அணுவிமானங்களில் பயணிக்க முடியுமா?
ஏன்?எதற்கு?எப்படி? -Mr.ரோனி
அணு விமானங்களில்
பயணிப்பது சாத்தியமாகுமா?
தியரியாக, அணு ஆற்றலில்
இயங்கும் விமானங்கள் சாத்தியம். பெட்ரோல் பிரச்னையின்றி கார்பனைப்
பற்றி கவலைப்படாமல் மும்பை டூ சென்னை கூட பறக்கலாம். விமானத்தில்
அணு ஆற்றல் ரியாக்டரை எப்படி பொருத்தி இயக்குவது, மக்கள் அதன்
அருகில் உட்காருவதை ஏற்பார்களா, கதிர்வீச்சை தாங்கும் அடர்த்தி
கொண்ட கவசத்தை விமானத்திற்கு ஏற்படுத்த முடியுமா? என்பது போன்ற
எண்ணற்ற கேள்விகள் உள்ளன.
அதேசமயம் கரிம
எரிபொருட்களுக்கு மாற்றான சக்தி குறித்த இங்கிலாந்தின் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. 2009 ஆம்
ஆண்டில் கூட மான்செஸ்டர் பல்கலைக்கழகம் நீரை ஆவியாக்கி விமானத்தை இயக்கமுடியுமா என
டெஸ்ட் செய்தது. எதிர்காலத்தில் நியூக்ளியர் விமானங்கள் வானில்
பறக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.