இடுகைகள்

காட்டேரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொலை செய்து ரத்தம் குடித்தால்தான் திருப்தி!

படம்
  பீட்டர் வில்லியம் சல்கிளிப் என்பவர், இங்கிலாந்தில் ஜாக் தி ரிப்பர் என்ற கதையை படித்தோம் அல்லவா? அதை முறையைக் கையாண்டவர். ஆனால் இன்னும் கொஞ்சம் ஸ்பீடு ஏத்து மாமா என டிஎஸ்பி இசையில் கூறுவதைப் போல குரூரத்தை இரண்டு ஸ்பூன் சேர்த்தார். பீட்டர், ஜாக்கைப் போலவே காவல்துறையினருடன் தனது கொலைகளைப் பற்றி பேசியவர்தான். ஆனால் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு அவரைப் பிடிக்கும்போது பதினைந்து பேர்களின் உயிர் பறிபோனது. பிழைத்தவர்களும் ஏன் பிழைத்தோம் என்ற அளவுக்கு உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டிருந்தன. முதலில் விலைமாதுக்களை தேடிப்பிடித்து குத்திக்கொல்ல ஆரம்பித்தார். குத்துவது என்றால் சாதாரணமாக அடிவயிற்றில் ஓங்கி குத்திக்கொல்வதோடு நிற்கவில்லை. கண்கள், கழுத்து, மார்பு, வயிறு, பெண் குறி என பதினான்கு முறை குத்திக்கொல்வது பீட்டரின் பாணி. இதனால் ஒருவர் உயிர்பிழைப்பது கடினம். அப்படி உயிர் பிழைத்து வாழ்ந்தால் அவரை பார்ப்பது நமக்கு கஷ்டமாக இருக்கும். அந்தளவு உடல் உறுப்புகளை உருக்குலைத்துவிடுவார் பீட்டர். விலைமாதுக்கள், வேலை செய்யும் பெண்கள், கல்லூரி மாணவர்கள் என கொலைக்கு தேவையான பொருட்களை மாற்றிக்கொண்டார். ஏன் இ