நீண்டகால உடல்வலியை தீர்க்கும் ரகசியம்!



Image result for blood illustration



வலி தீர்க்கும் ரத்தம்!

ரத்தசோதனை மூலம் தீராத வலியை கண்டறியலாம் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நோயெதிர்ப்பு செல்களின் நிறம் மாறுதலை கண்டுபிடித்து வலியைக் கண்டறிவது இம்முறையின் ஐடியா. "வலியைக் குணப்படுத்தும் முறையில் இது புதிய கண்டுபிடிப்பு." என்கிறார் நரம்பியல் வல்லுநர் ஆஸ்திரேலியாவின் ஆராய்ச்சிய கவுன்சில்(அடிலெய்டு பல்கலைக்கழகம்) தலைவரான ஹட்சின்ஸன்.


ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் எனும் முறையில் நோய் எதிர்ப்பு செல்களின் நிறம் மாறுதலின் மூலம் நோயாளியின் வலி பாதிப்பு, தாங்கும் திறன் ஆகியவற்றைக் கண்டறிந்து சிகிச்சை செய்ய முடியும். painH5 எனும் இச்சோதனை தற்போது சோதனையிலுள்ளது. மனிதர்களுக்கு பயன்படும் என்றாலும் விலங்குகளுக்கும் பெருமளவு பயனளிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற வலிநிவாரணி மாநாட்டில் இச்செய்தி வெளியிடப்பட்டது

பிரபலமான இடுகைகள்