இடுகைகள்

கோள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி!

  வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி ! விண்வெளியிலுள்ள வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி நவீனமடைந்து வருகிறது . 1960 ஆம் ஆண்டு ரேடியோ வானியலாளர் ஃபிராங்க் டிரேக் , விண்வெளியிலிருந்து வரும் சிக்னல்களில் மாறுதல்களை கண்டார் . அவர் பணியாற்றும் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள தொலைநோக்கி ஆய்வகத்தில் , 26 மீட்டர் அளவிலான தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது . இது , எபிசிலான் எரிசிலானி என்ற விண்மீனை கண்காணித்து வந்தது . அப்போது திடீரென அதன் கருவிகளில் சிக்னல்களை பெறும் வேகம் அதிகரித்தது . வேற்றுகிரகத்திலிருந்து உயிரினங்கள் பூமியைத் தொடர்புகொள்கின்றன என டிரேக் நினைத்தார் . சில நாட்கள் கழித்து தொலைநோக்கியில் முன்னர் கிடைத்தது போன்ற சிக்னல்கள் கிடைத்தன . பிறகுதான் அது ஆகாய விமானம் ஒன்றிலிருந்து பெறப்பட்டவை என தெரிய வந்தது . வானியலாளர் டிரேக் எபிசிலான் எரிசிலானி மற்றும் தாவ் செடி என்ற இரு விண்மீன்களை கண்காணிப்பதில் சுணங்கவேயில்லை . செவ்வாய் கோளை ஆராய்தற்கு பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் போலவே , வேற்றுகிரகவாசிகளின் புத்திசாலித்தனத்தை அறியும் ஆராய்ச்சி முற

நட்சத்திரங்கள் எத்தனை ஆண்டுகள் உயிர்வாழும்? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? கோள்களின் எடையை எப்படி தீர்மானிக்கிறார்கள்? அறுபது கிலோ தாஜ்மகால் என்று பெண்களை தோராயமாக வர்ணிப்பது போல அல்ல. கோள்களின் எடையை அதன் ஈர்ப்புவிசை எந்தளவு வீரியமாக உள்ளதோ அதை வைத்தே தீர்மானிக்கிறார்கள். புதிதாக கண்டுபிடிக்கும் கோள்களை அதன் குறுக்களவு, அதிலுள்ள கனிமங்களின் அளவு வைத்து எடை இவ்வளவு இருக்கும் கண்டறிந்து கூறுகிறார்கள்.  ஒரு கோள் எந்தளவு ஈர்ப்புவிசையைக் கொண்டு பிற கோள்களை ஈர்க்கிறது என்பதே இதில் முக்கியம். இதற்கு நியூட்டனின் ஈர்ப்புவிசை கொள்கைகள் பயன்படுகின்றன. ஒருகோளின் எடையை தனியாக கண்டுபிடிப்பதை விட அதற்கு ஒரு துணைக்கோள் இருந்தால் வேலை எளிதாகிவிடும். செயற்கைக் கோள் மூலம் அதன் ஈர்ப்புவிசை பற்றிய விவரங்களைப் பெற்று எடையைக் கணக்கிட முடியும். கோள்களில் புதன், வெள்ளிக்கு நிலவுகள் கிடையாது. இவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள ஈர்ப்பு விசை என்பது மிக குறைவு. இனிவரும் காலங்களில் நாம் விண்கலங்களைக் கொண்டு நேரடியாகவே கள ஆய்வுகளுக்கு சென்றுவிடலாம். இதனால் தோராய அளவுகளை கணிக்க வேண்டிய அவசியம் குறைவு.  நட்சத்திரங்கள் எத்தனை ஆண்டுகள் வாழும்? சூரியனும் ஒரு நட்சத்திரம்தான். இ

பால்வெளியில் ரேடியோ அலைவெடிப்பு!

படம்
  பால்வெளியில் ரேடியோ அலைவெடிப்பு கோள்களிலிருந்து ரேடியோ சிக்னல்கள் கிடைத்தது என அறிவியல் செய்திகள் படிக்கும்போது பலருக்கும் சந்தேகம் வரும். அதென்ன ரேடியோ சிக்னல்கள் என்று. விண்வெளியில் இருந்து வரும் கதிர்வீச்சுகளோடு கிடைக்கும் ரேடியோ அலைகளைத்தான் அப்படி வானியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  பால்வெளியிலிருந்து பல்வேறு அடையாளம் காணப்படாத செயல்பாடுகளின் விளைவாக , வரும் ரேடியோ அலைகளை 2013 ஆம் ஆண்டுக்கு முன்னதாக வானியலாளர்கள் குழப்பத்துடன் பார்த்து வந்தனர். இன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள ரேடியோ ஆன்டனாவில் தினசரி பத்திற்கும் மேற்பட்ட ரேடியோ அலை வெடிப்புகள் பதிவாகி வருகின்றன.  ரேடியோ அலைகள் பால்வெளியில் எப்படி உருவாகின்றன?  பிரகாசமான பொருளிலிருந்து வரும் ஒளி, எலக்ட்ரான்களையும் வேறு பல துகள்களையும் கொண்டுள்ளது. இது பழைய துகள்களை உடைத்து மின்காந்த அலை ஊடகத்தை உருவாக்குகிறது. இதிலுள்ள எலக்ட்ரான்கள் ரேடியோ அலைகளை உருவாக்குகின்றன என்பதே ஆய்வாளர்களின் ஆய்வு அறிக்கை. இது பற்றிய ஆய்வு அறிக்கை arxiv.org வலைத்தளத்தில் பதிவாகியுள்ளது.  2015 ஆம் ஆண்டு கனடாவின் மெக்கில் பல்கலையைச் சேர்ந்த வானியல

டைனோசர்கள் அழியாமல் இருந்திருந்தால்.....

படம்
மிஸ்டர் ரோனி டைனோசர்கள் அழியாமல் இருந்திருந்தால் அவர்களைக் கொண்ட குடிமைச்சமூகம் உருவாகி இருக்குமா? இனிய கற்பனைதான். ஆனால் நடக்க வாய்ப்புள்ளது. 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் விண்கல் மோதலால் உயிரிழந்தன. இதில் பறவைகள் தப்பிப் பிழைத்துவிட்டடன. இதில் முக்கியமான உயிரினம் வெலோசிராப்டர் என்பன. இவை இன்றுள்ள நாய்களைப் போன்ற புத்திசாலித்தனமான விலங்கினம். பெரிய மூளை சுறுசுறுப்பான புத்தியைக் கொண்டவை இவை. இவையும் கோள்களின் தாக்குதலில் அழிந்துபோய்விட்டன. ஆனால் அவை உயிருடன் இருந்திருந்தால் பரிணாம வளர்ச்சியில் அறிவு வளர்ச்சியில் பலபடி முன்னேறி வந்திருக்கும். வளர்ப்பு பிராணியாகவும் மாறியிருக்க வாய்ப்பு உள்ளது. நன்றி - சயின்ஸ் ஃபோகஸ்