தஸ்தயேவ்ஸ்கி நாவலைப் படித்துவிட்டு பெண்களை வல்லுறவு செய்த பிராடி மைரா ஜோடி!

 




ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயேவ்ஸ்கி






 பொதுவாக தொடர் கொலைகாரர்கள் தங்களின் மனநிலையை பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்து யாருடன் சரியான பொருத்தம் இருக்கிறதோ அவர்களுடன் பொருத்திக்கொள்வார்கள். இனி நீங்கள் படிக்கப்போகும் நபரும் கூட அப்படித்தான் கொஞ்சம் கோக்குமாக்கான ஆள்.

தஸ்தயேவ்ஸ்கி எழுதிய குற்றமும் தண்டனையும் படித்துவிட்டு அதிலுள்ள பாத்திரம் ஒன்றின் செயல்களின் மீது ஈர்க்கப்பட்ட குற்றவாளி, மெல்ல அப்படியே அதன் ஆதர்சமாக கொலைகளை செய்யத் தொடங்கனார். இதெல்லாம் நம்புகிறமாதிரியாக இருக்கிறதா என்றால் சூப்பர் |ஸ்டார் படங்களை ரசிகர்கள் யாராக நினைத்துக்கொண்டு பார்க்கிறார்கள். அதே மனநிலைதான். அந்த மனநிலையை ஒருவர் ஒரு மணிநேரம் கொண்டிருக்கலாம். ஆனால் வாழ்நாள் முழுக்க பித்தேறி திரிந்தால் எப்படியிருக்கும்?

இயான் பிராடி. பிரிட்டனைச் சேர்ந்தவர். இவர் சிறையில் இருந்தபோது எழுதிய சுயசரிதை நூலின் பெயர் தி கேட்ஸ் ஆஃப் ஜானுஸ். அதில் தனது உலகைப் பற்றிய உண்மைகளை விவரித்திருப்பார். குற்றமும் தண்டனையும் நூலில் உள்ள ரஸ்கோல்னிகோவ் என்ற பாத்திரத்தை தனது ஆதர்சமாக கொண்டு குற்றவாழ்க்கையை தொடங்கினார். நூலில் இந்த பாத்திரம் எந்த பின்விளைவுகளையும் அறியாமல் கொலையை செய்யும். சமூகத்திற்கு தேவை இல்லை என்று நம்பிக்கை கொண்டு வயதான பெண்மணி ஒருவரை கொன்றுவிட்டு, இன்னொரு பெண்மணியையும் பரலோகத்திற்கு அனுப்புவார் ரஸ்கோல்னிகோவ். ஸ்காட்லாந்தின் கிளாக்ஸோவில் வளர்ந்தவர். சிறு குற்றங்களுக்காக சிறை சென்று அங்குதான் ஹிட்லர், நாஜியிச கொள்கைகளைப் படித்து தன்னை உயர்வாக கருதும் மனநிலைக்கு வந்தார்.

அப்போதுதான் பிராடிக்கு இளம் வயது காதலியும் கிடைத்தார். அவர் பெயர் மைரா. இருவரும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் போது பிராடியின் நூல் வாசிக்கும் பழக்கமும், புத்திசாலித்தனமும் மைராவுக்கு அவர் மேல் காதல் வர காரணமாக இருந்தது. இந்த காதல் எதுவரை சென்றது என்றால் பிராடி வல்லுறவு செய்ய சிறுமிகளை அழைத்து வரும்வரை சென்றது. 1963ஆம் ஆண்டு தொடங்கி பிராடி வல்லுறவு செய்து கொலைகளை செய்யத் தொடங்கினார். இதற்கு மைரா ஒத்துழைப்பு கொடுத்தார். பிராடி, மைராவுக்கு தனது நம்பிக்கை, வன்முறையான செயல்பாடுகள் பலவற்றையும் சொல்லிக்கொடுத்து அவரை மனதளவில் தனது கூட்டாளி ஆக்கினார். மைராவுக்கு பிராடி என்ன சொன்னாலும் செய்துவிடவேண்டும் என்ற வெறியே மனதில் கிளர்ந்தெழுந்துவிட்டது. பிறகு மைராவின் உறவினரான  ஒருவர் மூலம் காவல்துறையில் பிடிபட்டனர்.

சிறையில் பிராடி, மைரா என இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மைரா, கத்தோலிக்க மதத்திற்கு மாறினார். பிறகு பேசும்போது செய்த கொலைகள் அனைத்துக்குமே பிராடி தான் காரணம் என மைரா சொன்னார். உடனே பிராடி, கொலைகளை செய்தது மைராதான் என சாதித்தார். இருவரின் கொலைக் குற்றங்களுக்கு நீதிமன்றம் இருவருக்கும் சேர்ந்து ஆயுள் தண்டனை கொடுத்த பிறகுதான் இருவருக்கும் இந்த வாக்குவாதம் நடந்தது. நூலில் தொடர் கொலைகாரர்கள் ஒருநாள்தான் பூமியில் வாழ்ந்தாலும் அவர்கள் சிங்கம் போன்றவர்கள். பிற மக்களைப் போன்ற ஆட்டுக்கூட்டம்  கிடையாது என உறுதியாக கூறியிருக்கிறார். எனவே கொலைகளை பிராடி திறமையாக திட்டமிட்டு செய்திருக்கிறார் என நம்பலாம்.

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்