புதிய டெக் பொருட்களை வாங்க ரெடியா?







மார்க்கெட்டுக்கு புதுசு!



Sony RX100 VI
காம்பேக்ட்டான அழகான கேமரா அப்படியென்றால் விலையும் சுருக்கெனத்தானே இருக்கும். 20.1 எம்.பி கேமரா, 24எஃப்பிஎஸ், 4K வீடியோ என அனைத்தும் காசுக்கேற்ற கச்சிதம். இதுவரை இல்லாத அளவு க்ளோஸ் ஜூம் இக்கேமராவின் ஸ்பெஷல்.



Atom 4G Rugged Smartphone


ஆண்ட்ராய்டு 8.1 ஓஎஸ்ஸில் இயங்கும் சிறியரக போன் இது. கொரில்லா கிளாஸ், கைரேகை ஸ்கேனர், இரண்டு சிம்கள் என வாட்டர்ப்ரூப் வசதியுடன் கிடைக்கிறது. வாட்டர் ப்ரூப் என்பதற்காக நீரில் தூக்கி எறிந்துவிடாதீர்கள். சிறியது என்பதால் தேடிக் கண்டுபிடிப்பதும் கஷ்டம்.



Chris - digital assistant for drivers


ட்ரைவர்களுக்கான வழிகாட்டி. வண்டி ஓட்டும்போது போன் பயன்படுத்தமுடியாது எனவே கிறிஸ் எனும் டிஜிட்டல் உதவியாளரை பயன்படுத்தலாம். உங்கள் செய்திகளை படிப்பதோடு, பாடல்களை இசைப்பது செல்லுமிடத்திற்கு வழிகாட்டுவது உள்ளிட்டவற்றை வழிகாட்டி கிறிஸ் செய்வார்.