இடுகைகள்

காதல் கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பணமும், அறிவுக்கூர்மையும் ஒரே இடத்தில் இருந்தால்.... - காதல்கவிதை (விஷ்வா)

படம்
  விஷ்வா (காதல் கவிதை) பிரசாந்த் தமிழ் இயக்குநர் – அகத்தியன் படத்தின் தொடக்க காட்சியில் விஷ்வா என்பவர், பெட்டிக்கடையில் வந்து நின்று தண்ணீர் கேட்பார்.   காசு கொடுத்து வாட்டர் பாக்கெட் கேட்க மாட்டார். இலவசமாக டம்ளரில் நீர் கேட்பார். ‘காசு கொடுத்தாத்தான் தண்ணீர் ’ என கடைக்காரர் சொல்லுவார். அதாவது, பாக்கெட்டில் கொடுப்பேன் என்கிறார். ஆனால், விஷ்வா தனது சட்டை பாக்கெட்டை காட்டி ‘’பாக்கெட்டில் ஊற்றினால் கீழே கொட்டிடுமே, டம்ளரில் கொடுங்க’’ என கேட்பார். தான் கிராமத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லும்போதுதான் நமக்கே பீதியாகும். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என…. முதல் காட்சி தொடங்கி விஷ்வாவின் பாத்திரம் சற்று ரிவர்ஸாகவே பேசிக்கொண்டிருக்கும். விஷ்வா, அப்போதுதான் ஜில்லெட் க்ரீம் போட்டு அதே கம்பெனி ரேஷரில் ஷேவ் செய்துவிட்டு வந்த மாதிரியான பளபளப்பில் இருப்பார். சைக்கிளை நிறுத்திவிட்டு பெட்டிக் கடைக்கு வரும் சார்லி, சைக்கிளுக்கு ட்ரைவர் வேணும் என விஷ்வாவைக் (பிரசாந்தைக்) கூட்டிக்கொண்டு போவார். பிறகு பீச்சுக்கு செல்வார்கள். அங்கு ஏதோ ஒரு கடையைப் பார்த்துக்கொள்வதாக பேசிக்கொண்டு இருப்பார்கள்.