எஸ்டோனியா எனும் பிளாக்செயின் தேசம்!
இணைய எதிர்காலம்: பிளாக்செயின்!
நாம் இன்னும் ஆதாரை
அப்டேட் செய்யவே முக்கி முனகிக் கொண்டிருக்க எஸ்தானியா நாடு, வரி கட்டுவது,
நிலம் வாங்குவது, ஒப்பந்தம், ஏன் வாக்களிப்பதைக் கூட இணையத்தில் செய்யலாம் என்ற சுதந்திரத்தை மக்களுக்கு
தந்துவிட்டது.
2014 ஆம்
ஆண்டிலேயே இணைய நிர்வாகத்தை(e-residency) எஸ்டானியா அரசு கொண்டுவந்துவிட்டது.
இதன் மூலம் குடியுரிமைக்கு கூட உலகின் எந்த சந்துபொந்திலும் இருந்துகூட
விண்ணப்பிக்கலாம். தகவல்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க உதவும்
பிளாக்செயின் தொழில்நுட்பமே இதற்கு காரணம். எஸ்டானியா உலகத்தின்
முதன்முதல் கிரிப்டோ கரன்சியை வெளியிட்டது. இதைப்பின்பற்றி இங்கிலாந்து,
ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாஸ்போர்ட், பிறப்பு
சான்றிதழ்களை வழங்குவதுவரை முயற்சிகளை செய்து வருகின்றன. ஈத்திரியம்
கிரிப்டோகரன்சி அண்மையில் ரஷ்ய வங்கியோடு வணிக ஒப்பந்தம் மேற்கொண்டது நம்பிக்கை அளிக்கும்
முயற்சி. சீனாவும் இவ்வழியில் கிரிப்டோகரன்சியை உருவாக்கிவருகிறது.
"கணிதமுறையில் இயங்கும் பிளாக்செயின் சிறப்பான முறையில் தவறான நுழைவுகளை
தடுக்கிறது" என்கிறார் ஐடி துறையைச் சேர்ந்த ஆர்தர் நோவக்.
எஸ்தானிய பிளாக்செயின் மாடல் உலகம் முழுக்க பரவலாக அதிக வாய்ப்புள்ளது.