ஒன்றாகச் சேர்ந்து காதலிக்க என்ன தேவை?
ஒன்றாக சேர்ந்து... உறவுகளைப் பொறுத்தவரை எதுவுமே உறுதி கிடையாது. உறவே எளிதாக உடையக்கூடியது என ஜே கிருஷ்ணமூர்த்தி கூறியிருக்கிறார். இருவர் ஒன்றாக வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் சில தவிர்க்க முடியாத தேவைகளுக்காக அப்படி இருக்கலாம். மனப்பூர்வமாக ஒன்றாக இணைந்து இருக்கிறார்களா என்றால் சந்தேகமே. உடல் அளவில் ஒன்றாக இருந்தாலும் மனம் என்ற அளவில் பல கி.மீ. தொலைவில் உள்ள மனிதர்கள் ஏராளமானோர் உண்டு. ஒரே வீட்டில் வசித்தாலும் வேறு வேறு உலகில் இருப்பார்கள். டேட்டிங் விஷயத்தைப் பொறுத்தவரை ஆணும், பெண்ணும் மனம் என்ற அளவில் நெருங்கி வருவதையே முக்கியமாக கருதலாம். அப்படியான நெருக்கம், விருப்பங்களின் ஒற்றுமை அளவில் நட்பு உருவாகி பின்பு காதலாக மாறி திருமணமாக அடுத்த நிலைக்கு செல்லலாம். உங்களுடைய உறவில் நட்புத்தன்மை இருக்குமாறு பார்த்துக்கொண்டால் பின்னாளிலே அதில் சிக்கல் வந்தாலும் தீர்த்துக்கொள்ள முடியும். உடல், மனம் சார்ந்த ஊக்கம் பரவசம் என்பது மாறக்கூடியது. எப்படி பருவகாலங்கள் மாறும்போது அதையொட்டி நமது உணவு மாறுகிறதோ அதைப்போலவேதான். காதலில் ஏற்படும் காயங்கள் ஆறுவது கடினம். ஆனால், நட்பில் அப்படி பெரிய...