கொலை செய்து ரத்தம் குடித்தால்தான் திருப்தி!

 












பீட்டர் வில்லியம் சல்கிளிப் என்பவர், இங்கிலாந்தில் ஜாக் தி ரிப்பர் என்ற கதையை படித்தோம் அல்லவா? அதை முறையைக் கையாண்டவர். ஆனால் இன்னும் கொஞ்சம் ஸ்பீடு ஏத்து மாமா என டிஎஸ்பி இசையில் கூறுவதைப் போல குரூரத்தை இரண்டு ஸ்பூன் சேர்த்தார். பீட்டர், ஜாக்கைப் போலவே காவல்துறையினருடன் தனது கொலைகளைப் பற்றி பேசியவர்தான். ஆனால் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு அவரைப் பிடிக்கும்போது பதினைந்து பேர்களின் உயிர் பறிபோனது. பிழைத்தவர்களும் ஏன் பிழைத்தோம் என்ற அளவுக்கு உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டிருந்தன.

முதலில் விலைமாதுக்களை தேடிப்பிடித்து குத்திக்கொல்ல ஆரம்பித்தார். குத்துவது என்றால் சாதாரணமாக அடிவயிற்றில் ஓங்கி குத்திக்கொல்வதோடு நிற்கவில்லை. கண்கள், கழுத்து, மார்பு, வயிறு, பெண் குறி என பதினான்கு முறை குத்திக்கொல்வது பீட்டரின் பாணி. இதனால் ஒருவர் உயிர்பிழைப்பது கடினம். அப்படி உயிர் பிழைத்து வாழ்ந்தால் அவரை பார்ப்பது நமக்கு கஷ்டமாக இருக்கும். அந்தளவு உடல் உறுப்புகளை உருக்குலைத்துவிடுவார் பீட்டர். விலைமாதுக்கள், வேலை செய்யும் பெண்கள், கல்லூரி மாணவர்கள் என கொலைக்கு தேவையான பொருட்களை மாற்றிக்கொண்டார்.

ஏன் இப்படி செய்தீர்கள் என பதினாறு மணிநேரம் விசாரித்தபோது, கடவுளின் குரல் காதில் கேட்டது. எனவே அவர்களைக் கொன்றேன் என்றார். காவல்துறை பீட்டரை கொத்தாக தூக்கும்போது, கையில் கத்தி, ஸ்க்ரூ டிரைவர் என ஐந்து வகை கருவிகளை வைத்திருந்தார். அதை மறைக்கவும் வேறு செய்தார்.

போஸ்ட்மார்டம் செய்யும் பணியாளராக முதலில் வேலை பார்த்த அனுபவம் பீட்டருக்கு பிழைக்க உதவியதோ இல்லையா அவரது மனதில் இருந்த வக்கிரத்தை உலகிற்கு காட்ட பயன்பட்டது. முதலில் பீட்டரின் ரெக்கார்ட் என்பது பதினைந்து மாதங்களில் ஏழு கொலைகள் என இருந்தது. பின்னர்தான் இந்த ட்ராக் ரெக்கார்ட் இன்னும் கூடி, ஆல்டைம் ரெக்கார்டாக மாறியது. குற்றங்கள் உலகிற்கு தெரிய வந்தபிறகு, நீதிமன்றம் ஆயுள் தண்டனையை வழங்கியது.

போதைப்பொருட்களும் கூட வன்முறையைத் தாண்டும் என்பதற்கு சேஸ் வழக்கு உதாரணம். இவருக்கு யாரைக் கொலை செய்கிறாரோ அவரை இரக்கமின்றி புன்னகையுடன் கத்தியால் குத்திக்கொல்வார். கூடுதலாக டம்ளர் ஒன்றை எடுத்து கொட்டும் ரத்தத்தைப் பிடித்து வைத்து குடிப்பார். சிறுவயதில் நாய், பூனை, சேவல் என கிடைக்கும் எந்த விலங்காக இருந்தாலும் பிடித்து கொன்று ரத்தம் பிடித்து குடிப்பார். வளர்ந்தபிறகு விலங்குகளை பிடிப்பது கடினமாக இருக்கிறது. இதோ மனிதர்கள்தான் பக்கத்தில் இருக்கிறார்கள் என அவர்களைப் பிடித்து கொன்று ரத்தம் குடித்தார். இவரை காவல்துறையினர் காட்டேரி என்று அழைத்தனர்.

1978ஆம் ஆண்டு தெரசா வாலின் என்ற 22 வயதுப் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்தார். நுழைந்தவுடன் அறையைத் தேடிப்பிடித்து தெரசாவை இருமுறை சுட்டார். அதில் அந்த பெண் இறந்ததும் உடலை இழுத்து அவரின் படுக்கை அறைக்கு கொண்டு சென்று இடது மார்பு அருகில் கத்தியால் கீறி அப்படியே கீழே இழுத்தார். சிறுநீரகத்தை வெட்டி எடுத்தார். கணையத்தை இரண்டு துண்டாக்கினார். கூடவே உடலை கத்தியால் நினைத்தபோதெல்லாம் குத்தி சல்லடை போலாக்கினார். குப்பைக் கூடையில் இருந்த காபி குவளை ஒன்றை எடுத்து தெரசாவில் உடலில் பீய்ச்சியடித்த ரத்தத்தை நிதானமாக பிடித்து குடித்தார்.

சில மாதங்கள் கழித்து மிரோத் என்ற பெண்மணி வீட்டுக்கு நுழைந்தவர், அவரையும், ஆண் தோழரையும் சுட்டுக் கொன்றுவிட்டு குழந்தையை கையில் தூக்கிக்கொண்டார். குழந்தையில் தலையை வெட்டி எறிந்தவர், உடலில் உள்ள பிற உறுப்புகளை வெட்டி எடுத்து தின்றார். பின்னாளில் ஆறு கொலைகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர் போதைப்பொருட்களை அதிகம் பயன்படுத்தி இறந்துபோனார்.

காட்டேரி சேஸைப் பொறுத்தவரை அவர் போதைப்பொருட்களைப் பயன்படுத்தி அதனால் ஏற்பட்ட கற்பனைக் காட்சிகளால் கொலைகளை செய்தார். பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் கூட அவரை முழுமையாக உளவியல் ஆய்வுகளை செய்யவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட விளைவுகளைத்தான் மேலே நீங்கள் படித்தீர்கள்.

அமெரிக்காவில் வாழ்ந்த ஹாரிசன் என்பவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் தங்கியிருந்த அறையில் கடுமையான துர்நாற்றம் அடிக்கிறது என பிறர் காவல்துறைக்கு புகார் செய்ய, அவர்கள் வந்து சோதித்தனர். அறையில் ஆறு பெண் பிணங்களை வைத்திருந்தார். அதில் ஆறாவது பெண்ணின் மண்டையோடு உடைந்து போனதால்தான் அந்தளவு துர்நாற்றம். ஏண்டா இப்படி? என காவல்துறை கேட்டதற்கு, செக்ஸ் வெச்சுக்கும்போது ஏற்பட்ட சண்டையில் செத்துட்டாங்க. அவங்களோடு நினைவாக அப்படியே வெச்சிருக்கேன் என தகவல் சொன்னார் கிரகாம். விடுவார்களா காவல்துறையினர்? கிரகாமிற்கு மனநிலை பிரச்னை சிறுவயதில் இருந்தே இருந்திருக்கிறது. அவரது முன்னாள் காதலி கூட அழுக்கான பொம்மையை வைத்துக்கொண்டு அதோடு இடையறாமல் பேசிக்கொண்டிருப்பான் என பொறாமையோடு பதில் சொன்னார். நீதிமன்றத்திற்கு கொஞ்சல், கெஞ்சலா முக்கியம். ஆதாரம் அதன் அடிப்படையில் அ(நீதி) அதானே எல்லாம். கிரகாமிற்கு சட்டப்படி மரண தண்டனை வழங்கப்பட்டு பிறகு அது ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.

இறந்தவர்களின் நெஞ்சம் இதை மறக்குமா, மன்னிக்குமா?


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்