விண்வெளிக் குப்பைகள் ஏற்படுத்தும் அபாயம்!

 






விண்வெளிக் குப்பைகள் ஏற்படுத்தும் அபாயம்!

விண்வெளியில் பூமியின்  அருகிலேயே அமைந்துள்ள கீழ்மட்ட சுற்றுப்பாதையில் எதிர்காலத்திற்கான ஆபத்து குவியலாக உருவாகத் தொடங்கிவிட்டன. உலக நாடுகள் அனுப்பிய ஆயிரக்கணக்கான  செயற்கைக்கோள்களின் கழிவுகள்தான் அவை.  இந்த பிளாஸ்டிக் கழிவுகள் 1 மி.மீ அளவிலிருந்து 1 செ.மீ அளவுகள் வரை உள்ளன. 

செயலற்றுப்போன செயற்கைக்கோள் உள்ளிட்ட கழிவுகளை எரிக்க லேசர் கதிர்கள், காந்தம் மூலம் அதனை சேகரித்து அழிப்பது உள்ளிட்ட முயற்சிகளை உலக நாடுகள் முயற்சிக்க தொடங்கியுள்ளன. பிளாஸ்டிகள் துகள்களை உடனே கைப்பற்றி அழிப்பதும் சாதாரண காரியமல்ல; ஈர்ப்புவிசையின் விளைவாக 56 ஆயிரம் கி.மீ வேகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள்  பூமியைச்  சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. இதனை நுட்பமாக கவனிப்பதே சவாலான காரியம். 

தற்போது எம்ஐடி பல்கலைக்கழகம் பிளாஸ்டிக்குகளை அதிவேகத்தில் படம்பிடிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. எம்ஐடியில்  மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் எஞ்சினியரிங்  துறையைச் சேர்ந்த ஆய்வாளர் முஸ்தபா ஹசானி கங்காராஜ், அத்துறை தலைவரான கிறிஸ்டோபர்  ச்சூ(Schuh) ஆகியோரின் புதுமையான ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு Nature Communications இதழில் வெளியாகியுள்ளது. 

பிளாஸ்டிக் துகள்கள் பெயிண்ட், தரையிலுள்ள கலப்படங்களை அகற்றி தூய்மையாக்க (sandblasting) உள்ளிட்ட செயல்முறையில் பயன்படுகிறது. இம்முறையில் தரையினுள் செலுத்தப்படும் பிளாஸ்டிக் துகள்கள் ஒரு நொடிக்கு ஒரு கி.மீ தொலைவு பயணிக்கிறது. இதனை படம்பிடிக்கும் திறன் கொண்ட  ஒரு நொடிக்கு நூறு பிரேம்கள் படமெடுக்கும் புகைப்படக் கருவியை எம்ஐடி, போராடி உருவாக்கியுள்ளது. இதில் லேசர்கதிர்களின் பயன்பாடு, அளவீட்டுக்கு உதவுகிறது. இதன்மூலம் பிளாஸ்டிக் துகள்களின் அளவு, உருவாகும் விதம் ஆகியவற்றை எளிதாக புரிந்துகொண்டு அதனை அகற்றுவதற்கான செயல்பாடுகளை துல்லியமாக உருவாக்க முடியும். 

பல்வேறு நாடுகளுக்கும் புவியின் கீழ்வட்டப்பாதை மூலம் சந்திரன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கோள்களை ஆராய   ஏராளமான செயற்கைக்கோள்கள், விண்கலன்கள் ஆகியவற்றை அனுப்புகின்றனர். அவை செயலிழந்தபிறகு அதனை என்ன செய்வது என யோசிப்பதில்லை. பூமியில் மட்டுமல்ல; விண்வெளியிலும் கழிவுகளை மறுசுழற்சி செய்வது குறித்து யோசிக்கவேண்டிய தேவை உள்ளது.  



 

  

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்