ஆப்பிரிக்கா வளர சீனா உதவுகிறதா?



Image result for china africa cartoon



ஆப்பிரிக்காவில் கோமாளிமேடை!

Image result for china africa cartoon


2015 ஆம் ஆண்டு சீனா கென்யாவுக்குள் நுழைந்தது. பல்வேறு சுரங்க தொழிற்சாலைகளைத் தொடங்கி அமெரிக்கா மாடலில் நாட்டை சுரண்டியது. அரசு சும்மாயிருக்கலாம், கலைஞர்கள் சும்மாயிருப்பார்களா? மைக்கேல் சோய் என்ற கென்ய கலைஞர், நைரோபியிலுள்ள ஸ்டூடியோவில் சீனா லவ்ஸ் ஆப்ரிக்கா என்ற தலைப்பில் படங்களாக வரைந்தார். இன்றும் சீனர்கள் வெறுப்புடனும் விரும்பி பார்க்கும் அளவு பகடி வழியும் அணிவரிசை படங்கள் அவை.

கென்யாவுக்கு மருத்துவமனைகள், சாலைகள் அமைத்து தருகிறது சீனா என சீனாவின் அதிபர் ஜின்பிங் கூறினாலும் நாட்டின் நிதர்சனத்தை உணர்ந்த கலைஞர்கள் அதனை ஏற்கத்தயாராக இல்லை. Ken Saro-Wiwa, Ayi Kwei Armah, Wole Soyinka, Chinua Achebe,Ngugi Wa Thiong’o ஆகிய எழுத்தாளர்கள் முந்தைய தலைமுறை என்றால் மைக்கேல் சோய் இத்தலைமுறையினருக்கு தம் கார்ட்டூன், கேரிகேச்சர் படங்கள் மூலம் விழிப்புணர்வு ஊட்டுகிறார்கள். நைஜீரியாவின் தி அதர் நியூஸ் எனும் அரசியல் பகடி நிகழ்ச்சி அந்நாட்டில் பிரபலமான ஒன்று. "கதையில் வருவதைப்போல அரசன் உடை அணியாமல் நிர்வாணமாக இருப்பதை நாங்கள் அப்பட்டமாக கூறுகிறோம்" என்கிறார் அரசியல் பகடிகளுக்கான விழாக்களின் ஒருங்கிணைப்பாளரான ஆஸ் அனெக். ஆப்பிரிக்கா, கானா உள்ளிட்ட நாடுகளிலும் ஓவியர்கள் தொடர்ச்சியாக அரசியல் பகடிகளுக்கான சித்திரங்களை வரைந்து வருகிறார்கள்.