போர்க்குணத்துடன் வெளிப்படையான பேச்சின் தேவை!

 

 

 

 

 

 

 

 



போர்க்குணத்துடன் வெளிப்படையான பேச்சின் தேவை!

 சுவாரசியமான போக்கு நம் நாட்டின் அரசியலில் தொடங்கியிருக்கிறது. பிடிவாதமும், போர்க்குணமும் கொண்ட அரசியல்வாதிகள் உருவாகி வருவதுதான் அது. இந்தியாவின் பெரும்பாலான முக்கிய முன்னாள் இந்நாள் முதலமைச்சர்களான நரேந்திரமோடி, நிதீஸ்குமார், ஜெயலலிதா, மாயாவதி, மம்தாபானர்ஜி, ஷீலா தீக்ஷித் ஆகியோர் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்ற தனித்தன்மையான, கருத்துகளைக்கொண்ட ஆளுமைகள் எனலாம்.

 இந்நிலை, ஒரேமாதிரியான எப்போதும் பேசாத (அ) கட்டாயப்படுத்தினால் பேசக்கூடிய அதனை யாரிடமும் கலந்து பேசாத ராஜதந்திர தன்மைக்கு முழுமையாக எதிராக உள்ளது. காங்கிரஸ் கட்சியில் அமைதியான ஒரேமாதிரியான தன்மை வெற்றிகரமான மர்ம நிலைப்பாடாக கடந்த இருபது ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தலைவர்கள் இதனை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் இதுவே. மிகச்சிறந்த முதல்வர்களில் ஒருவராக இந்திய வாக்காளர்களை ஒன்றிணைக்க நினைத்தால் வெளிப்படையாக பேசவேண்டும்.

 இதற்கான மிகச்சிறந்த செவ்வியல் உதாரணமாக காலங்கடந்த மௌனத்தலைவராக ஐந்து ஆண்டுகள் பதவி வகித்த பி.வி. நரசிம்மராவ் அவர்களைக் கூறலாம். இதன் அர்த்தம் அவர் ஆட்சிலிருந்தபோது இந்தியாவை சலிப்படைய வைத்தார் என்பது அர்த்தமல்ல. பொருளாதார தாராளமயமாக்கம், வங்கிகள் திவால், பாபர் மசூதி இடிப்பு, ஊழல் விவகாரங்கள் என அவரின் பதவிக்காலத்தில் பரபரப்பான பெரும் நிகழ்வுகள் நடந்தன.

அவரைச்சுற்றி இருந்தவர்களிடம் அவரது குரல் நினைவிலிருக்கிறதா என்று கேட்கவேண்டும். அவருக்குப் பின் பிரதமர் பதவியை ஏற்க தயக்கத்துடன் கூடிய மௌனத்தை சோனியாகாந்தி பின்தொடர்ந்தார். பிறகு, மன்மோகன்சிங் போராட்டகுணம் (அ) சாதுரியமான பேச்சாற்றல் போன்றவற்றிக்கு அரிதாக நினைவுகூரப்படுகிறவர். அவர் பேசுவதும் இல்லை; எனவே, விளக்கம் அளிப்பதும் இல்லை; எதிர்வினை புரிவதும் இல்லை; எந்த நிலைப்பாட்டினையும் எடுப்பது இல்லை என செயல்பாடுகள் முன்பு சிறப்பாக வேலை செய்திருக்கலாம். ஆனால் இனி அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை.

 2012 ஆம் ஆண்டு,  இந்தியாவில் அமைதி என்பது பெருந்தன்மை, ஆளுமை (அ) நிதானம் ஆகியவற்றைக் கூற பயன்படுத்தப்படாது. அரசியல்வாதிகளின் அமைதி என்பது குற்றம் செய்தவர், திறமை இல்லாதவர், முக்கியமான பிரச்சனைகள் குறித்து கவனம் இல்லாதவர் என்று மக்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர். கணக்கேயில்லாத பல அரசுகளால் ஏமாற்றப்பட்ட மக்களின் மனநிலை மாறியுள்ளதற்கு இதுவே சான்றாகும். முதலில் அமைதியான தலைவர்களை வணங்கினாலும், போர்குணம் கொண்ட பிடிவாதம் இணைந்த தலைவர்களை சிறிது அசட்டு நம்பிக்கையுடன் தேடத்தொடங்கிவிட்டார்கள்.

 அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ், கவர்ச்சியும் பேச்சாற்றலும் கொண்ட பில் கிளிண்டனுடன் ஒப்பிடப்பட்டு சிறந்த அதிபர் இல்லை என்று பரிகாசம் செய்யப்பட்டார். முன்னிருந்த அதிபர் போல ஊழலில் சிக்காமல் குறைந்த வசீகரம் கொண்டிருக்கும் ஒருவர் என்றால்கூட அமெரிக்கமக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். அதுபோலவே இந்தியர்களும் பெருந்தன்மையாக மக்களிடம் பேசாமல் இருக்கும் தலைவரை விட பேசும் தன்மை கொண்ட ஆக்ரோஷமான தலைவருக்கு வாய்ப்பளிக்க நினைக்கிறார்கள்.

 இதில் அரசியல் கட்சிகள் கற்றுக்கொள்ள பல  பாடங்கள் உள்ளன. கடந்த காலங்களில் பலனளித்த செயல்முறைகள் இனி பயனளிக்காது. தலைவராக இருக்கும் ஒருவருக்கு குறிப்பிட்ட செயல்திட்டங்கள், பார்வைக்கோணங்கள், பிரச்னைகள் குறித்து மக்களிடம் பேசும் தன்மை, திறமை நிச்சயம் தேவை.

ஒவ்வொரு அடிப்படையில்லாத குற்றச்சாட்டு (அ) செய்திக்கட்டுரைகளுக்கு எதிர்வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மக்களுக்கு தொடர்பான பிரச்சனைகள் குறித்து நிச்சயம் பேசவேண்டும். அரசு அதிகாரிகளிடமும் (அ) அறிக்கை வழியே பேசப்படுவது வெளிப்படையான பேச்சு என்பதற்கு இணையாது.  இந்த விஷயத்தை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறும் அறிக்கைகள் எல்லாம் முட்டாள்தனமானவை. நேரடியாக நேர்மையாக இதைச் செய்யமுடியும், முடியாது என்ற கருத்துகளைக் கூற பயப்படக்கூடாது.

 நமக்கு நிலையான போராட்டகுணம் கொண்ட தலைவர்கள் தேவை. கட்சிகள் வாக்காளர்களின் தன்மைக்கு ஏற்ப சிறந்த நபர்களைத் தேர்ந்தெடுத்து சரியானவர்களாக உறுதிபடுத்தி தேர்ந்த பயிற்சியளிக்க வேண்டும். சிறப்பாக பேசத் தொடங்கவில்லை என்றால் மக்களும் உங்களைப்பற்றி பேசுவதை நிலையாக கைவிட்டுவிடுவார்கள்.

             
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்