இடுகைகள்

பூச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூச்சிகளுக்கு உணர்ச்சிகள் உண்டா?

படம்
  பூச்சிகளுக்கு உணர்ச்சிகள் உண்டா? தேனீகளுக்கு உணர்ச்சிகள் உண்டு. அவை உயர்ந்தும் தாழ்ந்தும் மாறுகின்றன. இதில் சில பொம்மைகளோடு விளையாடும் இயல்பு கொண்டுள்ளன. கரப்பான் பூச்சிகளுக்கு ஆளுமைகள் உள்ளன. பழ ஈக்களுக்கு பய உணர்வு உள்ளது ஆகிய உண்மைகள், பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளில் தெரிந்துள்ளது. பூச்சிகளுக்கு உணர்ச்சிகள் உள்ளது என்பது புதிய சிந்தனை கிடையாது. 1872ஆம் ஆண்டு, சார்லஸ் டார்வின்   பூச்சிகளுக்கு பயம், பீதி, பொறாமை, காதல் ஆகிய உணர்ச்சிகள் உண்டு என்று கூறியுள்ளார். இப்போதுவரை பூச்சிகளின் மூளையில் என்ன சிந்தனை ஓடுகிறது என கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், நரம்பியல் ஆய்வாளர்கள், தத்துவவாதிகள் இந்தக்கருத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு சயின்ஸ் இதழில் அறிவியல் கட்டுரை ஒன்று வெளியானது. அதில் கட்டுரையாளர்களான ஃபிரான்ஸ் டே வால், தத்துவ பேராசிரியர் கிரிஸ்டன் ஆண்ட்ரூஸ் ஆகிய இருவரும் பூச்சிகளுக்கு உணர்வுகள் இருப்பது உண்மையென்றால், அவைக்கு குண இயல்புகளும் உண்டு என அர்த்தமாகிறது என கூறியிருந்தனர். மனிதர்கள் என்றால் அவர்கள் மனதில் நினைப்பது என்ன என்று கூற வாய்ப்பு

மரபணுமாற்ற பருத்தியால் விவசாயிகள் கற்றதும், பெற்றதும்!

படம்
  அதிக உற்பத்திச் செலவு, குறைந்த வருமானம் -பிடி பருத்தியால் பாதிக்கப்படும் விவசாயிகள் மரபணு மாற்ற பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகள்,   குறைந்துவரும் விளைச்சல், அதிக உற்பத்திச் செலவுகளை சந்தித்து வருகிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்னர், விவசாயிகளுக்கு பிடி பருத்திப் பயிர் அறிமுகமானது. புழுத்தாக்குதலிலிருந்து பாதுகாப்பு, அதிக விளைச்சல், சந்தையில் அதிக விலை கிடைக்கும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ‘’சில ஆண்டுகளுக்குப் பிறகு பிடி பருத்தியின் உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்டது. ஆனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை. நாங்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக பருத்தியை பயிரிட்டு வருகிறோம். 1995-2005 காலகட்டத்தில் பருத்தி பயிரிடல் உச்சகட்டத்தில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பிடி பருத்தி பயிரிடல் அதிகரிக்கத் தொடங்கியது. பிடி பருத்தி, நிலங்களுக்கும் விவசாயிகளுக்கும் என்ன செய்கிறது என்பது புதிராக விடை தெரியாததாகவே இருக்கிறது ’’ என்றார் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த உப்பின் பெடாகெரி கிராமத்து விவசாயி சன்னபசப்பா மசுடி. இவர், பத்து ஆண்டுகளுக்கு   முன்னரே தன் நிலத்தில் பிடி பருத்தியை

பூச்சிகளின் மாதிரிகளை சேகரித்து ஆவணப்படுத்தியவர்! ஆல்பிரட் வாலஸ்

படம்
  ரெகுலர் வடிவம்  ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸ் (1823-1913) இங்கிலாந்தின் மான்மவுத்ஷையரில் பிறந்தார். தன் 14 வயதில் பள்ளிப்படிப்பை கைவிட்டார். பல்வேறு வேலைகளை செய்தவர், 1844ஆம் ஆண்டு ஹென்றி வால்டர் பேட்ஸ் என்ற  சூழல் ஆய்வாளரை சந்தித்தார். இவர் மூலம் பூச்சிகளை சேகரிப்பதில் ஆர்வம் உருவானது. 1848-52 காலகட்டத்தில்  பல்வேறு தீவுக்கூட்டங்களுக்கு சென்றார்.  அங்கு ஆய்வில் விலங்குகளின் படிமங்கள் மற்றும் தாவரங்களை சேகரித்தார். இயற்கை அறிவியல் சார்ந்த ஆய்வில், பரிணாம வளர்ச்சி பற்றி தானே சில கொள்கைகளை வகுத்தார். இதைப்பற்றி ஆய்வறிக்கையை எழுதினார். 1858ஆம் ஆண்டு சார்லஸ் டார்வினிடம்  தனது அறிக்கையை அனுப்பிவைத்தார். டார்வின் தனது ஆராய்ச்சி அறிக்கையோடு வாலஸின் அறிக்கையையும் இணைத்து அறிக்கையாக்கி லண்டன் லினியன் சங்கத்தில் வெளியிட்டார்.  மலேஷியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்குப் பயணித்தவர், 1,25,000 உயிரின மாதிரிகளைச் சேகரித்தார். அவற்றில், 5 ஆயிரம் உயிரினங்களை அன்றைய அறிவியல் உலகம் அடையாளமே கண்டிருக்கவில்லை. லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வாலஸ் சேகரித்த, 2500 பறவைகளின் உடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு

உணவுப் பழக்கத்தால் மாறும் வாழ்க்கை முறை!

படம்
  சமூக கலாசாரத்தைப் பாதிக்கும் உணவு!  ஆப்பிரிக்காவின்  சகாரா பகுதியில் வேவர் பறவைகளை (Weaver birds) வைத்து நடத்தை சூழலியல் ஆய்வு ஒன்றை செய்துள்ளனர். இந்தப் பறவையின் உணவு விதைகள், தானியங்கள்தான். வேவர் பறவையின் உணவுப்பழக்கம்,  பிற பறவைகளோடு இணைந்து வாழும் சமூக பழக்கத்தில் தாக்கம் செலுத்துகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தானியங்களை உண்ணும் வேவர் பறவைகளோடு பூச்சிகளை உண்ணும் பிற பறவைகளை ஒப்பிட்டு இக்கருத்தைக் கூறியுள்ளனர். இதுபற்றிய பற்றிய ஆய்வுக்கட்டுரை, தி அமெரிக்கன் நேச்சுரலிஸ்ட் என்ற இதழில் வெளியாகியுள்ளது.  வேவர் பறவை, ப்ளோசிடே(Ploceidae,) எனும் இசைப்பறவை குடும்பத்தைச் சேர்ந்தது.  சகாரா ஆப்பிரிக்கப் பகுதியில் வாழும் வேவர் பறவை, திறந்தவெளியில் குழுவாக இணைந்து இரை தேடுகின்றன. ஒரே மரத்தில் குழுவாக கூடு கட்டி வாழ்கின்றன. இப்படி குழுவாக இருப்பதற்கு, வேவர் பறவையின் உணவுப்பழக்கம் முக்கியக் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதே வேவர் இனத்தைச் சேர்ந்த சில பறவைகள் காட்டில் வசிக்கின்றன. ஆனால் அவை இரை தேடுவதையும், மரங்களில் கூடு கட்டுவதையும் தனியாகவே செய்கின்றன. இவை பூச்சிகளை உண்ண

மயிலாப்பூர் டைம்ஸ் - கூட்டு மிளகுத்தூள் எனும் பேரமுது!

படம்
  Mylapore Times வந்தே ஏமாத்துறோம்... அல்டிமேட் லெஜண்ட்ஸ் -1 எனக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அலர்ஜி பிரச்னை இருப்பதால், பால் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் சில சமயங்களில் பால் பொருட்களை சேர்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால் தயிரை சேர்த்து அதில் மிளகுப் பொடியைப் போட்டு சாப்பிட்டு வருகிறேன். இதில் தயிர் பிரச்னையில்லை. பெரும்பாலும் ஹெரிடேஜ் கர்ட் பத்து ரூபாய் பாக்கெட்டில் தடையின்றி கிடைத்து விடுகிறது. ஹட்சன் என்றால் எப்போதும் டப்பாதான். அதில் தயிரின் அளவு 40 கிராம் குறைவாக இருக்கும். எனவே, பாக்கெட் தான் வாங்குபவர்களுக்கு லாபம். டப்பா, பாக்கெட் இரண்டுமே பத்து ரூபாய் என்றாலும் கிராம்களை வேறுபடுத்தியுள்ளனர்.  இந்த நேரத்தில் தான் மிளகுத்தூளை வாங்க கடைக்குப் போனேன். மயிலாப்பூரின் பஜார் ஸ்ட்ரீட்டில், பூக்கடை ஒன்று இருக்கும் அதற்கு அருகில் இளங்கோ என்ற நவீன நாகரிக கடை இருக்கும். அதில் வேலை செய்பவர், அவர்தான் முதலாளி. என் ரேஞ்சு என்ன தெரியுமா, என்னைப் போய் பொட்டுக்கடலை மடிக்கச்சொல்லி கேட்குற என்பது போன்ற அலுப்பு முகத்தில் தெரியும். இவர் கடையில் வாங்கிய 50 ரூபாய் அரிசி இன்னொரு அநியாயம். அதில் இருந்த

பரிணாம வளர்ச்சியில் தாவரத்திலிருந்து பூச்சிக்கு மாறிய மரபணு!

படம்
  தொன்மை தாவரத்திலிருந்து பூச்சிக்கு மாறிய மரபணு! பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர், ஒயிட்ஃபிளை என்ற பூச்சி  மரபணு ஒன்றைப் பெற்றது. இதனை  தொன்மையான தாவரம் ஒன்றிலிருந்து பெற்றதாக தாவரவியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஆனால் இத்தாவரம் எதுவென இன்னும் கண்டறியப்படவில்லை. BtPMat1  என்ற மரபணுதான் ஒயிட் ஃபிளை பூச்சிக்கு மாறிய மரபணு என ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இது தாவர நச்சு வகையைச் சேர்ந்தது. ஆனாலும் பூச்சியை பாதிப்பதில்லை.  BtPMat1 என்ற மரபணு, தாவரத்திலிருந்து பூச்சி இனத்திற்கு மாறியுள்ளதை சீனா மற்றும் ஐரோப்பிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றிய செய்தி செல் இதழில் வெளியாகியுள்ளது. ஹரிஸோனல் ஜீன் டிரான்ஸ்பர் (HGT)முறையில் மரபணு மாற்றம் நடைபெற்றுள்ளது. இந்த முறையில் நடைபெறும் மரபணுமாற்றம் பாக்டீரியா இனங்களிலிருந்து தாவரம் மற்றும் விலங்குகளுக்கு நடப்பது இயல்பானதுதான்.   நச்சு கொண்ட தாவரங்கள், தங்களிடமுள்ள உணவைக் காக்க நச்சை சுரக்கிறது. இச்சமயத்தில் ஒயிட்ஃபிளை பூச்சியை நச்சு பாதிக்காமல் காப்பாற்றுவது  தாவர மரபணுதான்.  இப்பூச்சியிடமிருந்த தாவர மரபணுவை நீக்கி சோதித்தபோது, உணவிலுள்ள நச்சு காரணமாக

காற்றில் மிதக்கும் மகரந்தத்தால் ஏற்படும் ஒவ்வாமை!

படம்
  மகரந்தத்தின் ஆபத்து ஒவ்வாமையை ஏற்படுத்துவதில் தாவரங்களின் மகரந்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மகரந்தம் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடு, வெப்பம் ஆகியவற்றுடன் இணைந்து மக்களை பாதிக்கிறது. இது குறிப்பிட்ட பருவத்தில்தான் மக்களை பாதிக்கிறது என்பது உண்மை. ஆனால் பாதிப்பு கடுமையாக இருக்கும். பொதுவாக ஒரு பொருளிலுள்ள புரதம்தான் ஒவ்வாமைக்கு முக்கியமான காரணமாக இருக்கும்.  கிராமங்களில்தான் அதிகளவு தாவரங்கள், மரங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், நகரத்தினர்தான் அதிகமாக இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், நகர்ப்புறங்களில் பசுமைப்பரப்பு குறைந்துபோனதும், மாசுபாடு அதிகரித்து வருவதும்தான்.  இதற்கு தீர்வு ஒன்றே ஒன்றுதான். சுற்றுப்புறத்தையும் உங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அவ்வளவேதான். மரங்களிலிருந்து மகரந்தம் உருவாகி ஒருவரைத் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் கவனமாக இருக்கவேண்டும். ஆப்பிள், பேரிக்காய் செர்ரி, பெர்ரி போன்றவை கூட ஒவ்வாமையைக் கூட்ட வாய்ப்புள்ளது. எனவே இவற்றிலிருந்து சற்றுதள்ளி இ