பல்வேறு சோதனைகளுக்குப் பயன்படும் அறிவியல் மாதிரிகள்!
டிஸ்க்ரிப்டிவ் மாடல்களுக்கு எடுத்துக்காட்டு |
அறிவியல் மாதிரிகள்
அறிவியல் துறைகளில் பேசப்படும் சிக்கலான கருத்துகளை பிறருக்கு விளக்க உதவுபவை, அறிவியல் மாதிரிகள் (Science models) ஆகும். இவற்றில் ஐந்து வகைகள் உண்டு. அவை,
ரெபிரசன்டேஷனல் மாடல்ஸ் (Representational models)
உடலிலுள்ள என்சைம்கள் எப்படி செயல்படுகின்றன, வேதிப்பொருட்கள் எப்படி சுரக்கின்றன என்பதை எளிமையாக விளக்க ரெபிரசன்டேஷனல் மாடல்கள் உதவுகின்றன.
ஸ்பாஷியல் மாடல்ஸ் (Spatial models)
கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகிய தனிமங்களின் அணுக்களை முப்பரிமாண வடிவில் பார்த்து செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள, ஸ்பாஷியல் மாடல்கள் உதவுகின்றன.
டிஸ்க்ரிப்டிவ் மாடல்ஸ் (Descriptive models)
உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சி நிலைகளை விளக்கப் பயன்படும் வடிவம். இதில் படம், வார்த்தைகள் என இரண்டுமே பயன்படுகிறது.
கம்ப்யூடேஷனல் மாடல்ஸ் (Computational models)
மாறிவரும் பூமியின் தட்பவெப்பநிலையைப் புரிந்துகொள்ள பயன்படும் மாதிரி வடிவம். இதை உருவாக்க கணினி உதவுகிறது. எ.டு. குறிப்பிட்ட இடத்தின் வெப்பநிலை, வெப்பநிலை பற்றிய முன்கூட்டிய கணிப்பு.
மேத்தமேட்டிகல் மாடல்ஸ் (Mathematical models)
குறிப்பிட்ட காலகட்டத்தில், குறிப்பிட்ட நிலப்பகுதியில் அதிகரித்துள்ள நுண்ணுயிரிகளின் அளவு பற்றி கணித முறையில் கணித்து உருவாக்கப்படும் மாதிரி வடிவம்.
கருத்துகள்
கருத்துரையிடுக