சாத்தானின் விசுவாசியால் கொல்லப்பட்ட மக்கள்!

 










அசுரகுலம்

ரத்த சாட்சி 1.0

 

சில கொலைகாரர்கள் உண்டு. இவர்கள் கொலை செய்வது என்பது தங்களின் மகிழ்ச்சிக்காகவே. போரில் ராணுவ வீரர்களைப் பாருங்கள். அவர்கள் அவர்களின் அடையாளம் அறியாத இன்னொரு நாட்டு ஆட்களை கொல்லுகிறார்கள். எதற்காக, அவர்களைப் பற்றி வீர ர்களுக்கு தெரிந்திருக்காது. அவர்களுக்கு குடும்பம் இருக்கலாம். குழந்தைகள் இருக்கலாம். ஆனால் ராணுவ வீர ர்களைப் பொறுத்தவரை கட்டளைகளை மீறாமல் சட்டத்திற்கு உட்பட்டு கொலைகளை செய்கிறார்கள். கேட்டால் தேசியவாதம், நாட்டுப்பற்று என ஏதேனும் உளற வேண்டும்தான். இதற்கான உருட்டுகளைத்தான் காசுக்கு விலைபோன இன்றைய இந்தியா, குடியரசு, மற்றும் தொழிலதிபர்கள் நடத்தும் செய்தி சேனல்கள் போன்ற ஊடகங்கள் செய்வார்கள்.

மக்களைக் கொல்ல நாட்டுப்பற்று மட்டுமல்ல மதமும் கூட ஒரு கருவிதான். இன்று இந்தியாவில் சிறுபான்மையினர் மீது அதிகளவில் மத ரீதியானபடுகொலைகள்தான் அதிகம். அந்த வகையில் ரிச்சர்ட் ராமிரெஸ் பற்றி அறிந்திருப்பீர்கள். இவர் சாத்தனை வழிபடுவதாக தன்னைக் கூறிக்கொண்டவர். குத்துபட்டு, ரத்தம் பீறிட ஒருவர் இறப்பதைப் பார்ப்பதே தனக்கு மகிழ்ச்சி என சிறைக்காவலர்களிடம் பேசியவர் ராமிரெஸ். ராமிரெஸ் ஒருவர் இறந்தபிறகும் அவரை கத்தியால் குத்தி கண்டதுண்டமாக்குவார்.

கண்களைத் தோண்டி எடுத்துக்கொண்டு செல்வார். இதோடு ஆர்வம் இருக்கும் நேரங்களில் வல்லுறவும் செய்வார். இவருக்கு உறவினரான மைக் என்பவர்தான் ரோல்மாடல். அவர் வியட்நாம் போரில் பங்கு பெற்று ஏராளமான பெண்களை வல்லுறவு செய்து கொன்றார். நாட்டுப்பற்றுதான் இதற்கு காரணம் என சமாதானம் செய்தார். பிறகு வீட்டுக்கு வந்து ஒருமுறை கோபத்தில் அவரது மகன் கண்முன்னே மனைவியை சுட்டுக்கொன்றார். வியட்நாமில் தான் செய்த கொலைகளை புகைப்பட ஆல்பமாக்கி வைத்து பார்த்து மகிழ்வார். ராமிரெசுக்கும் அதைக் காட்டி வீரியமிக்க ஆணாக அவரை மாற்றினார்.

 இதன் விளைவாகத்தான் நிறையப் பேர் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

 

 


கருத்துகள்