சிப் தயாரிப்பில் நுழையும் நிலப்பரப்பு ரீதியான அரசியல்!
சிப் தயாரிப்பு |
சிப்களின் தயாரிப்பு முறை
கணினி மற்றும் வீட்டு பயன்பாட்டு பொருட்களில் பயன்படும் சிப்கள் காலத்திற்கேற்ப மாற்றங்களைப் பெற்று வருகின்றன.
முன்பு கணினிகளுக்கு பயன்பட்டு வந்த சிப்கள் இன்று கார், டிவி, சலவை இயந்திரம், ஸ்மார்ட்போன் என பல்வேறு சாதனங்களிலும் நீங்காத இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிப் தயாரிப்பு நிறுவனங்கள், தேவைக்கு ஏற்ப செயல்பட முடியாமல் தடுமாறின. இதன் காரணமாக, வீட்டு பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பொருட்கள் உற்பத்தி தேங்கத் தொடங்கியது. இதற்கு சிப் தயாரிப்பில் அரசு சரியாக கவனம் செலுத்தவில்லை என சிலரும், சிப் தயாரிப்பு நிறுவனங்கள் சந்தையில் குறைவாக இருப்பதால்தான் இப்படி ஒரு பிரச்னை ஏற்படுகிறது என விமர்சனங்கள் கிளம்பின.
உலகளவில் சிப் தொழிற்துறை 40 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டதாக உள்ளது. இன்று நாம் பயன்படுத்தும் ஆன்லைன் வங்கிச்சேவை, மின்னஞ்சல் என பல்வேறு சேவைகளின் பின்புலத்திலும் சிப்கள் உள்ளன. 1959ஆம் ஆண்டு பெல் ஆய்வகத்தைச் சேர்ந்த முகமது அடாலா மற்றும் டாவோன் காங் ஆகிய இருவர், அடிப்படை கணித செயல்பாடுகளுக்காக சிப்பை உருவாக்கினார். புரோசசர் சிப் என்பது அடிப்படை கணிதங்களைச் செய்வதற்காக டிரான்சிஸ்டர்களுடன் உருவாக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டு ஐபிஎம்மின் மெயின்ஃபிரேம் கணினி, ஏராளமான புரோகிராம்களை செயல்படுத்தும்படி உருவானது. ”இப்படி ஏராளமான பணிகளை செய்வதற்கான கோடிங்குகளை எழுதி வருகின்றனர். இவை அனைத்திற்கும் மேலாக கணினியின் இயக்கு முறைமை உள்ளது ” என்றார் வெஸ்டர் டிஜிட்டல் நிறுவனத்தைச் சேர்ந்த சிவா சிவராமன். இவரது நிறுவனம் உருவாக்கும் வன்தட்டுகளில் உலக மக்களின் 40 சதவீத தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளது.
கணினிகளில் பயன்படும் சிப்களில் இன்டெல், ஏஎம்டி ஆகிய நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. ஆனால் இவற்றின் விலை கூடிவருவது, நினைத்த மாற்றங்கள் இல்லை, அரசியல் காரணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஆப்பிள், ஹூவாய் ஆகிய நிறுவனங்கள் தமது செல்போன்களுக்கான புரோசசர் சிப்களை தாங்களே தயாரித்து வருகின்றன. கணினிக்கு புரோசசர் முக்கியமானது. இதில் ஏற்படும் சிக்கல்கள், பயனரின் தகவல்கள் காணாமல் போகவும் காரணமாகிவிடலாம். ஆண்ட்ராய்ட் இயங்கு முறையைப் போலவே பெர்க்கிலி பல்கலைக்கழகம் உருவாக்கிய ஆர்எஸ்ஐசி எனும் சிப் முறையை பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
திறமூல செயல்பாட்டை அடிப்படையாக கொண்டால் சிப்பில் எழும் பிரச்னைகளை எளிதாக சரி செய்யமுடியும். குறிப்பாக பாதுகாப்பு பற்றிய குறைபாடுகளை பிறரின் ஆலோசனைகளைப்பெற்று தீர்க்கலாம். இன்டெல் , ஏம்டி ஆகிய நிறுவனங்கள் விற்கும் சிப்பில் உள்ள கோடிங்குகளை அவர்களே கட்டுப்படுத்தும் வசதி உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக