இடுகைகள்

சேட்டன் பகத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளைஞர்களின் இந்தியா - அரசியல் சிறுநூல் வெளியீடு

படம்
            சேட்டன் பகத் எழுதிய யங் இந்தியா நூலின் அரசியல் பகுதி கட்டுரைகளை தமிழாக்கம் செய்து எழுதியவை சிறுநூலாக உள்ளன. அவற்றை இணைய லிங்கை கிளிக் செய்து தரவிறக்கிக்கொள்ளலாம். வாசியுங்கள். நன்றி1     https://archive.org/details/youngi/page/14/mode/2up

தீவிரவாதிக்கு மதமில்லை, ஊழல் அரசியலுக்கு கட்சி பேதமில்லை

படம்
              ஊழல்களுக்கு கட்சி பேதமில்லை!  பல காங்கிரஸ் அமைச்சர்கள் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். 2ஜி ஊழல் என்பது இதில் முக்கியமாக குறிப்பிடலாம். ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகளைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சி, பெருமளவு விவாதங்களில் ஈடுபட்டுவருகிறது. இதில் ஈடுபட்ட சிலரைக்காப்பாற்ற பெரும் தலைவர்களின் அறிக்கைகள் போதுமானதல்ல. இதோடு நின்றுவிடப்போவதுமில்லை. சராசரி இந்தியர்களுக்கும் அரசியலில் அறமின்மை புகுந்தது கண்டு வெறுப்பு கொள்வதற்கான காரணமாக இவை அமைந்துவிட்டது. பல்வேறு ஊடகங்களின் சம்மட்டி அடி போன்ற ஊழல்களின் மீதான செய்திதொகுப்புகள், தெருவில் உள்ள கடைசி மனிதர் வரைக்குமான விழிப்புணர்வை தந்துவிட்டிருக்கிறது.  உண்மையில் ஊழல் செய்திகளை,  டி.வியில் பார்ப்பது பெரும் பொழுதுபோக்காக மாறிவருகிறது. சேனல்களுக்கான நிகழ்ச்சிக் கருக்களை அரசியல்வாதிகளே தந்துதவுகிறார்கள். டி.வி பார்க்கும் பார்வையாளர்கள் யாரும் குற்றம் சாட்டப்பட்ட தலைவரை அப்பாவி என்று நம்புவதில்லை. அரசியல்வாதிகள் யார்தான் குற்றம் செய்யவில்லை என்று கூறப்படும் வழக்கமான செவ்வியல் வாக்க...

போர்க்குணத்துடன் வெளிப்படையான பேச்சின் தேவை!

படம்
                போர்க்குணத்துடன் வெளிப்படையான பேச்சின் தேவை!  சுவாரசியமான போக்கு நம் நாட்டின் அரசியலில் தொடங்கியிருக்கிறது. பிடிவாதமும், போர்க்குணமும் கொண்ட அரசியல்வாதிகள் உருவாகி வருவதுதான் அது. இந்தியாவின் பெரும்பாலான முக்கிய முன்னாள் இந்நாள் முதலமைச்சர்களான நரேந்திரமோடி, நிதீஸ்குமார், ஜெயலலிதா, மாயாவதி, மம்தாபானர்ஜி, ஷீலா தீக்ஷித் ஆகியோர் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்ற தனித்தன்மையான, கருத்துகளைக்கொண்ட ஆளுமைகள் எனலாம்.  இந்நிலை, ஒரேமாதிரியான எப்போதும் பேசாத (அ) கட்டாயப்படுத்தினால் பேசக்கூடிய அதனை யாரிடமும் கலந்து பேசாத ராஜதந்திர தன்மைக்கு முழுமையாக எதிராக உள்ளது. காங்கிரஸ் கட்சியில் அமைதியான ஒரேமாதிரியான தன்மை வெற்றிகரமான மர்ம நிலைப்பாடாக கடந்த இருபது ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தலைவர்கள் இதனை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் இதுவே. மிகச்சிறந்த முதல்வர்களில் ஒருவராக இந்திய வாக்காளர்களை ஒன்றிணைக்க நினைத்தால் வெளிப்படையாக பேசவேண்டும்.  இதற்கான மிகச்சிறந்த செவ்வியல் உதாரணமாக காலங்கடந்த மௌனத்தலைவராக ஐந்து ஆண்டுகள...

நேர்மை, திறமை கொண்ட மக்கள் பிரதிநிதிகளின் தேவை!

படம்
                நேர்மை, திறமை கொண்ட மக்கள் பிரதிநிதிகளின் தேவை!  அன்னா ஹசாரே உலகில் அணுக முடியாத அரசுகளின் அணுகுமுறையின்மீது  நேர்மறையான தனது நடவடிக்கைகளின் மூலம் மாற்றத்தை தூண்டியுள்ளார். இளைய தலைமுறை மூலம் மாற்றத்திற்கான வழியைக் கண்டறியும் ஆர்வத்திற்கு ஒளிபாய்ச்சியுள்ளார். இந்தியாவின் தரமான மதிப்புகளை மீண்டும் புதுப்பிக்க முயற்சித்துள்ளார். ஆம், நம்மில் பலரும் ஊழலை அமைப்பு (அ) வேறு வகையில் தூண்டப்பட்டு செய்தாலும் நம்மில் ஒரு பாகம் சரியானதாகவே இன்றும் மாறாமல் இருக்கிறது. அதை வலுபெறச் செய்தல் வேண்டும். ஜன்லோக்பால் மசோதா என்பதைத்தாண்டி அன்னா குழுவினரது நீதிக்கான போராட்டம் என்பதை சமூகத்திற்கான முக்கியமான பங்களிப்பு என்று கூறமுடியும்.  இந்த சாதனைகளுக்கும் விலை உண்டு. நீண்டகாலமாக தீர்க்கப்படாத பல்வேறு குழப்பங்களைப் பார்க்கிறோம். அழகற்ற, மகிழ்ச்சியற்ற விஷயங்கள் பிடிவாதம், கர்வம், விட்டுக்கொடுக்காதவை என பொதுமக்களுக்கான பார்வையில் இவை தெரிகிறது. கருத்தியல் உலகில் மக்களுக்கு பொருத்தமான காரணத்தோடு தனது பதவி (அ) அதிகாரம் கொண்டு சரியானதை செய்ய...

போருக்கு செலவு செய்வதைவிட நிதியை ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கு திருப்பலாம்!

படம்
           உள்நோக்கம் கொண்ட தேசபக்தி அரசியல்    ஒருவகையில் பாகிஸ்தான் நாட்டுடன் உறவுகள் மேம்படுவதாக  இருந்தாலும், இன்னொருவகையில் அந்நாட்டுடன் சுமூகமான உறவு ஏற்படக்கூடாது என்று விரும்புகிறோம். நமது பிரதமர் பாகிஸ்தான் பகுதிகளைப் பற்றிப்பேசும்போது நாடாளுமன்றத்தில் பல அணிகளாகப் பிரிந்து நின்று பேசுவது நடக்கிறது. நாட்டின் ஊடகங்களில் இரு தரப்பு பற்றி கடும் கூச்சல் இடுவதுமாக இரு நாட்டு உறவுகள் சமநிலையடையும் நிலையில், இச்செயல்கள் அதைக் குலைத்துப்போட்டுவிடுகின்றன.  நமது செயல்பாடுகள் பாகிஸ்தானுடனான ஒற்றுமையை உண்மையில் நாம் விரும்புவதில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. உறுதியாக, நாம் உறவுகளை சிறந்ததாகவும், ஆழமானதாகவும் கொள்ள முயற்சித்தும் அங்கே மனக்கசப்பும், கோபமும்தான் இறுதியில் மிஞ்சுகிறது. அனைத்தையும் விட பாகிஸ்தானுக்கு சரியான பாடத்தை கற்பிக்கவேண்டும்; அவர்களை சரியான இடத்தில் வைக்கவேண்டும்; எனவும், பாகிஸ்தானை இகழ்ந்து பேசுவதுதான் தேசபக்தி என்று கூறுவதில் பெரும் அரசியல் உள்ளது.  மும்பை தீவிரவாதத் தாக்குதல் பிரச்சனைகளை தீர்க்காமல் பிரதமர் பாகி...

வாக்குவங்கி அரசியல் - சமகாலத்தின் நவீன பிரித்தாளும் கொள்கை

படம்
              வாக்கு வங்கி எனும் சூழ்ச்சி  வாக்குவங்கி அரசியல் - சமகாலத்தின் நவீன பிரித்தாளும் கொள்கை  சில சமயங்கள் தொடர்ந்து அடக்குமுறைக்கு ஆட்படுத்தப்படும்  சிறுபான்மை இனக்குழுவில்  இருப்பது  குறித்து எண்ணி ஆச்சர்யமுறுவேன். நான் முஸ்லீமோ (அ) தலித்தோ அல்ல. பெண்ணும் அல்ல. வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவனும் இல்லை. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களைவிடவும் வடகிழக்குப் பகுதியைச் சார்ந்தவர்கள் பெரிதும் தோற்றத்தில் வேறுபடுகிறவர்கள் ஆவர். வங்கியில் வெளிநாட்டில் வேலை செய்தபோது, இந்தியர்களை வித்தியாசம் பாராட்டும் தன்மை என்னை சிறுபான்மையினராக உணரச்செய்தது. இன்றும் அந்த பாகுபாடான மனநிலை அற்பத்தனமானது என்றே நினைக்கிறேன்.  சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்களது உணர்ச்சிகளை முழுமையாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இன்றும் இந்தியாவைச் சேர்ந்த சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அறிவுரை கூற அதிக துணிச்சல் தேவைப்படுகிறது. அவர்களின் சூழலை உணர்ந்து பேச நம்மில் பெரும்பான்மை இனக்குழு சார்ந்தவர்களுக்கு கூட முழுமையான தகு...

கண்டுபிடிப்புகளில் ஆய்வுகளில் இந்தியர்கள் பின்தங்குவதற்கான காரணங்கள் - சேட்டன் பகத்

படம்
  சாம் ஆல்ட்மேன், துணை நிறுவனர் ஓப்பன் ஏஐ இந்தியர்கள் தமக்குத்தாமே பெருமை பட்டுக்கொள்ளக்கூடியவர்கள். ஆனால். இந்த மனப்பான்மை நம்மில் பெரும்பாலானோர்க்கு பாதகத்தையே அதை நாம் தொடக்கத்திலேயே அறிவதில்லை. அண்மையில் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் துணை நிறுவனர் சாம் ஆல்ட்மேன், இந்தியாவுக்கு வந்தார். அவரிடம் இந்திய ஸ்டார்ட்அப்கள் பத்து மில்லியன் டாலர் செலவில் சாட் ஜிபிடியைப் போல ஏஐ மாடலை உருவாக்க முடியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. ‘’பத்து மில்லியன் டாலர் செலவில் அப்படி மாடலை இந்தியா உருவாக்க முடியாது. இன்றளவும் அப்படி உருவாக்கிவிடவில்லை. அப்படி உருவாக்கினால் கூட அது சாட் ஜிபிடியோடு போட்டியிடமுடியாது’’ என்று கூறினார். உடனே அவருக்கு சவால் விட்டு ட்விட்டர், லிங்க்டு இன் தளங்களில் பதிவுகள் இடப்பட்டன. ‘’சாமின் சவாலை ஏற்றுக்கொண்டோம்’’.’’ செய்துமுடிப்போம்’’ என பகிரங்க சவால்கள் விடப்பட்டன. பிறகு, நிலவரம் கலவரமாவதை உணர்ந்த சாம், பத்து மில்லியன் டாலர்கள் என்ற செலவில் சாட் ஜிபிடி உருவாக்க முடியாது என்ற கருத்தில் தான் பேசியதாக கூறினார். இந்தியாவில் பொருளாதார முன்னேற்றத்திற்காக சேவைத்துறையில் புகழ்பெற்ற நிறு...

இரண்டு பேர் இரண்டு பேருடனும் காதல்! - கடிதங்கள்

படம்
  பிரிய முருகுவிற்கு.... நலமுடன் திகழ வேண்டுகிறேன். சேட்டன் பகத்தின் நாவல் ஒன்றைப் படித்தேன். அதுபற்றித்தான் இந்த மடல்.  கோபால் மிஷ்ரா, ராகவ் காஷ்யப், ஆர்த்தி பிரதான் என இரண்டு ஆண், ஒரு பெண் என மூவருக்கு இடையிலான உறவுச்சிக்கல்களும், வாரணாசியின் வளர்ச்சி மாற்றங்களும்தான் கதை. இந்த மூவரில் ஒருவர் இதில் நடக்கும் அநீதியைத் தட்டிக் கேட்க எழுகிறார். அவர் வெற்றி பெற்றாரா, எப்படி வென்றார் என்பதை சேட்டன் பகத்தின் ரிவல்யூஷன் 2020 என்ற நாவல் பேசுகிறது.  நாவலை நீங்கள் வாசிக்கவேண்டியது அவசியம்.  ஒருவரின் புரட்சி குறித்த அறைகூவல் மற்றவரை விழித்தெழச் செய்யலாம. ஒவ்வொருவரும் அவரவர் பங்கை சமூகத்திற்கு தரவேண்டும். அப்படி பங்களித்தால்தான் சமூகத்திற்கு பல  மாற்றங்களைக் கொண்டு வரமுடியும்.  இந்த நாவலில் காதல் என்பது முழுக்க ஆர்த்தி என்ற பாத்திரத்தைச் சேர்ந்தது. ஆர்த்திக்கு, ராகவுடன் காதல் இருக்கும்போது கூட விரக்தியடையும் நேரத்தில் கோபாலுடன் உடலுறவு கொள்கிறாள். மில்லினிய கால வாசகர்களுக்கான நாவல் இது.  தற்போது வீட்டில் படிக்க கிடைத்த புத்தகம் பூவுலகுதான். வடக்குப்புதுப்பாளையும...

கடந்த காலத்தில் இந்தியாவின் பெருமையைத் தேடிக்கொண்டிருந்தால் வருங்காலம் என்பதே நமக்கு இருக்காது! - சேட்டன் பகத்

படம்
                  போலித்தனமான அறிவியலே இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணம் சேட்டன் பகத் நவராத்திரிக்கான ஏழுநாட்கள் விரதத்தை நான் கடைப்பிடித்து வருகிறேன் . கடந்த முப்பது ஆண்டுகளாக விழா காலங்களில் உண்ணாநோன்பை கடைபிடித்து வருகிறேன் . இப்போது இந்த கட்டுரையைக் கூட விரதத்தை முடித்தபிறகு எழுதிக்கொண்டிருக்கிறேன் . நான் கடைபிடிக்கும் மதத்தை நான் விரும்புகிறேன் . ஆனால் இந்த நேசம் சிலசமயம் புதிய மாற்றங்களை நிராகரித்து விடும் என்பது உண்மையே . பெருந்தொற்றுகாலம் இதுபோல நம்பிக்கை கொண்ட அறிவியலை நம்பாத இந்துகள் ஏராளமானோர் இங்கு உள்ளனர் . இவர்களைப் போன்ற அவ நம்பிக்கைவாதிகள் இருப்பதால்தான் நம்மை வெளியிலிருந்து வந்தவர்கள் பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தனர் . அமெரிக்கா , சீனா ஆகிய நாடுகளில் கூட இறப்புகளை தடுத்தபிறகும் இந்தியாவில் கொரானோவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது . அங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து பொருளாதார வளர்ச்சி மீண்டு வருகிறது . இதனை பலரும் ட்வீட் செய்வதற்குள் நான் சில விஷயங்களை கூறிவிடுகிறேன் . 1. நான்...

உற்பத்தி துறையை மேம்படுத்த மேக் இன் இந்தியா, ஆத்மாநிர்பார் போதாது! சேட்டன் பகத்

படம்
                இந்தியாவின் உற்பத்திதுறையை மேம்படுத்த மசோதா தேவை ! சேட்டன் பகத் சில சமயங்களில் நமக்கு மக்கள் எதிர்க்கும் விஷயங்களில் கூட நல்ல விஷயங்கள் கிடைக்கும் . வகுப்பறையில் மாணவர்களுக்கு பாஸ்தா , பீட்ஸா கொடுப்பதை விட காய்ச்சலைக் குணப்படுத்த கசப்பு மாத்திரை கொடுக்கும் மருத்துவர் முக்கியமானவர் . அதேபோலத்தான் அரசு மக்களுக்கு ஏராளமான இலவச சலுகைகளை வழங்கி பின்னர் வரி ஏற்றி மக்களை வருத்துவதை விட கடினமான முடிவுகளை முன்னமே எடுத்து மக்களை காப்பது சிறப்பானது . பொதுவாக மக்கள் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி என்பதை விரும்புவதில்லை . ஆனால் , அதனை அவர்கள் செய்யும்போது கிடைக்கும் பலன்கள் அபாரமானவைதானே ! நாம் பல்லாண்டுகளாக காத்திருந்துவிட்டோம் . உற்பத்தித்துறை சார்ந்த துறையில் இந்தியா முன்னேறுவதற்கான திட்டங்கள் உருவாகவில்லை . ஆனால் இப்போது இந்திய அரசு அந்த திசையில் தனது காலடிகளை மெல்ல எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளது . மேக் இன் இந்தியா , ஆத்மாநிர்பார் ஆகிய திட்டங்களை இந்த வகையில் நாம் கூறலாம் . அரசு இத்திட்டங்களுக்காக லட்சம் கோட...

இரக்கம் வேண்டாம் வருமானம் வேண்டும் ! சேட்டன் பகத்!

படம்
        rediff     இரக்கம் வேண்டாம் வருமானம் வேண்டும் ! சேட்டன் பகத்! அண்மையில்தான் விவசாய மசோதாக்கள் மூன்று மக்களவையில் தாக்கலாகி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவை சட்டமாக்க குடியரசுத்தலைவரும் கூட ஒப்புதல் வழங்கி்விட்டார். இம்மசோதாக்கள் விவசாயத்துறையில் சீர்திருத்தத்தை முன்மொழிகின்றன. இதனால் மசோதாக்கள் பற்றிய விமர்சனங்கள், எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. தற்போதைய முறையில் அரசு குறைந்தபட்ச விலையை விவசாயிகளுக்கு அளிக்கிறது. அவர்கள் தங்கள் பொருட்களை தனியாருக்கு அல்லது மாநில அரசுகளின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விற்று வருகின்றனர். இனிமேல் அப்படி உள்ளூரில், மாநிலத்தில் விற்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. நல்ல விலை கிடைத்தால் பொருட்களை கிடங்கில் வைத்து நிதானமாக பொருட்களை விற்கலாம், மேலும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு விவசாயம் செய்யமுடியும். சிலர் இம்மசோதாவை குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கும் முறையை ஒழிக்கிறது எனலாம். அதுதானே விவசாயிகளின் பொருட்களுக்கு விளைபொருட்களின் விலை தாழ்ந்தாலே ஏறினாலோ நஷ்டம் ஏற்படாமல் காக்கிறது என வாதிட...

இந்தியர்களுக்கு எப்போதுமே சாதி பிடிக்கும்! சேட்டன் பகத்

படம்
                                       சேட்டன் பகத்   சேட்டன் பகத் உங்களுடைய தி கேர்ள் இன் ரூம் நெ.105 என்ற நாவலில் கொலை செய்வதற்கான பகுதிகள் வருகின்றன. அதே போல அடுத்த நாவலான அரேஞ்சுடு மர்டரும் அப்படியே தொடர்கிறதே ஏன்? ஒரு இளைஞன் ஒரு பெண்ணை காதலிப்பதை விட அவளை கொல்ல திட்டமிடுவது இன்னும் சுவாரசியமாக இருக்கும் என நினைக்கிறேன். அதனால்தான் காதலை கடந்து க்ரைமுக்கு செல்கிறேன். சேட்டன் பகத்தின் நாவலில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் காமெடி, காதல், இந்திய சமாச்சாரங்கள் அனைத்துமே இருக்கும். நீங்கள் ஒருமுறை என்ஆர்சி மசோதாவை, பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் திருமணங்களோடு ஒப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் இப்படி அரசியல் நிலை எடுத்து பேசுவது உங்கள் ரசிகர்களை பாதிக்குமா? நான் என்னை எழுத்தாளராக நிரூபித்துவிட்டேன். இப்போது எனக்கு சில விஷயங்களை ரசிகர்களோடு பகிர்ந்துகொள்ள தோன்றுகிறது. எனவே, நான் அதனை அவர்களுக்கு நூல் வழியாக சொல்லுகிறேன். அவர்கள் என் எ...

இந்தியர்கள் ஏழையாக வாழ்ந்தே சுகம் கண்டுவிட்டார்கள் - சேட்டன் பகத்

படம்
dte இந்தியர்கள் ஏழையாக இருப்பதிலேயே சுகம் கண்டுவிட்டனர் சேட்டன் பகத் உலகில் வேறு நாடுகளைவிட ஊரடங்கு காலம் இந்தியர்களை கடுமையாக பாதித்துள்ளது. உலகப்போர் கால புகைப்படங்கள் என்றால் உங்களுக்கு சில அடையாளமான புகைப்படங்கள் நினைவுக்கு வரும். இனி கொரோனா கால பாதிப்பு என்றால் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் ஆதரவற்று நடந்துசெல்லும் புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும்தான் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வரும். இந்திய அரசு இக்காலகட்டத்தில் அறிவித்த இழப்பீட்டுத்தொகை உள்நாட்டு உற்பத்தியில் குறைவான தொகையாகும். பிறநாடுகளை விட இது குறைவான தொகை என்பது உண்மை. இந்த நிலைக்கு என்ன காரணம் என்று யோசித்திருக்கிறீர்களா? பசியில் வீடு சொல்ல காத்திருக்கும், போராடும் மக்களை காவல்துறை கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், லத்தியால் அடித்தும் விரட்டி வருகிறது. ஏன் அரசு இந்த நிலையை சமாளிக்க முடியவில்லை. இதற்கு பதிலாக கொரோனா பாதிப்பிற்கு முஸ்லீம்கள்தான் காரணம் என செய்தியை அரசுக்கு ஆதரவான குழுக்கள் பரப்பி வருகின்றன. இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம், நாம் ஏழை நாடு என்பதுதான். நாம் கேட்க விரும்பாத நிஜம் இ...