பிடிஎஸ்எம் வாழ்க்கை முறையும், கலாசாரமும்!

 










பிடிஎஸ்எம் முறையைப் பொறுத்தவரை அது ஒரு வாழ்க்கை முறை. அதைப் பிடித்தால் அவர்கள் கம்யூன் போல வாழும் குழுக்களோடு சேர்ந்து அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். இணையத்தில் இப்படி இயங்குபவர்கள் ஏராளமான ஆட்கள் உண்டு.

எந்த உறவிலும் நம்பிக்கை முக்கியமானது. அந்த நம்பிக்கையை யார் மீது வைக்கிறீர்கள் என்பது தனிநபர்களைப் பொறுத்தது. தவறான தகுதியில்லாத நபர்கள் மீது அன்பை செலுத்தி திரும்ப அன்பு கிடைக்காதபோது யாருக்குமே விரக்தியாகும். பிடிஎஸ்எம் முறையிலும் இந்த ஆபத்து உண்டு. எனவே நீங்கள் ஒருவரை நம்பினால் பிடிஎஸ்எம் முறையை பின்பற்றுங்கள். இல்லாதபோது அது சுரண்டல் என்பதாகவே மனதில் கருத்து உருவாகும்.

ஒருவர் நம்பும் கலாசாரப்படி பிடிஎஸ்எம் முறை இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் ஒரே பதிலாக இருக்க முடியும். இந்த முறையை நீங்கள் கையாள்கிறீர்கள், கடைபிடிக்கிறீர்கள் என்றால் முழுமையாக அதன் சாதக பாதகங்களை அறிந்துகொள்வது அவசியம். அப்படியல்லாதபோது பிரச்னை ஏற்படவே வாய்ப்பபு அதிகம்.

இன்றைக்கு தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது, ஓரினச்சேர்க்கையாளர்கள் மணம் செய்வது, தன்னை குறிப்பிட்ட பாலினமாக வெளிப்படுத்துவது என்பது நடந்துவருகிறது. இந்த நிலையில் பிடிஎஸ்எம் வாழ்க்கை முறையை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால் இது சுயமான உங்களது தேர்வு உரிமைதான். எந்த முறையும், அமைப்புகளும் பிழையின்றி அமைவதில்லை. எனவே, அதைப்புரிந்துகொள்ளுங்கள்.

பிடிஎஸ்எம் முறையை வரலாற்றில் தேடினால் கிடைக்கும் பதில்கள் மிக குறைவுதான். தொன்மையான ஸ்பார்டாவில் ஆர்டெமிஸ் ஆர்தியா எனும் இடத்தில் பிடிஎஸ்எம் முறைகளை கடைபிடிக்கப்பட்டுள்ளன. காலம் ஒன்பதாம் நூற்றாண்டு.

வாத்சாயனார் என்ற துறவி எழுதிய காமசூத்ரா நூலில் கடிப்பது, கிள்ளுவது, அடிப்பது, ஆகியவை இன்பத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளாக சித்தரிக்கப்பட்டுள்ளன. சில பெண்களுக்கு இதுபோல உடலுறவின்போது நடந்துகொள்வது இன்பத்தைக் கொடுக்கும் என வாத்சாயனார் குறிப்பிட்டுள்ளார். உடலைக் குறிப்பிட்ட இலக்காக வைத்து இன்பத்தை அனுபவிப்பது, சாடோமாசோசிஸ்டிக் நடவடிக்கைகளில் வரும்.

மேற்குலகில் மக்கள் குடிமைச்சமூகமாக வளர்ச்சி பெற்றறபோது பிடிஎஸ்எம் முறைகளை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளனர். 1749ஆம் ஆண்டு எழுதப்பட்ட நாவலின் பெயர் ஃபானி ஹில். இதில் எழுத்தாளர் ஜான் கிளிலேண்ட், பிடிஎஸ்எம் முறைகளை ஒரு சம்பவத்தில் குறிப்பிடுகிறார்.

புகைப்படக் கலைஞர்களான ஹெல்மட் நியூடன், ராபர்ட் மாப்பிள்தோர்ப் ஆகிய இருவரும் பிடிஎஸ்எம் செயல்பாடுகளை நவீன புகைப்படக்கலையில் கொண்டு வந்தனர். இதனால் மக்களுக்கு அந்த வாழ்க்கை முறை பற்றி அறிமுகம் கிடைத்தது.

பிடிஎஸ்எம் முறைகளை இரண்டு வழிகளில் ஒருவர் கடைபிடிக்கலாம். ஒன்று நடைமுறையில் நீங்கள் உங்களுக்கான இணையரைத் தேர்ந்தெடுத்து டாமினன்ட்/ சப்மிசிவ் என முறையை கடைபிடிக்கலாம். அல்லது இணையத்தில் கூட நீங்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து பிடிஎஸ்எம் வாழ்க்கை முறையை வாழலாம். ஆனால் இந்த முறையில் மனதளவில்தான் அனைத்தும் நடக்கும். உடல் ரீதியாக தொடுதல் நடக்க அதை நடைமுறையில் அதாவது ரியல் லைஃப் சுருக்கமாக ஆர்எல் முறையில் கடைபிடிக்க வேண்டும். இணைய முறையை சைபர் என சுருக்கமாக கூறுகிறார்கள்.

 


கருத்துகள்