அமெரிக்காவுக்கு சரி நிகர் மாநிலம் எது தெரியுமா?







மத்தியப்பிரதேசம் கிரேட் அகெய்ன்!

இன்னும் ஐந்தே ஆண்டுகளில் மத்தியப்பிரதேச நகரங்கள் அமெரிக்க நகரங்களின் வளர்ச்சியையும் மிஞ்சிவிடும் என பேசியுள்ளார் மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சௌகான். ஆனால் வரும் நவம்பர் -டிசம்பரில் ம.பி தேர்தல் தொடங்கவிருக்கிறதே என்பதுதான் மக்களின் கேள்வி.


மத்தியப்பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் அரசு விழாவில் பேசிய சௌகான், "அமெரிக்க நகரங்களைப்போலவே சுத்தமாகவும் அழகாகவும் அட்வான்சாகவும் ம.பி மாநில நகரங்களை மாற்றி ஏழைகளுக்கு உதவுவதே கடவுளுக்கு செய்யும் சேவை" என நெகிழ்ச்சியடைந்துள்ளார் முதல்வர். கடந்தாண்டு அக்டோபரில் இந்திய வணிக கூட்டமைப்பு அழைப்பின்பேரில் அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு சௌகான் சென்றார். அங்குள்ள 92 சதவிகித சாலைகள் படுமோசம் என்றவர், .பி சாலைகள் இதைவிட சூப்பர் என துணிச்சலாக பேசி அமெரிக்காவையே அயரவைத்தவர்தான் நமது சௌகான். முதல்வரின் க்ளீன் நகரங்கள் ஆசையால் ம.பியின் நகரமேலாண்மைக்கான பட்ஜெட் 807 கோடியிலிருந்து 11 ஆயிரத்து 559 கோடியாக எகிறியுள்ளது.