மக்கள்தொகை குறைப்பை விரைவுபடுத்தும் அரசு!
மீண்டும் சிவப்பு
முக்கோணம்!
1952 ஆம்
ஆண்டு இந்தியா முதன்முதலில் குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்தை பிரசாரம் செய்தது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள்,
கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் ஆகியவை இக்காலகட்டத்தில்
மக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் கூடுதலாக DMPA,
Centchroman Pill (Chhaya) and Progestin pill (PoP) ஆகியவை கூடுதலாக
இணைக்கப்பட்டுள்ளன.
தற்போது ஆண்களைவிட(0.63%)
பெண்கள் கருத்தடை ஊசிகளை 75.3% பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு
முடிவுகள் தெரிவிக்கின்றன. தானாகவே செலுத்தும்படியான கருத்தடை ஊசிகளை இந்தியாவிற்கு முன்னரே பூடான்,
இலங்கை, நேபாளம், வங்கதேசம்
பயன்படுத்தி வெற்றிகண்டுள்ளன. "வரலாற்று சிறப்பான முடிவு
இது. தற்போது உலகிலுள்ள 180 நாடுகளைச் சேர்ந்த
4.2 கோடி பெண்கள் கருத்தடை ஊசிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் தரமேலாண்மை முக்கியம்" என்கிறார் லக்னோவைச்
சேர்ந்த மருத்துவர் ரவி ஆனந்த்.