இடுகைகள்

பன்ச் வசனங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சவாலே பன்ச் வசனங்கள்தான் - பாந்தம் படம் எப்படி?

படம்
பாந்தம் (தெலுங்கு) சக்கரவர்த்தி ரெட்டி கதை வசனம்: பாபி கோலி, ரமேஷ் ரெட்டி ஒளிப்பதிவு: பிரசாத் முரல்லா கோபிசுந்தர் உருப்படியான விஷயம் படத்தின் ஒளிப்பதிவுதான். கதாநாயகின் அழகை அம்சமாக காட்டுவதிலிருந்து அதிரடி சண்டைக்காட்சிகளை மிரட்டலாக பதிவு செய்திருக்கிறது. கோபி சுந்தரின் இசை பாடல்களில் பாந்தமாக மனதை தழுவுகிறது. ஐயகோ....... சக்கரவர்த்தி ரெட்டியின் இயக்கமும், ரமேஷ் ரெட்டியின் வசனமும் எப்படா படம் முடியும் என துயர நிலைக்கு தள்ளுகின்றன. ஏண்டா இப்படி அடிக்கிறே என்று வில்லனின் ஆள் கேட்கும் கேள்விக்கு ஐந்து நிமிடம் பன்ச் பேசுகிறார் கோபி சந்த். எங்க பாடி தாங்குமா வாத்யாரே? ஜென்டில்மேன் டைப் கதை. ஆனால் உணர்ச்சிகரமான ஒரு காட்சியைக் கூட சொல்ல முடியவில்லை. மனதை சென்டிமெண்டாக உருக்க, விபத்தில் பலியானவர்கள் அரசு அலுவலகங்களில் படும் பாட்டை சொல்லுகிறார்கள். தனியாகத் தெரிகிறது. மற்றொரு லூசு ஹீரோயின். கொள்ளையடித்து உதவும் ஹீரோவைக் கட்டிப்பிடித்து காதலித்து பாரீனில் பாடல் பாடி ஆடுகிறார். காதல் காட்சி, சோக காட்சி என அனைத்திலும் மெஹ்ரீன் அழகாக இருக்கிறார். அதற்காக இயக்கு