மெக்சிகோ அதிபரிடம் என்ன எதிர்பார்க்கலாம்?








அகதிகளின் அதிபர்!




மெக்சிகோவின் அதிபராக அகதிகளை அரவணைக்கும் இடதுசாரி ஆண்ட்ரேஸ் மானுவேல் லோபஸ் ஆப்ரேடர் பதவியேற்றுள்ளார். முன்னாள் நகரமேயரான ஆண்ட்ரேஸ் 64 வயதில் மூன்று போட்டியாளர்களை வென்று 53 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று அதிபராகியுள்ளார். இது அதிகசெலவு பிடித்த தேர்தல் என்பதோடு, 136 வேட்பாளர்கள் பல்வேறு கூலிப்படைக்குழுக்களால் கொல்லப்பட்டுள்ளனர். போதை தலைவர்களை மன்னித்து ஊழலை ஒழித்து வாக்குறுதி தந்த திட்டங்களை எப்படி ஆண்ட்ரேஸ் நிறைவேற்றுவார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

1821 ஆம் ஆண்டு ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல் மெக்சிகோ சந்தித்து வந்த விஷயங்கள் இனி ஆண்ட்ரேஸ் அதிபரான நொடி முதல் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. 2014 ஆம் ஆண்டு ஆண்ட்ரேஸ் தொடங்கிய மொரினா கட்சி தற்போது ஆட்சியைப் பிடித்துள்ளதோடு, நகர மேயராக கிளாடியா ஷீன்பம் என்ற பெண்மணியையும் நியமித்து சாதனை செய்துள்ளது. அமெரிக்காவின் அகதிகொள்கையை இரக்கமில்லாத ஒன்று என விமர்சித்த ஆண்ட்ரேஸ், அமெரிக்காவுக்கு ஆதரவான அகதிகொள்கையை பின்பற்றமாட்டார் என உறுதியாக நம்பலாம்.

  

பிரபலமான இடுகைகள்