வாசிப்பை நேசிப்போம்!

 



Book, Woman, Hands, Reflecting, Bible, Praying, Read

வாசிப்பை நேசிப்போம்!

தினசரி வாசிப்பது என்பது அவ்வளவு எளிதாக நம் மனதில் படியாது. அதற்கு காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு ஆகிய நேரங்களில் நீங்கள் தனியாக சாப்பிடும்படி நேர்ந்தால் நூல்களை வாசிக்கலாம். நெருக்கடியான வேலைகளுக்கு இடையே பத்து நிமிடங்கள் பிரேக் எடுத்து வாசிப்பதைத் தொடர்ந்தால் விரைவில் நீங்கள் வேகமாக வாசிக்கத் தொடங்கிவிட முடியும். 

2. எங்கு போனாலும் புத்தகங்களை எடுத்துச்செல்லுங்கள். புத்தகம் என்றல்ல கிண்டில் போன்ற இபுக் ரீடர்களை கைவசம் எடுத்துச் செல்லுங்கள். யாரையேனும் சந்திக்க காத்திருக்கும்போது கூட வாசிக்கலாமே!. 

3. புத்தகம் பற்றிய செய்திகளை வழியாக அறிகிறீர்களா? ஜிமெயில் கணக்கு ஒன்றைத் தொடங்கி அச்செய்தியை இம்முகவரிக்கு அனுப்புங்கள். இப்படி அனுப்பி வைத்தால் நீங்கள் அடுத்தடுத்து வாசிப்பதற்கான பட்டியல் தயார். பின்னர் படித்து முடித்த செய்தியையும் இதில் பதிவு செய்யலாம். 

4. முடிந்தளவு டிஜிட்டல் பொருட்களைத் தவிர்த்துவிட்டு படிக்கத் தொடங்குங்கள். அப்போதுதான் எந்த அலைபாய்தலுமின்றி புத்தகங்களை நிதானமாக வாசிக்க முடியும். குழந்தைகள் இருந்தால், அவர்களுடன் விளையாடியபடி வாசிக்கக் கற்றுக்கொடுங்கள். 

5. பழைய புத்தகங்களை விற்கும் கடைகளைத் தேடிப்பிடியுங்கள். அதில் குறைந்த விலைக்கு நிறைய சுவாரசியமான புத்தகங்கள் கிடைக்கும். வாரம்தோறும் நூலகம் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதன்மூலம் உங்கள் வாசிப்பு பழக்கம் வேகம் கொள்ளும். 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்