இடுகைகள்

லேசர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குளிர வைக்கும் லேசர் !

படம்
  குளிர வைக்கும் லேசர் ! வாயுக்களிலுள்ள எலக்ட்ரான்களை குளிர்விக்க லேசர் ஒளிக்கற்றையை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துகின்றனர். வெற்றிடமாக்கப்பட்ட கண்ணாடிக்குள் திரவம் அல்லது திட நிலையில் வாயுவை நிரப்ப வேண்டும். இந்நிலையில் அதிலுள்ள அணுக்கள் இயங்கிக் கொண்டிருக்கும். இதனை மாற்ற, லேசர் கற்றைகளை வாயுவை நோக்கிச் செலுத்த வேண்டும்.  இப்போது, வாயுவிலுள்ள எலக்ட்ரான் லேசரிலுள்ள ஒளித்துகளான போட்டானைப் பெறும். பதிலுக்கு வாயுவும் போட்டானை உமிழும். பல்வேறு திசைகளிலிருந்து லேசர் கற்றைகளை வாயு மீது செலுத்த வேண்டும். இச்செயல்முறை தொடரும்போது வாயுவின் எலக்ட்ரான் செயல்வேகம் குறையும். அணுக்களின் வேகத்தைக் குறைக்க இயற்பியலாளர்கள் லேசர் கூலிங் (Laser Cooling) எனும் இம்முறையைப் பயன்படுத்துகின்றனர். இம்முறை 1970ஆம் ஆண்டு முதலாக செயல்பாட்டில் உள்ளது.  தற்போது இம்முறையை விட ஆவியாக்கும் முறையில் (Evaborate Cooling) அணுக்களை குளிர்விக்கிறார்கள்.  1926 ஆம் ஆண்டு வேதியியலாளர்கள், காந்த அலைகளைப் பயன்படுத்தி அணுக்களை குளிர்விக்கும் முறையைக் (adibatic DeMagnetization) கண்டுபிடித்தனர்.இம்முறையில் பொருட்களின் வெப்பநிலை ஒரு

விண்வெளிக் குப்பைகள் ஏற்படுத்தும் அபாயம்!

படம்
  விண்வெளிக் குப்பைகள் ஏற்படுத்தும் அபாயம்! விண்வெளியில் பூமியின்  அருகிலேயே அமைந்துள்ள கீழ்மட்ட சுற்றுப்பாதையில் எதிர்காலத்திற்கான ஆபத்து குவியலாக உருவாகத் தொடங்கிவிட்டன. உலக நாடுகள் அனுப்பிய ஆயிரக்கணக்கான  செயற்கைக்கோள்களின் கழிவுகள்தான் அவை.  இந்த பிளாஸ்டிக் கழிவுகள் 1 மி.மீ அளவிலிருந்து 1 செ.மீ அளவுகள் வரை உள்ளன.  செயலற்றுப்போன செயற்கைக்கோள் உள்ளிட்ட கழிவுகளை எரிக்க லேசர் கதிர்கள், காந்தம் மூலம் அதனை சேகரித்து அழிப்பது உள்ளிட்ட முயற்சிகளை உலக நாடுகள் முயற்சிக்க தொடங்கியுள்ளன. பிளாஸ்டிகள் துகள்களை உடனே கைப்பற்றி அழிப்பதும் சாதாரண காரியமல்ல; ஈர்ப்புவிசையின் விளைவாக 56 ஆயிரம் கி.மீ வேகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள்  பூமியைச்  சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. இதனை நுட்பமாக கவனிப்பதே சவாலான காரியம்.  தற்போது எம்ஐடி பல்கலைக்கழகம் பிளாஸ்டிக்குகளை அதிவேகத்தில் படம்பிடிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. எம்ஐடியில்  மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் எஞ்சினியரிங்  துறையைச் சேர்ந்த ஆய்வாளர் முஸ்தபா ஹசானி கங்காராஜ், அத்துறை தலைவரான கிறிஸ்டோபர்  ச்சூ(Schuh) ஆகியோரின் புதுமையான ஆராய்ச்சிக் கண்டுபிடிப

சேவல்களை ஒழிக்கும் ஆராய்ச்சி!

படம்
  சேவல்களை ஒழிக்கும் ஆராய்ச்சி!  கருவிலேயே ஆண் குஞ்சுகளை ஒழிக்கும் அறிவியல் ஆய்வுமுறை அறிமுகமாகி உள்ளது.  கர்ப்பிணிகளை ஸ்கேன் செய்து பெண் குழந்தைகளை எப்படி கருவிலேயே கொன்றார்களோ அதேமுறையில் கோழிகளுக்கு செய்த அறிவியல் ஆராய்ச்சி சர்ச்சையாகியுள்ளது. இம்முறையில் கோழிமுட்டைகளை கோழி குஞ்சு பொரிக்கும் முன்பே அதிலுள்ளது ஆணா, பெண்ணா என கண்டுபிடித்து ஆண் குஞ்சுகளை கொல்லத் தொடங்கியுள்ளனர்.  Seleggt  என்ற ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுமுறையில் கோழி கருவுற்ற ஒன்பது நாளில் அது ஆணா, பெண்ணா என கண்டறிந்து விடுகின்றனர்.  பெண் என்றால் அதனை வளரவிடுவதும், ஆண் என்றால் உடைத்து விலங்கு உணவுகளுக்கு பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.  ”நாங்கள் இதன்மூலம் ஆண்டுதோறும 600 கோடி ஆண் சேவல்கள் கொடூரமாக கொல்லப்படுவதை தடுக்கிறோம்” என்கிறார் ஸ்லெக்கிட். ஆண் சேவல் குஞ்சு பொறித்து வெளியே வந்து குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு உதவுகிறது என்றால் சரி; ஆனால் கருவிலேயே கொன்றுவிட்டு இரக்கம் என்று கூறினால் ஏற்பீர்களா?  சந்தையில் பெண் கோழிகளுக்கு உள்ள மதிப்பு, ஆண் சேவல்களுக்கு இல்லை. இதன்விளைவாக, அவற்றை எந்திரத்தில் அரைத்து கொ