இடுகைகள்

விஷம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூச்சி, தேனீக்களை வைத்தே கொலைவழக்கில் துப்புதுலக்கும் பூச்சி வல்லுநர்! - இன்செக்ட் டிடெக்டிவ் 1

படம்
    இன்செக்ட் டிடெக்டிவ் சீன தொடர் யூட்யூப் ஓவியத்தை அடிப்படையாக கொலை வழக்குகளை பார்த்தோம் அல்லவா.. அதேபோல, இந்த தொடர் பூச்சிகளை, புழுக்களை, எறும்புகளை அடிப்படையாக கொண்டது. நாயகனுக்கு மோசமான இறந்தகாலம் உள்ளது. அப்பா கார் விபத்தில் இறந்துபோகிறார். அம்மா, வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து இறக்கிறார். பாட்டிதான் நாயகன் ஜின்டிங்கை வளர்க்கிறார். மாமா சூ, ஆதரவாக இருக்கிறார். உண்மையில் வங்கி நடத்திய அப்பாவின் விபத்துக்கு யார் காரணம், அம்மா மாடியில் இருந்து கீழே விழுந்தது எப்படி என்பதற்கான காரண காரியங்களை தொடர் தேடுகிறது. முதல் எபிசோடில், ராட்டினம் ஒன்றில் மாணவர் நாக்கை கடித்தபடி வாயில் ரத்தம் வழிய இறந்துகிடக்கிறார். அங்கு சென்ற காதலர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்கிறார்கள். இறந்தவர் ஸ்மார்ட் வாட்ச் வழியாக நண்பர்கள் சிலருக்கு போன் செய்திருக்கிறார். அதில் ஒருவர்தான் பூச்சிகளை ஆராய்ச்சி செய்யும் நாயகன் ஜின். இன்ஸ்டிடியூட்டில் பிஹெச்டி படித்துக்கொண்டிருக்கும் மாணவர் ஜின் மீது காவல்துறை சந்தேகப்படுகிறது. விசாரிக்க போகும்போது அறையை மூடி தேனீக்களைப் பற்றிய ஆராய்ச்சியை செய்துகொண்டிருக்கிற...

காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கோணுங்க.....

படம்
              காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கோணுங்க..... மிளகாயின் காரம், உடலில் வெப்பத்தையும் வலியையும் ஏற்படுத்தக்கூடியது. ஆனால் அப்படி இருந்தாலும் கூட மக்கள் அதை உணவில் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அதிக காரம் கொண்ட சிவப்பு மிளகாய், சீனி மிளகாய் என எந்த ரகம் வந்தாலும் அதில் தூள் வாங்கி அல்லது நேரடியாகவே வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஏன் இந்த காரசார மோகம்? அண்மையில், டென்மார்க் நாட்டின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தென்கொரிய நாட்டின் மூன்று வகை நூடுல்ஸ் வகைகளை விஷத்தன்மை கொண்டதாக அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு காரணம், அந்த மூன்று வகை நூடுல்ஸ்களுமே அதீத காரச்சுவையைக் கொண்டவை. குழந்தைகளுக்கு இந்த நூடுல்ஸ் வகைகளை உண்ணக்கொடுப்பது ஆபத்து. இதில் காப்சைசின் என்ற வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளது. இதுவே காரத்தன்மையை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளனர்.  தெற்கு, மத்திய அமெரிக்காவிலிருந்து மிளகாய் செடியை உலகிற்கு அறிமுகம் செய்தவர், கிறிஸ்டோபர் கொலம்பஸ். இவர் மூலமே காப்சிகம் என்ற அறிவியல் பெயர் கொண்ட மிளகாய், சந்தையில் இருக்கிறது. நம் உணவிலும் காரச...

எட்டு வஞ்சகர்களால் கொல்லப்பட்ட இரண்டு வாள் வீரர்களின் பிள்ளைகள் போடும் பழிக்குப்பழி திட்டம்!

படம்
 தி ஹைடன் ஃபாக்ஸ்  சீன திரைப்படம்  ஒன்றரை மணி நேரம் ஐக்யூயி ஆப் இரண்டு சிறந்த வாள் வீரர்கள், எட்டு எதிரிகளால் நயவஞ்சகமாக வாளில் விஷம் வைத்து கொல்லப்படுகிறார்கள். அவர்களின் இறப்பிற்கு, அவர்களது பிள்ளைகள் பழிவாங்குவதுதான் கதை.  இந்த திரைப்படத்தின் பலமே சண்டைக்காட்சிகளும். திடீரென நடக்கும் பல்வேறு திருப்பங்களும்தான்.  ஒரே வரியில் மேலே கதையை சொன்னாலும் படத்தை பார்ப்பவர்களுக்கு நாயகன் யார், எதனால் இப்படி துரோகியாக மாறி நடந்துகொள்கிறான் என்பது புரியாது. அதற்கெல்லாம் இறுதியாகத்தான் பதில் சொல்கிறார்கள். திரைப்படம் எடுத்த வகையிலும் நிறைய மெனக்கெடல் உள்ளது. இறுதிக்காட்சி முழுக்க பனிபோர்த்திய இடத்தில் நடக்கிறது. அதுவே ஒரு  சொல்ல முடியாத திகிலை, பயத்தை மனதில் ஏற்படுத்துகிறது.  ஹூ யிடாவோ என்ற வாள் வீரர் ஒரு பொக்கிஷத்திற்கான சாவியை வைத்திருக்கிறார். அதற்கான வரைபடமும் இருக்கிறது. அதைப் பெறவே எட்டு வில்லன்கள் அவரையும், இன்னொரு எதிராளியையும் திட்டமிட்டு மோதவிட்டு விஷம் வைத்து கொல்கிறார்கள். ஆனால் அவர்கள் அறியாத விஷயம், அந்த பொக்கிஷத்தை அவ்வளவு எளிதாக பெற முடியாது....

மூன்றாவது பிறப்பில் எதிரிகளை நாயகன் எதிர்கொண்டு வெல்வானா?

படம்
  அகெய்ன்ஸ் காட்ஸ்  மாங்கா காமிக்ஸ்  மான்வா.காம்.  இதில் நாயகன் பலவீனமானவன். அவனுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. அந்த திருமணம் கூட ஒரு நன்றிக்கடனை கழிக்கவே செய்யப்படுகிறது. திருமணத்திற்கு மாப்பிள்ளை கழுதையில் உட்கார வைத்து அழைத்து வரப்படுகிறான். அவனது சொந்தக்காரர்கள் இப்படி அவமானப்படுத்துகிறார்கள். மாப்பிள்ளை பலவீனமான உதவாக்கரை என ஊருக்கே தெரிகிறது. அதாவது அவன் தற்காப்புக்கலை கற்க முடியாதபடி உடலில் பிரச்னை இருக்கிறது. மேலும் அவனது அண்ணணுக்கே, தம்பி கட்டிக்கொள்ளும் பெண் மீது பொறாமை உள்ளது. எனவே,  தம்பிக்கு விஷத்தை டானிக் என கொடுத்து குடிக்கச் செய்கிறான். அப்போது அவனது உடலில் வேறு ஆன்மா ஒன்று குடியேறுகிறது.  அந்த ஆன்மாவினுள்ளே பொக்கிஷமாக கருதப்படும் விஷம் உள்ளது. அந்த விஷம் டானிக்கிலுள்ள விஷத்தை முறிக்கிறது. புதிய உடலில் குடியேறிய ஆன்மாவுக்கு இது மூன்றாவது வாழ்க்கை. ஏற்கெனவே இரண்டு வாழ்க்கை வாழ்ந்து இரண்டிலும் தற்கொலை செய்துகொண்டு இறந்த வரலாறு கொண்டிருக்கிறது. இந்த பிறவியில் தன்னைச் சுற்றியுள்ளவர்களை கவனிக்கத் தொடங்குகிறது. இதில் ஆறுதல், அவனுக்கு அத்தை முறை வ...

குடும்பத்தை அழித்தவர்களை நிதானமாக துப்பறிந்து கொல்ல முயலும் நாயகன்!

படம்
  Decline c drama  7 episodes சீன தொடர் சர்வ சாதாரணமாக 24, 35 என எபிசோடுகளை இழுத்துவிட்டு பார்வையாளர்களை கஷ்டப்படுத்துவது வழக்கம். ஆனால், இப்போது சில தொடர்கள் அதன் மையப்பொருட்களை பொறுத்து எபிசோடுகளை சுருக்கி வருகிறார்கள். கிடைக்கும் பயனாக, நமக்கு டேட்டா சற்று மிச்சமாகிறது.  கதையை, துண்டு துண்டாக கூறி முக்கியமான முழுக்கதையை ஒருவழியாக இறுதியாக சொல்லி முடிக்கிறார்கள். நாயகன் ஒரு துப்பறிவாளன். நன்றாக வாழ்ந்து அழிந்துபோன குடும்பத்தின் வாரிசு. சீன நகரங்களில் நடக்கும் அமானுஷ்ய கொலைகளை ஆராய்ந்து குற்றங்களைக் கண்டுபிடிப்பதே அவனது வேலை. எதற்காக இதை செய்கிறான் என்பது அவனது குடும்பம் படுகொலையான விவகாரம் சம்பந்தப்பட்டது. கதையின் இடையே நாயகன் தனது கடந்தகாலம் பற்றி அவனது தற்காப்புக்கலை தெரிந்த நண்பனிடம் கூறுகிறான். அவன் அந்தளவு நெருக்கமான நண்பனா என்று கேட்டால், அதற்கு பதில் சொல்வது கடினம்.  ஒரு நாடக குழு நகரத்திற்கு வருகிறது. அதில் உள்ள பதினொரு பேர்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். இரண்டுபேர் மட்டும் காணவில்லை. இதன் பின்னாலுள்ள மர்மத்தை நாயகன் சூ சென்க்ஸி கண்டுபிடிக்கிறா...

தனது குடும்பத்தை அழித்தவர்களை பழிவாங்க சிறு குறுங்கத்தியோடு கிளம்பும் விஷ ராஜா!

படம்
  பாய்சன் கிங், வெனோம்கிங் மாங்கா காமிக்ஸ்  எப்படி சிலந்தி கடித்து மாணவன் ஒருவன் சிலந்தி மனிதன் ஆகிறானோ அதேபோல சென்டிபீட் எனும் விஷப்பூச்சியை ஜின் ஜகான் கடித்துக்கொல்கிறான். அதன் விஷம் உடலுக்குள் இறங்க சுயநினைவை இழக்கிறான். அவனது தாத்தா, பேரனின் உயிரைக் காப்பாற்ற மாத்திரை ஒன்றை அவனுக்கு கொடுக்கிறார். அந்த மாத்திரை ஜின்னின் உடலில் உள்ள ரத்தத்தை ஜெல் போல மாற்றி விஷம் அவனை பாதிக்காதவாறு மாற்றுகிறது.  மருத்துவ இனக்குழு, விஷ இனக்குழுக்களால் முழுமையாக தோற்கடிக்கப்படுகிறது. நிறைய மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். அதற்கு பழிவாங்க சிறுவன் ஜின் எழுகிறான். அவனது பலமே சென்டிபீட் மூலம் உடலுக்குள் சேகரமான விஷம்தான். அதை வைத்து அவனை விட பலமடங்கு வலுவான எதிரிகளிடம் போரிடுகிறான். சண்டைக்காட்சிகளில் பெரும்பாலும் அடிபட்டு உதைபட்டு நினைவிழந்து வீழ்ந்தாலும் தைரியத்தை இழப்பதில்லை. தான் தோற்றுவிட்டேன். தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் எ்ன்பதை அவன் கூறுவதில்லை. அவனது மன உறுதியும் போர் திட்டங்களும் அவனோடு இருப்பவர்களுக்கும், சமயங்களில் அவனது எதிரிகளுக்கும் கூட திகைப்பை ஏற்படுத்துகிறது.  மருத்துவ இனக...

போரைத் தடுக்க நினைக்கும் மவுண்ட் குவா இனக்குழுவைச் சேர்ந்த வாள் துறவியின் சாகசங்கள்!

படம்
  வல்கானிக் ஏஜ்  மாங்கா காமிக்ஸ்  ரீட்மாங்காபேட்.காம்  160 அத்தியாயங்கள்  மவுண்ட் குவா செக்ட்டைச் சேர்ந்த பெரிய தலைவர்களில் ஒருவர். மரணப்படுக்கையில் கிடக்கிறார். நிறைய விஷயங்களை அறிந்திருந்தாலும் அதைப் பயன்படுத்தி நினைத்த வெற்றிகளை அவரால் அடைய முடியவில்லை. குறிப்பாக காதல் இல்லை, திருமணம் இல்லை. நட்பு இல்லை. தொடர்புகள் இல்லை. இதனால் சாகும் நிலையில் வருத்தப்படுகிறார். நாம் நினைத்தது போல சந்தோஷமாக வாழ முடியவில்லையே என.... அந்த உயிர் அப்படியே மவுண்ட் குவாவில் உள்ள எட்டு வயதான சிறுவனின் உடலில் புகுகிறது.  அந்த சிறுவனின் பெயர் ஜூ சூ சியோன். அவனுக்கு இப்போது, மூத்த தலைவரின் நினைவுகள் இருக்கின்றன. அதை வைத்து எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விஷயங்களை முன்னதாக அறிந்து அதை தனக்கு எப்படி சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான் என்பதே கதை.  ஜூவின் மாஸ்டர் ஓவியத்தில் ஆண் போல இருக்கிறார். ஆனால் உரையாடலில் அவரை பெண்பாலாக குறிப்பிடுகிறார்கள். இது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. இருந்தால் கதையின் போக்கில் நாம் அவரை ஆண்பாலாகவே புரிந்துகொள்வோம். மவுண்ட் குவா செக்ட், தாவோயிசத்தை கடைப...

தீயசக்தி வாட்களை உருவாக்கும் குருவுடன் மோதும் சீடன்! தி சீலர்

படம்
  தி சீலர் - ஜே டிராமா தி சீலர் ஜே டிராமா ராக்குட்டன் விக்கி ஆப்   நகரில் சில மனிதர்கள் திடீரென ஒரு வாளால் தாக்கப்பட்டு   வீழ்கிறார்கள். அப்படி விழுந்து   எழுந்தால கையில் வாளின் கைபிடி உள்ளது. அதை கையில் இறுக்கிப்பிடித்தால் கருப்பு நிற புகை வெளிவரும் தீயசக்தி வாள் உருவாகிறது. அதை பயன்படுத்துபவரின் உருவம் சாதாரண மக்களின் கண்களுக்கு தெரியாது. இந்த வாள், வெறுப்பை, கசப்பை, வலியை, வேதனையை செரித்து வளர்கிறது மனதில நினைத்துப் பார்க்க முடியாத கோபத்தை, வலியை, பழிவாங்கும் வெறியை வைத்திருப்பவர்கள் இந்த தீய சக்தி வாளை பயன்படுத்தி தங்கள் வாழ்வைக் கெடுத்தவர்களைக் கொல்கிறார்கள். இதை தடுப்பவன்தான் காக்கேறு எனும் நாயகன். தி சீலர் தொடரின் பெரும் பலமே வாள் சண்டைக் காட்சிகள்தான். எதிரியிடம் வாள் இருக்கும். நாயகனிடம் வாளை மூடி உறையிடுவதற்கான வாளுறை மாத்திரமே உண்டு. அதை வைத்து அவர் எப்படி சண்டையிடுகிறார், எதிரிகளை வெல்கிறார் என்பதே கதை. தீயசக்தியை அடக்கும் இனக்குழு தொன்மைக்காலத்தில் இருந்து இருக்கிறது. இவர்கள், தனி இனக்குழுவாக சமூகத்தைக் காக்க அமைதியாக இயங்கி வருகிறார்கள். காக...

தன்னை எதிர்ப்பவர்களை பல்வேறு நூதன வழிகளில் ரஷ்யா தண்டிக்கிறது? - என்னென்ன வழிகள் என அறிவோமா?

படம்
  எதிர்த்து நின்றால் மரணம் நிச்சயம் ரஷ்யா எதிரிகளை தாக்கும் விதம் என்பது மாறுபட்டது. நோவிசோக், பொலோனியம் என பல்வேறு வேதிப்பொருட்களை பயன்படுத்தி தன்னை விமர்சிக்கும் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்களை கொல்வது ரஷ்ய அரசின் வழக்கம். அதாவது இருபத்து மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவை ஆண்டு வரும் ‘வலிமையான தலைவர்’ புதின் அணுகுமுறை இதுதான். அண்மையில் ரஷ்யாவின் ராணுவ கூலிப்படை தலைவர் யெவ்ஜெனி ஜெட் விமானத்தில் வானில் இருக்கும்போது கொல்லப்பட்டார். இந்த டெக்னிக்கை புதிதாக கூட பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்டால், கிரெம்ளினில் எந்த பதிலும் வராது. அவையெல்லாம் வதந்தி, உண்மையல்ல என்று கூறுவார்கள். ஆனால் ரஷ்யாவில் உள்நாட்டில் நடக்கும் விஷயங்கள், சொல்பவை   எல்லாமே அரசியல் ரீதியாக அந்த அரசின் கூற்றுக்கு மாறாக இருக்கின்றன. அரசியல்வாதிகளுக்கு விஷம் வைத்துக்கொல்வது சோவியத் காலம்தொட்டே நடந்து வருகிறது. ரஷ்ய விஞ்ஞானிகளின் விஷயம் என்னவென்றால், வாசனை இல்லாத நிறமில்லாத விஷத்தை கண்டுபிடித்து அதை மேம்படுத்தி வருகிறார்கள். இதனால் ஒருவரை எளிதாக கொல்ல முடியும். ...

மதுவில் கலக்கப்பட்ட விஷம் - மனைவியா, தோழியா -யார் கொலையாளி?

படம்
  அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்தவர் கேசி மெக்பெர்சன் பொமெராய். இவரை சுருக்கமாக கேசி என அழைக்கலாம். மருந்துகள் விற்கும் விற்பனைப் பிரதிநிதி. இவர் செய்யும் வேலையை அவரே சொன்னால்தான் தெரியும். ஏனெனில் பார்க்க திரைப்பட நடிகர் போல தோற்றம் கொண்டவர். அதனால் சில ஆண்டுகள் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறார். அவர் பார்பரா என்ற பெண்ணை மணந்துகொண்டார். உண்மையில் கேசிக்கும், பார்பராவுக்கும் எந்தவிதத்திலும் கணவன் மனைவி   என்ற பொருத்தமே கிடையாது. பார்க்கும் யாரும் மனதில்   நொடியில் இந்த உண்மையை உணர்வார்கள். ஆனால் சட்டப்பூர்வமாக தம்பதிகளாக வாழ்ந்தனர். கேசிக்கு கடல் நீரில் சர்ஃபிங் செய்வதில் நிறைய ஆர்வம் உண்டு. எனவே, தனது மனைவியுடன் அங்குலியாவில் தனியாக வீடு வாடகைக்குப் பார்த்துக்கொண்டு சென்றுவிட்டார். அருகிலேயே கடலும் இருக்கையில் அவருக்கு மகிழ்ச்சி எல்லையற்றதாக இருந்தது. ஆனால் எல்லாமே டிசம்பர் 2018ஆம் ஆண்டோடு சரி. அதில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடித்த மதுவில் விஷம் கலக்கப்பட்டு இருக்க கேசியும், அவரது பள்ளி   கால நண்பர் காலெப் கில்லெரியும...

தெரிஞ்சுக்கோ - தவளைகள்

படம்
  alanajordan   தவளை பற்றிய தகவல்கள்- தெரிஞ்சுக்கோ   ஆஸ்திரேலியன் ஸ்ட்ரைப்டு ராக்கெட்   என்ற தவளை தனது உடல் நீளத்தை விட 50 மடங்கு தூரம் தாண்டும் இயல்புடையது. கிரேட் கிரெஸ்டட் நியூட் இன பெண் தவளை, ஒரே நேரத்தில் 600 முட்டைகளை ஈனுகிறது. ஆப்பிரிக்கன் கோலியாத் இன தவளை 3.3 கிலோ எடை கொண்டது. இதன் நீளம் 30 செ.மீ. இந்தியாவில் வாழும் பர்பிள் தவளை, 50 வாரங்கள் (ஓராண்டிற்கு 52 வாரங்கள்) நிலத்தின் கீழே பாதுகாப்பாக உறங்குகிறது.   மழை தொடங்கும் இரு வாரங்களுக்கு மட்டும் எழுந்து இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகிறது.   கோல்டன் பாய்சன் டர்ட் தவளையின் உடலிலுள்ள விஷத்தின் மூலம் 10 மனிதர்களைக் கொல்ல முடியும். சிறு விலங்குகளில் எனில் 20 ஆயிரம் எலிகளைக் கொல்லலாம். நீர்நில வாழ்விகளில் மொத்தம் 8300க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. -அவர் வேர்ல்ட் இன் நம்பர்ஸ்

உலகின் நீளமான பாம்புகள்

படம்
  உலகின் நீளமான பாம்புகள்   ரெட்டிகுலேட்டட் பைத்தான் அறிவியல் பெயர் - மலாயோபைத்தான் ரெட்டிகுலாடஸ் காணப்படும் இடம் -தெற்காசியா பத்து மீட்டர் நீளம் கொண்டது. எடை 140 கிலோவுக்கும் அதிகம். பறவை, மான், பிற பாலூட்டிகளை உடலை இறுக்கி எலும்புகளை நொறுக்கி உண்கிறது. க்ரீன் அனகோண்டா அறிவியல் பெயர் - யுனாடெக்டெஸ் முரினஸ் கா.இ - தென் அமெரிக்காவின் வடக்குப்பகுதி 8-9 மீட்டர் நீளம் கொண்டது. இவ்வகை பாம்பு முட்டையிடாமல் குட்டிகளை நேரடியாக பிரசவிக்கிறது. அமேதிஸ்டைன் பைத்தான் மோரேலியா அமேதிஸ்டியானா இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, பப்புவா நியூகினியா, பிலிப்பைன்ஸ் 8.5 மீட்டர் நீளம் கொண்டது. இதன் செதில்கள் சூரிய வெளிச்சத்தில் பார்க்கும்போது ரோஸ் நிறத்தில் மின்னும். ஆப்பிரிக்கன் ராக் பைத்தான் பைத்தான் செபே சப் சகாரா ஆப்பிரிக்கா 7 மீட்டர் நீளம் கொண்ட ஆக்ரோஷ தாக்குதல் நடத்தும் பாம்பு. பெரிய பாலூட்டிகளை வேட்டையாடுகிறது. பர்மீஸ் பைத்தான் பைத்தான் பைவிட்டாடஸ் தெற்காசியா, இந்தியா, சீனா 5.74 மீட்டர் நீளம் கொண்டது. இந்த மலைப்பாம்பு அதைவிட மூன்று மடங்கு பெரிய விலங்குகளைக் கூட...

இருளர்கள் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்கள் என்பதால், பொதுசமூகம் அவர்களை ஏற்றுக்கொள்கிறது! - ஸாய் ஒயிட்டேகர்

படம்
  எழுத்தாளர் ஸாய் ஒயிட்டேகர் டெர்மைட் ஃபிரை என்ற நாவலை ஸாய் ஒயிட்டேகர் எழுதியிருக்கிறார். சிறுமி, அவளின் குடும்பம் சார்ந்த கதையில் இருளர் இனத்தின் வாழ்க்கை, அவர்களின் பிரச்னைகள் பற்றி பேசியிருக்கிறார். இருளர்கள் பற்றி நமக்கு என்ன தெரியும்? பாம்புகளைப் பிடிப்பவர்கள், தேள்கள் வாழும் இடத்தில் குடிசைகளைக் கட்டி வாழ்பவர்கள். கரையான்களை வறுத்து சாப்பிடுபவர்கள். மருத்துவத் தாவரங்கள் பற்றி அகமும் புறமும் அறிந்தவர்கள். பறவைகளின் மொழியை அறிந்து பேசுபவர்கள், மாந்திரீகம் கற்றவர்கள். இவைதான். நூலில் நாம் அறியாத ஏராளமான தகவல்கள் உள்ளன. தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் வாழும் இருளர் குடும்பத்தின் கதை, நாவலில் கூறப்படுகிறது. தேனீ என்ற சிறுமியின் குடும்பம் அங்கு, மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகிறது. 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டம் வழியாக இருளர்கள் காட்டுக்குள் பாம்புகளை பிடித்து அதன் தோலை விற்பது தடை செய்யப்பட்டது. அவர்களின் முக்கிய வாழ்வாதாரம் தடைபட்டபிறகு, வாழ்க்கை எப்படி மாறியது என்பதை நாவல் மையமாக கொண்டுள்ளது. இருளர்கள் தங்கள் பொருட்களை பேருந்துகளில் கொண்டு ச...