இடுகைகள்

உலகம்-ஆப்பிரிக்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆப்பிரிக்கா வளர சீனா உதவுகிறதா?

படம்
ஆப்பிரிக்காவில் கோமாளிமேடை ! 2015 ஆம் ஆண்டு சீனா கென்யாவுக்குள் நுழைந்தது . பல்வேறு சுரங்க தொழிற்சாலைகளைத் தொடங்கி அமெரிக்கா மாடலில் நாட்டை சுரண்டியது . அரசு சும்மாயிருக்கலாம் , கலைஞர்கள் சும்மாயிருப்பார்களா ? மைக்கேல் சோய் என்ற கென்ய கலைஞர் , நைரோபியிலுள்ள ஸ்டூடியோவில் சீனா லவ்ஸ் ஆப்ரிக்கா என்ற தலைப்பில் படங்களாக வரைந்தார் . இன்றும் சீனர்கள் வெறுப்புடனும் விரும்பி பார்க்கும் அளவு பகடி வழியும் அணிவரிசை படங்கள் அவை . கென்யாவுக்கு மருத்துவமனைகள் , சாலைகள் அமைத்து தருகிறது சீனா என சீனாவின் அதிபர் ஜின்பிங் கூறினாலும் நாட்டின் நிதர்சனத்தை உணர்ந்த கலைஞர்கள் அதனை ஏற்கத்தயாராக இல்லை . Ken Saro-Wiwa, Ayi Kwei Armah, Wole Soyinka, Chinua Achebe,Ngugi Wa Thiong’o ஆகிய எழுத்தாளர்கள் முந்தைய தலைமுறை என்றால் மைக்கேல் சோய் இத்தலைமுறையினருக்கு தம் கார்ட்டூன் , கேரிகேச்சர் படங்கள் மூலம் விழிப்புணர்வு ஊட்டுகிறார்கள் . நைஜீரியாவின் தி அதர் நியூஸ் எனும் அரசியல் பகடி நிகழ்ச்சி அந்நாட்டில் பிரபலமான ஒன்று . " கதையில் வருவதைப்போல அரசன் உடை அணியாமல் நிர்வாணமாக இருப்பதை நாங்கள்