இடுகைகள்

பந்துவீச்சு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேட்ஸ்மேன்களை பயப்படுத்துவேன்! - உம்ரான் மாலிக், பந்துவீச்சாளர்

படம்
  உம்ரான் மாலிக், பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் பந்துவீச்சாளர், சன்ரைஸர்ஸ் அணி உங்களால் வேகமாக பந்துவீச முடியும் என எப்போது அடையாளம் கண்டு கொண்டீர்கள்? 2018ஆம் ஆண்டு டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடும்போதுதான் எனக்கு பந்துவீச்சு வேகமாக வருவது தெரிந்தது. எப்போது பஞ்சாப் அணி, காஷ்மீருக்கு வந்தாலும் என்னை பந்துவீச அழைப்பார்கள். நான் உள்ளூர் அணியில் விளையாடுவேன். இந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீரில் 19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் சோதனை முறையில் இடம் கிடைத்தது.  நான் அப்துல் சமாத் என்ற அண்ணாவுடன் பந்துவீசி வந்தேன். அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளார். அவர்தான் எனது பந்துவீச்சு வீடியோக்களை சன்ரைஸர் அணி நிர்வாகத்துக்கு அனுப்பிவைத்தார். இதனால் நெட் பௌலராக வேலை கிடைத்தது. அதில் சிறப்பாக செயல்பட்டதால் அணியில் இடம் கிடைத்தது.  வேகமாக பந்து வீசுவது உங்களை ஊக்கப்படுத்துகிறதா? நான் பந்துவீசும்போது ஒருவர் மெதுவாக பந்து வீசுகிறார் என்று  விமர்சனம் எழுந்தது. அதற்குப் பிறகுதான் நான் வேகமாக பந்துவீச முயன்றேன். இந்த ஐபிஎல்லில் பேட்ஸ்மேன்களை ஸ்டம்புகளை சிதறடித்து ஆட்டமிழக்கச்செய்திருக்கிறீர்கள். அந்த

ஜோஃப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்தின் ராஜதானி எக்ஸ்பிரஸ்

படம்
கரீபியன் காளை ஜோஃப்ரா ஆர்ச்சர் வலது கை வேகபந்துவீச்சாளர். மணிக்கு நூற்று நாப்பது கி.மீ வேகத்தில் புயலாய் தாக்கும் யார்க்கர்கள், பவுன்சர்களால் பல பேட்ஸ்மேன்களின் ஹெல்மெட் அடிக்கடி அடிபடுவது ஆர்ச்சரின் உபாயம்தான். பார்படாஸில் பிறந்து மேற்கிந்திய தீவுகளுக்காக 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடியவர், இப்போது இங்கிலாந்து அணி ஜெர்சி அணிந்துவிட்டார். உலகக் கோப்பை அணியில் இங்கிலாந்துக்காக பந்து வீசி எதிரணிகளை மிரட்டி வருகிறார். மூன்று ஸ்டம்புகள்தான் இவரது குறி. அதற்கு குறுக்கே வரும் எதனையும் இவரது பந்து தகர்க்கிறது. அது பேட்ஸ்மேனின் ஹெல்மெட்டோ, கையோ, காலோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. ஹெல்மெட்டில் அடித்து ஸ்டம்புகளை தகர்த்து பந்துகளும் உண்டு. அப்படி ஒரு வேகம். வயது 24 அதற்கான வேகத்தில் பந்து ஸ்டம்புகளை நொறுக்குகிறது. இந்தியாவில் விராட் கோஹ்லி எப்படி எந்த பந்துகளைப் போட்டாலும் அடித்து நொறுக்கிறாரோ, அதேபோல்தான் ஜோஃப்ராவும். அடியேன் பார்க்கலாம் ப ந்துகளை ராக்கெட் வேகத்தில் வீசுகிறார். விளையாண்ட முதல் சர்வதேச போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானது. ஹஸீம் ஆம்லாவுக்கு