வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி!
வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி!
விண்வெளியிலுள்ள வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி நவீனமடைந்து வருகிறது. 1960ஆம் ஆண்டு ரேடியோ வானியலாளர் ஃபிராங்க் டிரேக், விண்வெளியிலிருந்து வரும் சிக்னல்களில் மாறுதல்களை கண்டார். அவர் பணியாற்றும் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள தொலைநோக்கி ஆய்வகத்தில், 26 மீட்டர் அளவிலான தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது. இது, எபிசிலான் எரிசிலானி என்ற விண்மீனை கண்காணித்து வந்தது. அப்போது திடீரென அதன் கருவிகளில் சிக்னல்களை பெறும் வேகம் அதிகரித்தது. வேற்றுகிரகத்திலிருந்து உயிரினங்கள் பூமியைத் தொடர்புகொள்கின்றன என டிரேக் நினைத்தார்.
சில நாட்கள் கழித்து தொலைநோக்கியில் முன்னர் கிடைத்தது போன்ற சிக்னல்கள் கிடைத்தன. பிறகுதான் அது ஆகாய விமானம் ஒன்றிலிருந்து பெறப்பட்டவை என தெரிய வந்தது. வானியலாளர் டிரேக் எபிசிலான் எரிசிலானி மற்றும் தாவ் செடி என்ற இரு விண்மீன்களை கண்காணிப்பதில் சுணங்கவேயில்லை. செவ்வாய் கோளை ஆராய்தற்கு பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் போலவே, வேற்றுகிரகவாசிகளின் புத்திசாலித்தனத்தை அறியும் ஆராய்ச்சி முறைகளும் மேம்பட்டு வருகின்றன. ’’ வானியல் துறையில் நடக்கும் பல்வேறு மாற்றங்களை தீர்க்கமாக கூறிவிடமுடியாது.’’ என்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சேடி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரூ சீமியன்.
உலகம் முழுக்க நடைபெறும் விண்மீன்கள், ரேடியோ சிக்னல்களை ஆராயும் ஆராய்ச்சிக்கு இஸ்ரேலிய – ரஷ்ய தொழிலதிபர் யூரி மில்னர் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கி வருகிறார். தொலைநோக்கி மட்டுமல்லாமல் லேசர் ஒளியில் செய்திகளை எழுதி அனுப்பும் ஆராய்ச்சியாளர்களும் தனியே செயல்பட்டு வருகி்ன்றனர். இதுவரையில் சேடி மையத்தினர் வேற்றுகிரகத்திலிருந்து எந்த சிக்னல்களையும் இதுவரையில் பெறவில்லை. ஆனாலும் ஊக்கம் குறையாமல் ஆய்வில் ஈடுபட்டு வருகி்ன்றனர்.
கடந்த பிப்ரவரில் ஆஸ்திரேலியாவில் உள்ள பார்கெஸ் தொலைநோக்கி, க்ரீன் பேங்க் தொலைநோக்கி ஆகியவற்றிலிருந்து சிக்னல்களைப் பெற்ற தகவலை சேடி மையத்தினர் வெளியிட்டனர். இதிலிருந்து வேற்றுகிரக வாசிகள் வலிமையான ரேடியோ டிரான்ஸ்மிட்டரை பொரு்த்தியிருக்கலாம் என கருதுகின்றனர். தொலைநோக்கியில் மனிதர்களின் இடையீடான செல்போன் அலைகள் குறுக்கிடுவதால் இவற்றை வேறுபடுத்திப் பார்க்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகின்றனர்.
1961ஆம் ஆண்டு முதல் லேசர் ஒளியை செய்தியாக விண்ணுக்கு அனுப்பும் முயற்சி தொடங்கிவிட்டது. ரேடியோ அலைகளை அனுப்புவதை விட லேசர் ஒளியை அனுப்புவது அதிக செலவு பிடிக்க கூடியது. அமெரிக்காவின் அரிசோனாவிலுள்ள வெரிடாஸ் தொலைநோக்கி, காமா கதிர்கள் மூலம் நீலநிற செரன்கோவ் ஒளி உருவாக்கப்பட்டு விண்ணுக்கு அனுப்பிவருகிறது. இதன்மூலம் விண்ணிலிருந்து பெறும் லேசர் கதிர்களை பெற முடியும். உலகம் முழுவதும் உள்ள நான்கு தொலைநோக்கி ஆய்வகங்கள் இதற்கான ஆராய்ச்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
தகவல்
science news
sixty years into the search of E.T, Maria temmings, science news nov 21,2020
கருத்துகள்
கருத்துரையிடுக