அரசு உதவியின் மக்களே அமைக்கும் காற்றாலை!
மக்களே சேர்ந்து அமைக்கும் காற்றாலை!
இங்கிலாந்தின் பிரிஸ்டல் அருகில் உள்ள மக்கள் குழுவினர், தாங்களே நிதி திரட்டி காற்றாலை அமைக்க முயன்றுவருகின்றனர். லாரன்ஸ் வெஸ்டன் என்ற பகுதியிலுள்ள மக்கள்தான் தாங்களே நிதி திரட்டி 150 மீட்டரில் காற்றாலையை அமைக்க முடிவெடுத்துள்ளனர். காற்றாலைக்கு அரசின் எந்த உதவியும் பெறவில்லை. 4.2 மெகாவாட் திறனில் காற்றாலையை அமைக்கவுள்ளனர். இதில் 3 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள். மிஞ்சும் மின்சாரத்தை பிறருக்கு விற்க முடிவெடுத்துள்ளனர்.
“மக்களே சேர்ந்து அமைக்கும் காற்றாலை திட்டம் இது. இதனை வெற்றிகரமாக செய்து முடிக்கும்போது மக்களின் கரிம எரிபொருட்களால் ஏற்படும் வறுமை அளவு குறையும். ” என்றார் லாரன்ஸ் வெஸ்டன் பகுதியில் வாழ்பவரான மார்க் பெப்பர்.
இப்பகுதி மக்கள் இப்படி தூய ஆற்றல் தரும் காற்றாலை திட்டத்தை உருவாக்க அரசை அணுகியுள்ளனர். ஆனால் பல்வேறு அனுமதி பெறுவது என திட்டம் நடைமுறைக்கு வருவது காலதாமதமாகிவந்திருக்கிறது. எனவே, மக்களே நிதி திரட்டி செய்துவிடலாம் என களமிறங்கிவிட்டனர். வணிகரீதியாக அமைக்கப்படும் காற்றாலைகளை விட மக்கள் குழுவாக இணைந்து நிறுவும் காற்றாலை அதிக பயன்களை வழங்குவதாக, இங்கிலாந்து அரசின் ஆராய்ச்சி அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றன. வீடுகளை குளிர்காலத்தில் வெப்பமூட்ட இயலாதவர்களுக்கு, காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் உதவும். த்ரைவ் எனர்ஜி, பிரிஸ்டல் நகர கௌன்சில், மேற்கு இங்கிலாந்து ஆணையம் ஆகிய அமைப்புகள் மக்களின் காற்றாலைத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளன. “உயரமான காற்றாலை என்பது மக்களுக்கு உதவுவதற்காகத்தான். அரசின் மானியம் இல்லாத நிலையில் எங்களுக்கு வேறு வழியில்லை. குறைந்த உயரத்தில் காற்றாலை என்பது பொருளாதார வாய்ப்புகளைக் குறைக்கும்” என்றார் காற்றாலை திட்ட மேலாளரான டேவிட் டட்ஜி.
Blowing up a storm community to build england tallest turbine
tom wall
the guardian 16.4.2022
https://m.thelocalreport.in/bristol-community-secures-funding-to-build-tallest-wind-turbine-in-england/
https://www.theguardian.com/environment/2022/apr/16/bristol-community-secures-funding-to-build-tallest-wind-turbine-in-england#:~:text=A%20community%20group%20in%20one,locally%20owned%20wind%20power%20generation.
கருத்துகள்
கருத்துரையிடுக