அசுரகுலம் 3- ரத்தசாட்சி மின்னூல் வெளியீடு

 











அசுரகுலம் 3

ரத்தசாட்சி

மின்னூல் வெளியீடு

 

ரத்தசாட்சியை எழுதவேண்டும் என தீவிரமான எண்ணம் அண்மையில்தான் எழுந்தது. பொதுவாகவே மின்னூல்களை ஜெயமோகன் போல ஆயிரம் பல்லாயிரம் பக்கங்களில் எழுதுவது எனக்கு உடன்பாடில்லை. எனவே இதுவும் 75 பக்கங்களைக் கொண்ட நூல்தான். எனவே எளிதாக நீங்கள் கிண்டில் மூலம் வாசித்துவிட முடியும்.

ரத்தசாட்சி, அசுரகுலத்தின் வரிசையில் கொலைகாரர்களின் குற்றம் மற்றும் உளவியல் பற்றி பேசுகிறது. இதன் வரிசை உடலுறவு, கோபம், பணம் என எதை அடிப்படையாக கொண்டு கொலைகளை குற்றங்கள் நடத்தப்படுகிறது என்பதை ஆராய்கிறது. நூலில் நடைபெறும் குற்றங்கள் பெரும்பான்மையானவை மேற்குலகை அடிப்படையாக கொண்டவை.

பொதுவாக மேற்குலகில் அறிவியல் வளர்ந்திருப்பதோடு குற்றங்களை ஆவணப்படுத்தி வைக்கும் பழக்கமும் உண்டு. இந்த வகையில் குற்றங்களின் தொடர்ச்சி, அதன் குறிப்பிட்ட அடையாளங்கள், தன்மை, குற்றவாளிகள் என எளிதாக அடையாளம் கண்டு குற்றவாளிகளை கைது செய்கிறார்கள். அடையாளங்களை வைத்து சீரியல் கொலைகாரர்களை காவல்துறையினர் கைது செய்கின்றனர். அதேசமயம் குற்றவாளிகளே காவல்துறையினருக்கு சிலி பிடிமானங்களைக் கொடுத்து முடிந்தால் என்னைப் பிடி என சவால் விடுவதும் உண்டு. இந்தவகையில் ஜாக் தி ரிப்பர், பிடிகே ஆகியோர் முக்கியமானவர்கள்.

நூலை அமேசான் தளத்தில் வாசிக்க

 https://www.amazon.in/dp/B0BPCLNKG2



கருத்துகள்