica atra)  இனம்  F. atra குடும்பம் ராலிடே(Rallidae) சிறப்பு அம்சங்கள்  கருப்பும் சாம்பலும் கலந்த நிறத்தில் உடல் இருக்கும். கரையில் உள்ள மரங்களில் கூடுகட்டி வாழும். நீரில் நீந்திக்கொண்டே புழு, பூச்சிகளை உண்ணும். நெற்றி தொடங்கி மூக்குவரையில் உள்ள வெண்மை நிறம்தான் நாமக்கோழி என பெயர் வரக் காரணம். உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால் தனது குஞ்சுகளை தானே கொன்று விடும் இயல்பு கொண்டது. கால் அமைப்பு, வலை போன்ற அமைப்பில் வேறுபட்டு அமைந்துள்ளது.  எங்கு பார்க்கலாம் புல்வெளி, சதுப்புநிலங்கள், கடல்பகுதிகள் பரவலாக வாழும் நாடுகள் ஆப்கானிஸ்தான், அல்பேனியா, சீனா, பின்லாந்து ஐயுசிஎன் பட்டியல் அழியும் நிலையில் இல்லாதவை (LC 3.1) ஆயுள்  7 ஆண்டுகள் மொத்த எண்ணிக்கை 53,00,000-65,00,000 எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  முட்டைகளின் எண்ணிக்கை  10 எழுப்பும் ஒலி குக்... குக் .. கிக் .. கிக் .. கீ  https://www.dinamalar.com/news_detail.asp?id=365376 https://www.iucnredlist.org/species/22692913/154269531 படம் - இபேர்ட்