"தற்போது நமக்கு இருப்பது இரண்டே வாய்ப்புகள்தான்"
நேர்காணல்!
"தற்போது நமக்கு இருப்பது இரண்டே வாய்ப்புகள்தான்"
நோம்
சாம்ஸ்கி, எம்ஐடி, அரிசோனா பேராசிரியர்.
தமிழில்: ச.அன்பரசு
நவீனகாலத்தின் தவிர்க்கமுடியாத அறிவுஜீவிகளில் ஒருவரான
நோம்சாம்ஸ்கிக்கு வயது 89. உலகின் அமைதிக்கு பாடுபடும்
சாம்ஸ்கி, முதலாளித்துவத்தை தீவிரமாக எதிர்க்கும் தாராள சோசியலிஸ்டுகளில்
ஒருவர்.
அமெரிக்க தேர்தலின்போது ட்ரம்ப் அதிபரானால் உலகம்
தவிக்கப்போகிறது என எச்சரித்தீர்கள். தற்போது ட்ரம்ப்
அமெரிக்க அதிபர். முந்தைய அதிபர்களைவிட ட்ரம்ப் எவ்வகையில் வேறுபடுகிறார்?
சூழல் ஒப்பந்தம் குறித்த நடவடிக்கை ஒன்றே ட்ரம்பைப்
பற்றி சொல்லிவிடுமே! குடியரசுக்கட்சியினரின் எழுச்சி
அமெரிக்காவை பேரழிவின் பாதையில் அழைத்துச்செல்கிறது. பலரும் இதன்மீது
கவனம் செலுத்தாமல் அலட்சியமாக உள்ளனர்.
இஸ்ரேல் -
பாலஸ்தீனப் பிரச்னையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்ததன் மூலம் அமைதி முயற்சி நின்றுபோனதோடு இதில் அவர்
என்ன கூறவருகிறார்?
அமெரிக்கா இம்முடிவை எடுக்காதபோதும், இஸ்ரேல் - பாலஸ்தீனத்தில் அமைதி
சாத்தியமாகும் என்று கூற முடியாது. இஸ்ரேலிலுள்ள வெஸ்ட் வங்கியின் ஆதரவாளர்கள் ட்ரம்பின் அரசியல் கட்சிக்கு நிதியளிப்பவர்களாக
உள்ளனர்.
உலகளவில் அமெரிக்க அரசின் ஆற்றல் குறைந்து வருவதாக
கூறினீர்கள். உலக அரசியல்தளத்தில் தற்போது என்ன
மாற்றம் நிகழ்ந்துள்ளது?
இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்காவின் ஆற்றல்
உச்சத்தை எட்டியது. போரின் இழப்புகளிலிருந்து நாடுகள்
மீளத்தொடங்கின. 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவை சார்ந்து வடமெரிக்காவும்,
ஜப்பானை சார்ந்து கிழக்கு ஆசியாவும், ஜெர்மனியைச்
சார்ந்து ஐரோப்பாவும் பொருளாதாரரீதியில் வளரத்தொடங்கின. உள்நாட்டு உற்பத்தியில்
அமெரிக்காவின் பங்கு 20 சதவிகிதத்திற்கும் குறைவு. உலகின் பாதிவளத்தை அமெரிக்க நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன என்பது உண்மை.
அடித்தளத்தில் இதனைப் பார்க்கும்போது குழப்பமாக சித்திரமே கிடைக்கிறது.
ஜனநாயகத்தை அச்சுறுத்தும் வகையில் வலதுசாரி இந்துக்களின்
எழுச்சி மோடியின் ஆட்சியில் உருவாகியுள்ளதே? தேசவிரோதம்
என்ற பெயரில் சட்டங்களும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள்
மீது பாய்ச்சப்படுவதை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
அதுகுறித்த அறிக்கைகளை படித்தேன். ஜனநாயகத்திற்கு எதிரான செயல்கள் கண்டிக்கத்தக்கதே. தேசியவாதம்
என்பது பிரச்னையல்ல. திறந்தவெளியான சமூகத்தில் தேசியவாதம் என்பதை
அமல்படுத்த விதிக்கும் தண்டனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல.
உலகெங்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கு தீவிரமாகியுள்ளது
குறிப்பாக மேற்குலகில். இப்போக்கின் வேர் எது?
அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் புகுந்துள்ள இஸ்லாமியர்களும், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியதும்
காரணமாக கூறலாம். நவதாராள கொள்கைகளும் இஸ்லாமிய சமூக உறவுகளில்
நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இடதுசாரி சக்திகள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் தேர்தல்
தோல்விகளையும் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளனரே? அவர்களின் முன்னுள்ள சவால்கள் என்ன?
நிச்சயம் இது பின்னடைவுதான். ஆனால் இடதுசாரிக்கட்சிகள் முன்பை இன்று பெருமளவு விஷயங்களை இதில் பெற்றுள்ளன.
வரலாற்றில் வளர்ச்சி, இறக்கம் என்பது அனைத்து அமைப்புகளும்
சந்திக்கும் ஒன்றுதான். உலகை சிறந்ததாக மாற்ற முனையும் மனிதர்களுடன்
இணைந்து பணிபுரிவதே துணிச்சலான சரியான வழி.
உலக அமைதிக்கு அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பாடுபட்டு
பலருக்கும் ஊக்க உதாரணமாகி உள்ளீர்கள். உலகத்தின் மீதான
நேர்மறை எண்ணம்தான் இதற்கு காரணமா?
நம்பிக்கை இன்றி கைவிடுவது, கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி முயற்சிப்பது என நம்மிடம் இருப்பது இரண்டே
வாய்ப்புகள்தான்.