தேர்தல் பிரசாரம் செய்ய ஃபேஸ்புக்குக்கு தடை!
தேர்தல் பிரசாரத்துக்கு
தடை!
தேர்தலுக்கு இரு
நாட்களுக்கு முன்பு தேர்தல் விளம்பரங்களை ஃபேஸ்புக்கிலும் தடைசெய்ய தேர்தல் ஆணையம்
யோசித்து வருகிறது.
செக்ஷன் 126(1951) சட்டப்படி அரசியல் பிரசாரங்களை 48 மணிநேரத்திற்கு முன்னதாக
தடைசெய்ய அரசுக்கு உரிமை உண்டு. தேர்தல் விளம்பரங்கள் தொடர்பான
புகார்களை தெரிவிக்கவும் புதிய பட்டன்களை அமைக்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளது.
இதற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிக்கும் பயனர்களின் எண்ணிக்கையும்
7 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான விதிமீறல்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் ட்விட்டர்
மற்றும் யூட்யூப் ஆகிய இணையதளங்களுடன் ஒப்பந்தம் செய்ய தீர்மானித்துள்ளது.
2
ஹஜ்பயணிகளில் பெண்கள்
அதிகம்!
சவுதி அரேபியாவிலுள்ள
மெக்காவுககு புனிதபயணம் செய்யும் பயணிகளில் இம்முறை பெண்களுக்கு 47 சதவிகிதம்
இட ஒதுக்கீடு அளித்துள்ளது இந்திய அரசு.
கடந்தாண்டுவரை
கணவருடன் செல்லும் பெண்களுக்கு மட்டுமே ஹஜ் பயண அனுமதி உண்டு என்ற விதி இந்தாண்டு தளர்த்தப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட குழுவாகவும்,45 வயதுக்கும் மேற்பட்டவராக இருந்தால் அவர்களுக்கு ஹஜ் பயண அனுமதியை அரசு வழங்குகிறது.
ஆண் உறவினர்களோடு பெண்கள் பயணிக்க சவுதி அரசு முன்னமே அனுமதி வழங்கியிருந்ததை
இந்திய அரசு தற்போது பின்பற்றவிருக்கிறது. "இவ்வாண்டில்
1 லட்சத்து 75 ஆயிரத்து 25 இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள். இதில்
47 சதவிகிதம் பெண்கள்" என தகவல் கூறுகிறார்
சிறுபான்மைத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி. கடந்த பத்தாண்டுகளில்
பெண் பயணிகளின் எண்ணிக்கை 45 சதவிகிதமாக இருந்தது. தற்போது இரண்டு சதவிகிதம் அதிகரித்துள்ளது.
குழந்தைகளை மீட்கும்
ஆப்!
வறுமை, குழந்தைதொழிலாளர்,
விபசாரம் ஆகியவற்றுக்காக குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்ச்சியாக அதிகரித்து
வருகிறது. இதனைத் தடுக்க வணிகத்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு ரீயூனைட்
எனும் ஆப்பை டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தோராயமாக இந்தியாவில்
தினசரி
180 குழந்தைகள் காணாமல் போவதாக ஹஃப்பிங்டன்போஸ்ட் பத்திரிகை தகவல் தெரிவிக்கிறது.
பச்பன் பச்சோ அந்தோலன் அமைப்புடன் கேப்ஜெமினி கைகோர்த்து குழந்தைகளை
கண்டுபிடிக்கும் இந்த ஆப்பை உருவாக்கியுள்ளனர். "காணமல்
போன குழந்தைகள் வெறும் புள்ளிவிவரங்களல்ல; அவர்களின் பெற்றோருக்குத்தான்
தொலைந்த குழந்தையின் வேதனை புரியும்"
என்கிறார் தன்னார்வ நிறுனவரான கைலாஷ் சத்யார்த்தி. தொலைந்த குழந்தைகளின் புகைப்படங்களை ஆப்பில் ஏற்றி அமேசான் வெப் சர்வீஸ் மூலம்
தேடமுடியும். இப்புகைப்படங்களை போனின் நினைவகத்தில் சேமிக்க முடியாது.
ஆப்பிலிருந்து வெளியேறும்போது புகைப்படங்கள் தானாகவே அழிந்துவிடுமாம்.
டெல்லி போலீஸ் இந்த ஆப் மூலம் மட்டும் 3 ஆயிரம்
குழந்தைகளை மீட்டுள்ளனர் என்பது நம்பிக்கையளிக்கிறது.