இடுகைகள்

மருத்துவம் - ஆட்டிசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆட்டிசத்திற்கு புதிய தீர்வு!

படம்
    நம்பிக்கை தரும் ஆட்டிச ஆராய்ச்சி! போர்ட்லேண்டிலுள்ள ஓரேகான் சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலையில் (OHSU) துணை பேராசிரியராக பணியாற்றும் பிரையன் ஓரோக் , ஆட்டிஸ பாதிப்பை குறைக்கும் வகையில் மரபணுக்கள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார் . 68 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிஸம் குறைபாட்டில் பாதிக்கப்படும் நிலையில் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார் பிரையன் . ஆட்டிசத்தில் பாதிக்கப்பட்டவர்களின் ஸ்டெம்செல்களில் மாறுதல்களை உருவாக்கி பிரையன் செய்த ஆராய்ச்சிக்கு இளம் ஆராய்ச்சியாளர் விருதை தேசிய உளவியல் கழகத்திடம் பெற்றார் . கலிபோர்னியாவில் வளர்ந்த பிரையன் , உயிரியல் பாடத்தில் ஆர்வமாக இருந்தவர் , நாசாவின் நிதியுதவியில் மரபணு பொறியியல் பற்றிய பாடம் கற்றார் . பின்னர் கிடைத்த உதவித்தொகையில் தாவர மரபணு மற்றும் மூலக்கூறு குறித்த படிப்பை தொடர்ந்தார் . மரபணு தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட மேத்யூ ஸ்டேட் என்ற ஆராய்ச்சியாளருடன் இணைந்து 50 ஆயிரம் குடும்பங்களை அணுகி ஆட்டிச குறைபாட்டாளர்களின் மரபணுக்களை கண்டறியும் ஆய்வுகளை