உணவுப் பழக்கத்தால் மாறும் வாழ்க்கை முறை!

 












சமூக கலாசாரத்தைப் பாதிக்கும் உணவு!


 ஆப்பிரிக்காவின்  சகாரா பகுதியில் வேவர் பறவைகளை (Weaver birds) வைத்து நடத்தை சூழலியல் ஆய்வு ஒன்றை செய்துள்ளனர். இந்தப் பறவையின் உணவு விதைகள், தானியங்கள்தான். வேவர் பறவையின் உணவுப்பழக்கம்,  பிற பறவைகளோடு இணைந்து வாழும் சமூக பழக்கத்தில் தாக்கம் செலுத்துகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தானியங்களை உண்ணும் வேவர் பறவைகளோடு பூச்சிகளை உண்ணும் பிற பறவைகளை ஒப்பிட்டு இக்கருத்தைக் கூறியுள்ளனர். இதுபற்றிய பற்றிய ஆய்வுக்கட்டுரை, தி அமெரிக்கன் நேச்சுரலிஸ்ட் என்ற இதழில் வெளியாகியுள்ளது. 

வேவர் பறவை, ப்ளோசிடே(Ploceidae,) எனும் இசைப்பறவை குடும்பத்தைச் சேர்ந்தது.  சகாரா ஆப்பிரிக்கப் பகுதியில் வாழும் வேவர் பறவை, திறந்தவெளியில் குழுவாக இணைந்து இரை தேடுகின்றன. ஒரே மரத்தில் குழுவாக கூடு கட்டி வாழ்கின்றன. இப்படி குழுவாக இருப்பதற்கு, வேவர் பறவையின் உணவுப்பழக்கம் முக்கியக் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதே வேவர் இனத்தைச் சேர்ந்த சில பறவைகள் காட்டில் வசிக்கின்றன. ஆனால் அவை இரை தேடுவதையும், மரங்களில் கூடு கட்டுவதையும் தனியாகவே செய்கின்றன. இவை பூச்சிகளை உண்ணும் பழக்கம் கொண்டவை. 

1964ஆம் ஆண்டு இங்கிலாந்து  சூழலியலாளர் ஜான் க்ரூக் (John Crook), பறவைகளின் உணவு, இருப்பிடம், சமூக பழக்கம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை கூறினார். ஜானின் ஆய்வை பின்புலமாக கொண்டு இங்கிலாந்திலுள்ள பாத், சன் யாட் சென் , ஹங்கேரியின் பன்னோனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பறவைகளின் சமூக பழக்கவழக்கத்தை ஆராய்ந்தனர். 

”திறந்தவெளிப் பகுதியில் வேவர் பறவைகள் குழுவாக வாழ்கின்றன. இங்கு கூடுகட்டுவது கடினமானது. காட்டுக்குள் பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் பறவைகளுக்கு கூடு கட்டும் இடங்கள் அதிகம். எனவே, அவை குழுவாக வாழாமல் தனியாக வாழ்கின்றன. சூழலியலாளர் ஜானின் ஆய்வுக்கருத்து, தற்போது புள்ளியியல் ஆதாரங்களாலும் நிரூபணமாகியுள்ளது ” என்றார் பேராசிரியர் தமஸ் ஸெக்லை. 




HT  school 21.4.2022

vegetarian birds are more sociable than insect eaters find researches

https://theprint.in/science/researchers-find-vegetarian-birds-are-more-sociable-than-insect-eaters/907184/

https://www.sciencedaily.com/releases/2022/04/220406132404.htm

https://www.audubon.org/news/a-weaverbird-work

https://www.natureworldnews.com/articles/50293/20220407/vegetarian-weaver-birds-more-sociable-insect-eating-avian-counterparts.htm

http://www.sci-news.com/biology/sociable-weaver-birds-10700.html

கருத்துகள்