பேரிடர் காலத்தில் உயிர்பிழைக்க தங்குமிடத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்!- ஆலோசனைகள்
இயற்கை பேரிடர்களால் அல்லது இனவெறி, நிறவெறி, மதவாதிகள் செய்யும் கொடூர தாக்குதலால் சொத்துக்கள் அழிந்துவிட்டதா? வீடு புல்டோசரால் இடித்து தள்ளப்பட்டுவிட்டதா, சிறுபான்மையினர் என்பதால் காவல்துறை அடித்து துன்புறுத்துகிறதா, தேசதுரோக வழக்கு போடப்படுகிறதா இவை அனைத்துமே பேரிடர்கள்தான். அரசு உருவாக்குகிற பேரிடர்கள். இயற்கை பேரிடர்களை விட அரசு உருவாக்கும் பேரிடர்களை சமாளிப்பது கடினம். ஆபத்து வரும் நேரத்தில் முன்னே உதவி பெற்றவர்கள் உங்களை மறந்துவிடுவார்கள். எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்காது. சுற்றியுள்ளவர்களும் சால்ஜாப்பு சொல்வார்கள். இப்படியான நிலையும் பேரிடர்தான். இந்த சூழ்நிலையில் நீங்களும் உங்கள் குடும்பமும் தெருவில் நிற்காதபடி செல்ல பாதுகாப்பான்ன இடம் அவசியம். அதை குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அறிந்திருக்காமல் இருந்தால் நன்று. அனைத்து நாடுகளிலும் அவசர கால எச்சரிக்கை முறைகள் உண்டு. மூடநம்பிக்கை கொண்ட மாட்டை வழிபடும் இந்தியா போன்ற மதவாத நாட்டை விட்டுவிடுவோம். எப்போதும் போல அமெரிக்காவை கையில் எடுத்துக்கொள்வோம். அங்கு அவசரநிலையை நூறு நிமிடங்களில் அறிந்து மக்களுக்கு அதிபர் அறிவித்துவிட முடிய...