இடுகைகள்

குடும்பக்கட்டுப்பாடு- சமூகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்கள்தொகை குறைப்பை விரைவுபடுத்தும் அரசு!

படம்
மீண்டும் சிவப்பு முக்கோணம் ! 1952 ஆம் ஆண்டு இந்தியா முதன்முதலில் குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்தை பிரசாரம் செய்தது . ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் , கருத்தடை மாத்திரைகள் , ஆணுறைகள் ஆகியவை இக்காலகட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டன . இதில் கூடுதலாக DMPA, Centchroman Pill (Chhaya) and Progestin pill (PoP) ஆகியவை கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன . தற்போது ஆண்களைவிட (0.63%) பெண்கள் கருத்தடை ஊசிகளை 75.3% பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன . தானாகவே செலுத்தும்படியான  கருத்தடை ஊசிகளை இந்தியாவிற்கு முன்னரே பூடான் , இலங்கை , நேபாளம் , வங்கதேசம் பயன்படுத்தி வெற்றிகண்டுள்ளன . " வரலாற்று சிறப்பான முடிவு இது . தற்போது உலகிலுள்ள 180 நாடுகளைச் சேர்ந்த 4.2 கோடி பெண்கள் கருத்தடை ஊசிகளை பயன்படுத்தி வருகின்றனர் . இதில் தரமேலாண்மை முக்கியம் " என்கிறார் லக்னோவைச் சேர்ந்த மருத்துவர் ரவி ஆனந்த் .