வானிலையைக் கணிக்கும் இயலஸ்!






காற்றை கணிக்கும் இயலஸ்!

ஐரோப்பிய விண்வெளி் மையம்(Esa), பூமியின் பரப்பில் காற்றை கணிக்கும் புற ஊதா லேசர் தொழில்நுட்பம் கொண்ட செயற்கைக்கோளை அமைக்க முடிவு செய்தபோது ஆராய்ச்சியாளர்களே அதனை நம்பவில்லை. 2002 ஆம் ஆண்டு தொடங்கிய திட்டம் பதினாறு ஆண்டுகளைக் கடந்து தற்போது முழுமை பெறும் கட்டத்தை எட்டியுள்ளதுபுற ஊதா லேசர் எனும் தொழில்நுட்பத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், திட்டம் பல டெட்லைன்களை தாண்டிவர காரணமாகிவிட்டது. "திட்டத்தில் பலருக்கும் நம்பிக்கையில்லைதான். ஆனால் நாங்கள் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை" என்கிறார் இத்திட்டத்தின் கண்காணிப்பு திட்ட இயக்குநர் ஜோசெஃப் அஸ்பாச்சர்.

பூமிக்கு மேலே 320 கி.மீ உயரத்தில் காற்றின் மூலக்கூறுகளை லேசர் அமைப்பு ஆராய்ந்து தகவல்களை துல்லியமாக அனுப்பும் திட்டமிது. கடல்நீரின் தன்மையை அனிமோமீட்டர் மூலம் ஆராய்ந்து காற்றுசூழலை தற்போது அளவிட்டு வருவது இனி மாறும். இயலஸ் மூலம் ட்ரோடோஸ்பியர் அடுக்கிலிருந்து ஸ்ட்ராடோஸ்பியர் அடுக்குவரையிலான மாற்றங்களை துல்லியமாக பதிவு செய்யமுடியும். வரும் ஆகஸ்ட் 21 அன்று வேகா ராக்கெட்டில் விண்வெளியில் செலுத்தப்படவிருக்கிறது, இயலஸ்.