நான் அவநம்பிக்கையும் பதற்றமும் நிறைந்தவள்தான்! எழுத்தாளர் நமிதா கோகலே

 






எழுத்தாளர் நமிதா கோகலே


நமிதா கோகலே

எழுத்தாளர். ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா துணை இயக்குநர்


தி பிளைண்ட் மேட்ரியாச் என்ற நூலை நீங்கள் கோவிட்டில் முற்காலத்தில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அதன் பிற்காலத்தைப் பற்றி நாம் எதுவுமே பேசவில்லையே?

நாவலின் வடிவம் எப்படி இருக்கிறது என்பது அதனை மேம்படுத்தும் எடிட்டர்களின் கையில்தான் உள்ளது. நாவலில் கூட ஏராளமான மக்களின் குரல்கள், கதைகள் உள்ளே வரும். இதனை சரியானபடி கட்டமைக்கவே நிறைய திறன் தேவைப்படுகிறது. 

தேசம் மற்றும் குடும்பம் என்ற இரண்டுமே ஒன்றையொன்று இடம் மாற்றிக்கொள்வது போல தோன்றுகிறது. உங்கள் நாவலில் இது தொடர்ச்சியாக நடைபெறுகிறது என்று கூறலாமா?

நாடு, குடும்பம் என்ற இரண்டுமே ஒன்றையொன்று பிரதிபலிக்கிறது என்று கூறலாம். இரண்டுமே ஒன்றையொன்று மாற்றிக்கொள்கிறது என்று கூற முடியாது. நாவலில் வரும் மாதங்கி நாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான பாரத மாதாக்களில் ஒருவள். அவள்தான் அவளது குடும்பத்தை வழிகாட்டி நடத்திச் செல்கிறாள். 

எழுத்தாளர் நமிதா கோகலே


நாவலில் நம்பிக்கையின் நடத்தை நாம் பார்க்க முடிகிறது. எப்படி ஒரே சமயத்தில் எதிர்மறையாகவும் நம்பிக்கையோடும் எழுத முடிகிறது. இது ஒரு மனிதராக சாத்தியமாகுமா?

நான் நானறிந்த மனிதர்களிலேயே அதிக ஆக்ரோஷமும் அவநம்பிக்கையும் நிறைந்தவள். மோசமான சூழல்களை கற்பனை செய்துகொண்டு வாழ்பவள். ஆனால் அந்த சூழலிலும் கூட வயிற்றில் இந்த சூழலை சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை உருவாகிக்கொண்டுதான் இருக்கிறது. 

ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவை இம்முறை நேரடியாக நடத்தவிருக்கிறீர்கள். டிஜிட்டலில் நடத்துவதற்கும் நேரடியாக நடத்துவதற்குமான வேறுபாடு எப்படி இருக்கிறது?

அது பாதுகாப்பை கருதி செய்தது. நேரடியாக திருவிழாவை நடத்துவது என்பதுதான் நான் விரும்புவது. அதனை எப்போதும் கைவிட முடியாது. ஜூமில் விழாவை நடத்துவது என்பது சோர்வுறச்செய்யக்கூடியது. இனி வரும் காலங்களில் கூட தொழில்நுட்பம் நமக்கு தரும் பல்வேறு வாய்ப்புகள் என்னென்ன என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். 

ஸ்ரீவஸ்தவா நெவாடியா

இந்தியா டுடே 


 







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்