மொழி,சாதி, மத, இன பாகுபாடில்லாத ஆட்சித்தலைவரைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்!

 

 

 









 

 இனிப்பு மிட்டாயும் பள்ளி புத்தகங்களும்!


 வசந்தகாலத்தில் சில பூக்கள் மலர்வதைப்போலவே, இந்தியாவின் அரசியல் தேர்தல் காலங்களில் மட்டுமே உண்மையான நிறத்துடன் உயிர்ப்பு பெறுகிறது. இந்தியர்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்று அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட அபத்தமான, சர்ச்சைக்குரிய (அ) கொள்கைகளற்ற ஆழ்ந்த அகன்ற அறிவோடு சராசரி வாக்காளனின் மனதை எப்படி வசீகரம் செய்வது என்பது போன்ற விஷயங்களை 2012 உ.பி அரசியல் கட்சிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

பகுத்தறிவு, நவீன சிந்தனைமுறைகளைக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் கூட புராதன, பின்னோக்கிய அளவீடுகளைப் பின்பற்றி வாக்காளர் சமூகத்தை தவறான செயல்பாட்டிற்கு பழக்குகிறார்கள்.  அவர்கள் இதனை ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் செய்கிறார்கள் - தேர்தலில் வெற்றிக்காக மட்டுமே. நாடு மற்றும் சமூகத்தின் மீதான தாக்கத்தை நினைவு கொள்ள (அ) மறக்க கால நோக்கில் ஏற்படுத்தும் அளவு, பதவிக்கு அவர்கள் தகுதி பெற வெற்றி உண்மையில் மிக அவசியம்தான்.

இரண்டு உதாரணங்களை எடுத்துக்கொள்வோம். பெரும் கட்சிகளைச் சார்ந்தவைதான் இரண்டும். இந்திய அரசியல் எவ்வளவு விசித்திரமானவை என்பதை நமக்கு புரியவைக்கும். பிஎஸ்பி கட்சியிலுள்ள பாபு சிங் குஸ்வாகா என்பவரை சிறிது வெளிப்படையாக ஊழலில் ஈடுபட்டவர் என்று பி.ஜே.பி குற்றம்சாட்டியது. இந்த செயல் பி.ஜே.பி யின் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கே எதிராக திரும்பியது.
இந்திய ஊடகங்கள், பி.ஜே.பி தன் கருத்தை திரும்பபெறவேண்டும் என்று அக்கட்சி பூரண முட்டாள்தனமாக எதையும் செய்யாதபோதும் கடுமையாக வற்புறுத்தின. உ.பி மக்கள் தொகையில் குஸ்வாகா இனம் சார்ந்த ஓபிசி பிரிவினர் 10% ஆவர். சாதி சார்ந்த வாக்குகள் வாக்கு சதவீதத்தில் முக்கியமான பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை எளிதாக புரிந்துகொள்ளமுடியும். குஸவாகா மீதான குற்றச்சாட்டு அவரை ஓரிரவில் பெரும் கதாநாயகனாக்கிவிட்டது. அலைகழிப்பு ஏற்படுத்தும் உ.பி வாக்குவங்கி மிகவும் எதிரான தன்மையிலானது. அஜீரணத்திற்கு உள்ளான பி.ஜே.பியை பார்த்தாலே அதன் வசீகரத்தை உணரமுடியும்.

 இதனளவு பற்றி அதிகமாக கூறமுடியாவிட்டாலும், இரண்டாவதாக, காங்கிரஸ் அரசு அறிவித்த ஓபிசி பிரிவில் முஸ்லீம் மக்களுக்கான இட ஒதுக்கீடு பற்றியதாகும். காங்கிரஸ் தலைவர்கள் உ.பியெங்கும் சென்று முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பேசுகிறார்கள்.

 இவ்விரண்டும் இந்திய சமூகத்திலும், இந்திய மதிப்புகள் குறித்தும் மோசமான தாக்கத்தையே ஏற்படுத்துகிற செயல்பாடுகளாகும். முதல் பிரச்சனையில் சரியான ஜாதியில் ஒருவர் பிறந்திருந்தால் அவர் செய்யும் ஊழல்கள் மன்னிக்கப்படும் என்ற உண்மையைத் தெரிவிக்கிறது. இனம், ஜாதிக்கு மேலானதல்ல நேர்மை என்று மக்கள் தீர்மானித்து செயல்படுவதாக நினைக்கவும் வாய்ப்புள்ளது.

இரண்டாவது சட்டமான முஸ்லீம்களின் இட ஒதுக்கீடு என்பது பெரிதும் வஞ்சனையான தாக்கத்தைக்கொண்டது. இது இந்துக்கள், முஸ்லீம்கள் என இரு மதத்தினரையும் வேறுபடுத்துகிறது. மதத்தின் அடிப்படையிலான கூடுதல் விஷயங்களான சுயேச்சையான, சுதந்திரமான  செயல்பாட்டினை அனுமதிக்கிறது.

மதரீதியான இட ஒதுக்கீடு மோசமானது. இதைப்பாருங்கள், ஜாதியிலிருந்து மாறாமல் ஆண் மற்றும் பெண்கள் மதம் மாறுகிறார்கள் என்று கொள்வோம். இந்துப்பையன் எதிர்காலத்தில்  வேலை (அ) கல்லூரியில் படிக்க இட அனுமதி கிடைக்காததால் இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறான் என்றால் அவனுக்கு இட ஒதுக்கீடு கிடைக்குமா?

நாம் தூண்டப்பட்டு, உற்சாகமாக  மதம் மாறுகிறோமா? நாம் இதுபோன்ற சட்டங்களை விளைவு அறியாமல் அறிக்கையாக (அ) திட்டமாக எப்படி அறிவிக்கிறோம்? இவை சிறிய அளவில் முஸ்லீம்களுக்கு சிறந்த கல்வி, தொழில்வாய்ப்பு, அதிகாரமளித்தல் என அவர்கள் சமூகத்தில் உயர உதவுகிறது. தேசிய அளவில் முக்கியமான முஸ்லீம் தலைவர்கள் அனைவரும் சுயமான அவர்களின் மனோதிடம், உண்மை, திறமை ஆகியவை காரணமாகவே உயர்ந்தனர்.

 முஸ்லீம்களின் திறமைகளை வளர்த்தெடுப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கி வளர்த்தெடுப்பதே தேவையே ஒழிய தேர்தல் நேர இலவசங்கள் அவசியம் இல்லை. தன் மகன் மகிழ்ச்சியாக இருப்பான் என பள்ளி செல்வதற்கு புத்தகங்கள் வாங்கித்தருவதை விட மிட்டாய்கள் வாங்கித் தரும் தந்தையை சிறந்தவர் என்று யாரும் கூறுவார்களா? மேற்கண்ட விஷயங்களின் தன்மைக்காக நான் எந்த அரசியல்வாதிகளையும் குற்றம் கூறவில்லை. மேலும் நாம் அதுபோன்ற  சூழலில் எந்த வாய்ப்புமில்லாத நிலையில் அதையேதான் தேர்ந்தேடுப்போமோ என்னவோ? பிரச்சனை அரசியல்வாதிகளிடம் இல்லை. அவர்கள் கண்ணாடி போல சூழலுக்கு பொருந்திப்போகிறவர்கள்தான்.

வாக்காளர் சமூகமான நம்மிடம்தான் பிரச்சனை உள்ளது. இந்தியாவின் சிறப்பு வாய்ந்த மூளைகளில் தவறான எண்ணங்கள் நிறைந்திருக்கின்றன. பல நூற்றாண்டுகளாய் இருந்த துன்பங்கள், வேறுபாடு காண்பது இன்றுவரையிலும் தொடர்ந்து வருகிறது. ஆனால் ஒருவரின் தனிப்பட்ட மேன்மைகளே இந்த தவறானவற்றை கடந்துசெல்ல உதவியிருக்கிறது. நம்புங்கள், தற்செயலாக நமக்கு கிடைத்த ஜனநாயகம் சமநிலையைவிட மோசமான சூழலையே ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் நிகழும் கலவரம், கூச்சல் குழப்பங்கள் சாமானிய இந்தியனின் மனதில் என்ன மாதிரியான காட்சியாக பதிவாகும். நாம் உண்மையில் யார் என்பதை எளிதாக அறியும்படிதானே!

 அதிகம் கல்வி கற்றோரும் தீமை விளைவிக்கும் தீங்கான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள். எளிய சோதனைதான். உங்களது சகோதர, சகோதரிகளை (அ) குழந்தைகளை உங்களது ஜாதி தாண்டி, மதம் தாண்டி,  திருமணம் செய்து கொடுப்பீர்களா? பதில் இல்லை என்று கூறினால், இந்திய அணியை உற்சாகப்படுத்தினாலும், தேசிய கீதத்திற்கு நிமிர்ந்து நின்றாலும், இந்தியக்கொடிக்கு மரியாதை செலுத்தினாலும் நீங்கள் தவறான எண்ணங்களால் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றே அர்த்தமாகும்.

 பலரும் முன்முடிவுடன் தவறான எண்ணத்தில் வாழ்வதால் இப்போது குழப்பமான, இரண்டாந்தர தலைமையை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நாம் எத்தனை உண்ணாவிரதப்போராட்டங்களை தொடங்கினாலும் (அ) பொருளாதார வல்லுநர்கள் நல்ல கொள்கைகளைத் தீட்டினாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணம் வராதவரை அனைத்து செயல்பாடுகளும்  நீர்த்துபோனவைதான். மேலும் நாம் நம் தேசத்தையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம் என்பதே அவலமான உண்மை. தலித்துகள் முன்னர் கொடுமைப்படுத்தப்பட்டது போல இன்றுவரையும் அப்படியே தொடர்கின்றனர். முஸ்லீம்கள் பாகுபாடுடன் நடத்தப்பட்டு வருகிறார்கள்.

தவறான எண்ணங்களை கைவிட்டால் செயல்பாடுகள் மேம்படும். தவறான எண்ணங்கள் இல்லை என்றால் பி.ஜே.பி அசுத்தமான மனிதரான குஸ்வாகா பற்றி எதுவும் கூறவேண்டியில்லை. காங்கிரஸ் இடஒதுக்கீடு குறித்து எதுவும் அறிவிக்க தேவையிராது. நம்மை மாற்றிக்கொள்ளாவிட்டால் காலப்போக்கில் பேரழிவை சந்திக்கநேரும்.

 தீர்மானிப்பதில் போதாமை, திறமையின்மை, செயல்பாடு வளர்ச்சி ஆகியவற்றில் மந்தம் ஆகியவை ஏற்படும். நல்ல கல்வி, வேலைவாய்ப்புகளை கண்டறிய இளைய தலைமுறை போராட வேண்டிய நிலை ஏற்படும். நாம் நமக்கான தலைவரை அவர் நமக்கு கொடுக்கும் இனிப்பு மிட்டாய்க்காக தேர்ந்தெடுத்தால் விதியை நம்பியேதான் இருக்கவேண்டும். அதுதான் ஒரே வழி. ஆனால் அனைத்தையும் இழக்கவில்லை. அடுத்த வாய்ப்பினை வரும் தேர்தல் நமக்கு அளிக்கத்தான் போகிறது. அப்போது நாம் தவறான எண்ணங்களை கைவிடுவோமா (அ) அதனை தொடர்வோமா. தேர்வு செய்வது நம் கையில்தான் உள்ளது.

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்