மூக்கில் வெள்ளை நிறம் கொண்ட நாமக்கோழி!

 










நாமக்கோழி (

அறிவியல் பெயர்  ஃபுலிக்கா அட்ரா (Fulica atra) 

இனம்  F. atra

குடும்பம் ராலிடே(Rallidae)

சிறப்பு அம்சங்கள் 

கருப்பும் சாம்பலும் கலந்த நிறத்தில் உடல் இருக்கும். கரையில் உள்ள மரங்களில் கூடுகட்டி வாழும். நீரில் நீந்திக்கொண்டே புழு, பூச்சிகளை உண்ணும். நெற்றி தொடங்கி மூக்குவரையில் உள்ள வெண்மை நிறம்தான் நாமக்கோழி என பெயர் வரக் காரணம். உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால் தனது குஞ்சுகளை தானே கொன்று விடும் இயல்பு கொண்டது. கால் அமைப்பு, வலை போன்ற அமைப்பில் வேறுபட்டு அமைந்துள்ளது. 

எங்கு பார்க்கலாம்

புல்வெளி, சதுப்புநிலங்கள், கடல்பகுதிகள்

பரவலாக வாழும் நாடுகள்

ஆப்கானிஸ்தான், அல்பேனியா, சீனா, பின்லாந்து

ஐயுசிஎன் பட்டியல்

அழியும் நிலையில் இல்லாதவை (LC 3.1)

ஆயுள் 

7 ஆண்டுகள்

மொத்த எண்ணிக்கை

53,00,000-65,00,000 எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

முட்டைகளின் எண்ணிக்கை 

10

எழுப்பும் ஒலி

குக்... குக் .. கிக் .. கிக் .. கீ 



https://www.dinamalar.com/news_detail.asp?id=365376

https://www.iucnredlist.org/species/22692913/154269531

படம் - இபேர்ட்


கருத்துகள்