ஐஸ்லாந்தில் அமையப்பெற்ற அழகிய தேசியப்பூங்கா!

 










திங்வெல்லிர்

அமைந்துள்ள இடம் – ஐஸ்லாந்து

கலாசார அங்கீகாரம் பெற்ற ஆண்டு – 2004

ஐஸ்லாந்து நாட்டில் அமைந்துள்ள பழமையான தேசியப் பூங்காவின் பெயர் திங்வெலிர். 930ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு மாற்றங்களைக் கண்டு வந்துள்ள இடம் இது. இரண்டு மலைச்சிகரங்களுக்கு நடுவில் அமைந்துள்ள அல்மனாக்ஜாவில் தேசியப் பூங்கா உள்ளது. நாட்டின் முதல் ஜனநாயக நாடாளுமன்றமும் இங்குதான்  முதன்முதலில் உருவாகி இயங்கி வந்தது. வடக்கு அட்லாண்டிக் நடுவில் உள்ள தீவை நார்ஸ் என்பவர் கண்டுபிடித்தார். இதற்கான காலம் அறுபது ஆண்டுகள்.  

1262ஆம் ஆண்டு நார்வே ஐஸ்லாந்தை கட்டுப்படுத்தி ஆண்டது. திங்வெல்லிர் என்ற இடமானது கிறிஸ்துவ மக்களுக்கான புனித இடம். இங்குள்ள மக்கள் எந்த வன்முறையும் இல்லாமல் தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டனர். இங்கு செல்பவர்கள் வட அமெரிக்க கண்டத்தட்டு, ஐரோப்பிய கண்டத்தட்டு என இரண்டிலும் பயணிக்க முடியும்.அட்லாண்டிக்கின் நடுப்பகுதியில் நீளமான மலைத்தொடர்களைக் கொண்ட நாடு ஐஸ்லாந்து.

ஆக்சாரா என்ற ஆறு இங்கே ஓடுகிறது. அல்மனாக்ஜாவிலிருந்து திங்வல்லவட்டன் எனும் இடத்திற்கு அருவியாக மாறி செல்கிறது. திங்வல்லவட்டான் எனும் இயற்கை பூங்கா 84 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்குள்ள சில்ஃப்ரா என்ற இடம் டைவர்களால் அதிகம் சிலாகிக்கப்படுகிறது. ஆனாலும் இந்த இடத்திற்கு செல்ல முதலிலேயே புக் செய்ய வேண்டும்.

1930ஆம் ஆண்டு தேசியப்பூங்கா என அறிவிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை ஐ|ஸ்லாந்து  வரவேற்கத் தொடங்கியது. யுனெஸ்கோ அங்கீகாரம் 2004ஆம் ஆண்டு கிடைத்தது.  

வேர்ல்ட் ஹெரிடேஜ் சைட்ஸ்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்